Archive for May, 2013

“முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம். விழவிழ எழுவோம்.”  இது அவசியமானதும் தேவையானதுமான முழக்கம் என்கின்றனர் சிலர். “படைக்கலன்கள் மட்டும்தான் மௌனிக்கப்பட்டன போராட்டம் முடியவில்லை. அது வேறுவடிவத்தில் தொடரும்.” இது சரியான நிலைப்பாடுதான் என்கின்றனர் சிலர்.

மாற்றுக் கருத்துக்கள்
“வெளிப்படைத்தன்மை இல்லாமல் எமது போராட்டம் நடந்துவிட்டது. அதனால் அது தோல்வியடைந்து விட்டது.” என்று அர்த்தம் கற்பிக்கின்றனர் சிலர்.  “மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி எமது போராட்டம் நடக்கவில்லை. மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லை” என தத்துவம் பேசுகின்றனர் சிலர்.

முற்போக்கா போகாமல் குறுக்கால போனாங்கள்

“ஒடுக்கப்பட்ட ஐரிஸ் மக்களுடனோ, அடக்கப்பட்ட சிங்களத் தொழிலாளர்களுடனோ, நசுக்கப்பட்ட இந்திய தலித்துக்களுடனோ நாம் கைகோர்த்துப் போராடாமல்

மாற்றானின் கருத்துக்கள்

“பிராந்திய வல்லரசு இந்தியாவை அனுசரித்துப் போகாத படியால்தான் எமது போராட்டம் தோற்றது.  நாம் அந்தத் தவறை உணர்ந்து இனி இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும்” இப்படிப் போதிக்கின்றனர் சிலர். “இதைப்பற்றி ஒரு அருமையான கட்டுரையை நான் எழுதினனான்” என்கிறார் ஒருவர்.  “ஒண்டும் வேண்டாம். இனியும் ஒரு அழிவு வேண்டாம். எல்லாத்தையும் விட்டுட்டு பேசாமல் இருப்பம்” எனச் சலிக்கின்றனர் சிலர்.

புலிக்கொடியை மடிச்சு வையுங்கோடா

இனிப் புலி என்ற கதையே வேண்டாம். உந்தப் புலிக்கொடியை இனி மடிச்சு வையுங்கோ. நாங்கள் ஒரு நியாயமான போராட்டத்தை மக்களாட்சி (ஜனநாயகம்) முறைப்படி முன்னெடுத்து பன்னாட்டு மட்டத்தில் எமது போராட்டத்தை எடுத்துச் சென்று நாம் எமது சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்க வேண்டும்” என வீராப்புப் பேசுகின்றனர் சிலர்.

ஒன்றாக இணைவோம்
“எல்லா அமைப்புக்களையும் ஒன்றாக இணைத்து இனி ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். யாரையும் துரோகி என்று சொல்லக் கூடாது” என்றும் சிலர் சொல்கின்றனர்.

காலம் மாறக் கருத்து மாறுகிறது.
“2007இல் எங்களுக்கு ஒண்டும் வேண்டாம் எங்களை இப்படியே நிம்மதியா இருக்க விட்டால் காணும்” என்றவர்கள் 2009இல் எல்லாத்தையும் தொலைச்சிட்டு எங்களை நடுத்தெருவில் விட்டிட்டாங்கள்” என்றார்கள். இன்று “அவங்கள் இருந்திருந்தால் இப்படியேல்லாம் நடக்குமா?” என்கிறார்கள்.

பன்னாட்டு மயப்படுத்தி விட்டோம்
எமது போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையால் விசாரிக்கப்பட்டதுடன் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன; எமது போராட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன; தமிழகத்தில் மாணவர்கள் பொங்கி எழுந்து விட்டனர்; பொதுநலவாய நாடுகள் சபையில் முப்பது நாடுகள் இலங்கையில் அதன் உச்சி மாநாடு நடப்பதை விரும்பவில்லை; உலகின் எல்லா முன்னணி ஊடகங்களும் எமது பிரச்சனையைப் பற்றி குறிப்பிடுகின்றன. மொத்தத்தில் எமது பிரச்சனை பன்னாட்டு மட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது இப்படி ஆர்ப்படிக்கின்றனர் சிலர்.

9/11இன் பின்னர் மோசமான உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம்.
உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனம் 1991 சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மோசமாகியது. அதன் பின்னர் உலகத்தின் காவற்துறை அதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்துக் கொண்டது. 2001 செப்டபர் 11-ம் திகதி நடந்த அமெரிக்க நியூயோர்க் நகர இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா உலக ஒழுங்கு எனப்படும் ஒழுங்கீனத்தை மேலும் மோசமாக்கியது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது மட்டும் போர்ப் பிரகடனம் செய்யலாம் என இருந்த நிலமையை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களான 1368உம் 1373உம் தனிப்பட்டவர்களால் நடாத்தப்படும் அமைப்புக்கள் மீதும் ஒரு நாடு போர்ப்பிரகடனம் செய்யலாம் என மாற்றியது. எல்லை தாண்டிச் சென்று கொல்லுதல், ஆட்கடத்தல், காணமற் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான விசாரணை, சட்டத்திற்குப் புறம்பான சிறை, சட்டத்திற்குப் புறம்பான சித்திரவதை ஒழுங்காக நடைபெற்றது. இதைப் பாவித்து அமெரிக்கா உலகப் பந்தையே ஒரு போர்க்களமாக்கியது. இதை தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக வஞ்சகமாகத் திசைதிருப்ப கொழும்பிற்கு புது டில்லி உதவியது. இந்தியாவின் எல்லை தாண்டிய பேரினவாதமும் இலங்கையின் எல்லை மீறிய அரச பயங்கரவாதமும் இணைந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்கின. 1987இல் முன் கதவால் வந்து சாதிக்க முடியாததை 2008இல் பின்கதவால் வந்த இருபதினாயிரம் கொலை வெறிப்படைகள் சாதித்தன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்
உலக அரங்கில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றிச் சொல்லுபவர்கள் ஊடகங்களாக இருக்கட்டும் ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கை அரச படைகள் போரின் போது செய்த அத்து மீறல்கள் தொடர்பாக உரையாற்றும் ஒரு ஐரோப்பிய நாட்டு இராசதந்திரியாகட்டும் ஐநா பொதுச் செயலராகட்டும் அமெரிக்க அரசத்துறைச் செயலராகட்டும் மோசமான பயங்கரவாதத்தை இலங்கை அரசு ஒழித்துக் கட்டியது என்று சொல்லத் தவறுவதில்லை. 2009இற்கு முன்னர் எமது போராட்டத்தைப் பயங்கரவாதம் எனச் சொன்னதிலும் பார்க்க 2009இன் பின்னர் எமது போராட்டத்தை பயங்கரவாதம் என அதிகமாக உரத்துச் சொல்கின்றனர் பன்னாட்டு சமூகம் எனத் தம்மை சொல்லிக் கொள்பவர்கள். இலங்கை அரசுக்கு தாம் கொடுத்த ஆதரவு பிழை என அவர்கள் உணர்ந்து கொண்டுதான் 2009இன் பின்னர் அவர்கள் எமது போராட்டத்தை அதிக உரப்புடன் பயங்கரவாதம் என்கின்றனர். எமது போராட்டத்திற்கு பானாட்டரங்கில் நீதி கிடைக்க வேண்டுமென நாம் கருதினால்; நமது பிரச்சனைக்கு பன்னாட்டரங்கில் தீர்வு கிடைக்க வேண்டுமென நாம் கருதினால் எமது போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் அல்ல ஓர் எல்லை மீறிய பயங்கரவாத அரசிற்கும் ஒர் எல்லை தாண்டிய  பேரினவாத அரசிற்கும் எதிரான நியாயமான போராட்டம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு எமது தலையில் உள்ளது.

1978இல் அவ்ரோ விமானத்தில்  குண்டு வைத்துத் தகர்த்தது பயங்கரவாதமல்ல கழுத்து நெருக்கப்பட்ட ஓர் இனம் இக்கட்டான நிலையில் தன்னைப் பாதுகாக்க செய்த ஒரு நகர்வு மட்டுமே என்பதை நாம் மற்றவர்க்கு உணர்த்த வேண்டும். பயணிகள் இறங்கிப் போன பின்னர் வெடிக்கும் படி குண்டு வெடிக்கும் நேரத்தை தயார்படுத்தி வைத்தமை எமது மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டுகிறது என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். எமது பல நகர்வுகள் உலகத்தின்

அளவுகோலில் பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அழிவின் விழிம்பில் நின்று கொண்டு நாம் செய்த தவிர்க்க முடியாத நகர்வுகள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். எமக்கு எதிராகக் குற்றம் புரிந்த பன்னாட்டுச் சமூகத்தின் குற்றத்தை நாம் நிரூபிக்காமல் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் நாம் நின்று செயற்பட்டால் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் சில அத்து மீறல்கள் நடைபெற்றன அவை தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையும் ஒரு (வரைவிலக்கணமில்லா) நல்லிணக்கமும் தேவை என்ற ஒரு சிறு புள்ளிக்குள் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவை அடக்கப்பட்டுவிடும். அமெரிக்காவும் இந்தியாவும் எம்மை ஏமாற்றத் தயார். நாம் ஏமாறத் தயாரா?

ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் தமது விமானம் தாங்கிக் கப்பலிலும் ஆளில்லாப் போர் விமானங்களை இணைத்துள்ளன. இவை மற்றப் போர்விமானங்களை போல் பெரியவனவையாகவும் கதுவிகளுக்கு(Radar) புலப்படாத stealth தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கின்

அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ பல நாடுகளில் இரகசியமாக அமெரிக்கச் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஆளில்லாப் போர்விமானத் தளங்களை வைத்துக் கொண்டு பல நாடுகளை வேவு பார்த்தல், அமெரிக்காவிற்கு எதிரான தீவிரவாதிகளைக் கொல்லுதல் போன்ற பல நடவடிக்கைகளைச் செய்து வருகிறது. பாக்கிஸ்த்தானிற்குள் அத்து மீறி நுழைந்து சிஐஏயினதும் அமெரிக்கப்படைத்துறையினரினதும் ஆளில்லாப் போர் விமானங்கள் பல தாக்குதல்களை மேற்கொண்டன. இவற்றில் பாக்கிஸ்த்தான் படைவீரர்களும் கொல்லப்பட்டதுண்டு. 2013  மே மாதம் பாக்கிஸ்த்தானில் நடந்த பொதுத் தேர்தலில் அமெரிக்க ஆளில்லாப் போர்விமானங்களின் அத்து மீறல்கள் ஒரு முக்கிய விவாதமாகக் காணப்பட்டன. 

மெரிக்காவின் Marylandஇல் உள்Patuxent தியில் 14/05/2013-ம் திகதி USS George என்னும் கப்லில் ருந்து அமெரிக்கக் கடற்படையினர் முன்னோட்டம் விட்டுப்பார்த்த X-47B ரக ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்கக் கடற்படைக்குஉலகின் எப்பாகத்திலும் ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல் செய்யக் கூடிய வல்லமையைக் கொடுத்துள்ளது.  X-47B வழமையான Predator எனப்படும் தாக்குதல் ஆளில்லாப் போர் விமானங்களிலும் பார்க்க மூன்று மடங்கு பெரியவை. 


ஆளே தேவையில்ல விமானம்
X-47B ளில்லாப் போர் விமானங்கள் வழமையான ஆளில்லாப் போர் விமானங்களைப் போல் தொலைக் கட்டுப்பாடு செய்யவும் ஒரு ஆள் இதற்குத் தேவைப்படாது. இது தனக்குத் தேவையான சமிக்ஞைகளை கடற்படைக் கப்பலில் இருக்கும் கணனிகளில் இருந்து பெற்றுக் கொள்ளும். இதன் இன்னும் ஒரு முக்கிய அம்சம் விமானிகள் ஓட்டும் போர் விமானங்களிலும் பார்க்க இவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறன் பெற்றுள்ளன. X-47B ளில்லாப் போர் விமானங்கள் 19mஇறக்கை மும், 6,350kg எடையும் கொண்ன. மையாதாக்குதல் விமாங்கள் 15m அமும் 499kg எடையும் உடைன. ற்றின் இறக்கைகள் டிக்கக் கூடிவை. இவை விமானம் தாங்கிக் கப்லில் நிறுத்தி வைக்கும் இத்தேவையைக் குறைக்கிது. X-47B ளில்லாப் போர் விமானங்கள் 40,000டிகள் (12,192 meters)  உத்தில் றக்கக் கூடின. அத்துடன் 2,100 nautical miles (3,890 kilometers) தூரம் றக்கக்கூடின. மையான  Predator விமாங்கல் 675 nautical miles வீச்சைமட்டுமே உடைன. அத்துடன் வானிலே வைத்து எரிபொருள் மீள்நிரப்டக் கூடிவை என்தால் அதன் வீச்சுத் தூரம் மேலும் அதிமாகும். 

தேசிய எல்லைளைத் தாண்டி ங்வாதம் செயயும் அமெரிக்காவின் வல்மை அதிரித்துக் கொண்டே போகிது. 

கடவுச்சொற்களும் பின் எனப்படும் தன் அடையாள இலக்கங்களும் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்று ஆகிவிட்டது. அவற்றை நினைவில் வைத்திருப்பதற்கும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கும் படும்பாடு நாய் படாப்பாடு. உலகிலேயே அதிகப் பாவிக்கப்படும் கடவுச்சொற்கள்களின் தரவரிசைப்  பட்டியல் இது:

2011இல் இருந்த நிலையில் இருந்து  ஏற்பட்ட மாற்றம் அடைப்புக்குறிக்குள்

அமெரிக்க நகரான லஸ் வேகஸில் நடந்த தகவ்ற்தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றிய PayPalஇல் தலமை பாதுகாப்பு அதிகாரி Michael Barrett  கடவுச்சொற்கள் முட்வடையும் காலம் நெருங்கி விட்டது என்றார். இதற்கான முன்னோடியாக ஆப்பிள் நிறுவனம் திகழப்போகிறது என்றார். ஆப்பிளின் ஐபோன் – 6 இல் பெருவிரலடையாளத்தை இனங்காணும் தொழில்நுட்பம் இணைக்கப்படவிருக்கிறது என்று செய்தி அடிபடுகிறது.

Fast IdentityOnline (FIDO) என்னும்  மென்பொருளாலும் வன்பொருளாலும் இனங்காணும் முறைமை ஒன்று ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது பின், கடவுச்சொல், பெருவிரலடையாளம் ஆகிய மூன்றும் இணைந்ததாக இருக்கிறது.

ஆனால் இது கடவுச்சொல், பின், பெருவிரலடையாளம் ஆகிய மூன்றும் தேவைப்படுவதால் எமது நிலைமையை இன்னும் மோசமாக்குமா?

உலகிலேயே மோசமான தீவிரவாதம், அடங்காத மதவாதம், பிரிவினைவாதம், இனவாதம், படைத்துறை ஆதிக்கம், நலிவடைந்த பொருளாதாரம், அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்துமீறல்கள் ஆகிய பிரச்சனைக்குள் அகப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானில் முதல் தடவையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அதன் படைத்துறையினரால் கவிழ்க்கப்படாமல் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இரத்தக் களரிக்கு மத்தியில் தேர்தலை நடாத்தி வேறு ஓர் ஆட்சியாளரைத் தெரிந்து எடுத்துள்ளது.

அதிபர் அசிஃப் அல் சர்தாரி – Mr. Ten Percent
2008-ம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் பதவிக்கு வந்த பாக்கிஸ்தான் அதிபர் அசிஃப் அல் சர்தாரி பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் மகளும் முன்னாள் பிரதம மந்திரியுமான பெனாஸீர் பூட்டோவைத் திருமணம் செய்ததன் மூலம் அரசியலில் பிரபலமானவர். 1996இல் ஊழலுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர். 1990இல் பாராளமன்றத்திற்கும் 1997இல் மூதவைக்கும் தெரிவு செய்யப்பட்டவர். 2008இல் அமெரிக்க துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் சேரா பெயினுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னாள் பாக்கிஸ்தானிய அதிபர் பெர்வஸ் முசரஃப்பை பதவியில் இருந்து விரட்டியவர் அசிஃப் அல் சர்தாரி. முன்னள் அதிபர் முசரஃப் அதிபர்  சல்தாரியை ‘Asif Zardari is a criminal and a fraud. He’ll do anything to save himself. He’s not a patriot and he’s got no love for Pakistan. He’s a third-rater’ என்று விமர்சித்தார். 2003இல் சுவிஸ் நீதிமன்றில் நிதி மோசடிக்காக ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $50,000 அபராதமும் விதிக்கப்பட்டவர் அசிஃப் அல் சர்தாரி. இதில் இருந்து அசிஃப் அல் சர்தாரியை முசரப்பே விடுவித்தார். சர்தாரியை அவரது ஊழலுக்காக Mr. Ten Percent என்று அழைப்பர். சர்தாரிக்கு எதிராக நகைச்சுவைகள் கிண்டல்களைப் பகிரங்கப் படுத்தினால் 14 மாதச் சிறைத்தண்டனைக்குள்ளாகலாம். சர்தாரிக்கு பணம் கொடுக்க வேண்டிய ஒருவரிடம் பணத்தை வசூலிப்பதற்கக அவரது அடியாட்கள் அவரது காலில் ரிமோட் கொன்ரூலில் வெடிக்கக் கூடிய குண்டைப் பொருத்தி விட்டு அவரை அவரது வங்கிக்குச் சென்று பணம் எடுத்துத் தராவிடில் அதை வெடிக்க வைப்போம் என மிரட்டிப் பணத்தைப் பெற்றனர்.

விழுந்து எழும்பிய இம்ரான் கான்
முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான் கான் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையிலலிருந்து விழுந்து தலையில் பலமாக அடிபட்டார். இதனால் அவருக்கு அனுதாப ஆதரவு கூடியது. தலிபான்களுக்கு உகந்தவரானரும் அமெரிக்க ஆளில்லா விமானத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிப்பவருமான இம்ரான் கான் அதிக இளைஞர்களைக் கவர்ந்தார். ஆனால் கடந்த தேர்தலில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாத இவரது கட்சி இம்முறை கணிசமான வெற்றி பெற்று பூட்டோ குடும்பத்தினரின் பாக்கிஸ்த்தான் மக்கள் கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டது.

தேர்தலில் வெற்றி பெற்ற ஷரிஃப் நவாஸ்
ஏற்கனவே இரண்டு தடவை பாக்கிஸ்த்தானின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்க்கப்பட்டு படைத்துறையினரால் பதவில் இருந்து அகற்றப்பட்ட ஷரிஃப் நவாஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். அவரது வலதுசாரிக் கட்சியான பாக்கிஸ்த்தான் முசுலிம் லீக் – நவாஸ்{Pakistan Muslim League-Nawaz (PML-N)} தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலிலின் போது ஷரிஃப் நவாஸ் தலிபானகளுக்கு எதிராகவோ அமெரிக்க ஆளில்லா விமானங்களின் அத்து மீறல்கள் தொடர்பாகவோ கடுமையான தொனியில் கருத்துத் தெரிவிக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம்
கூட்டாட்சி அரசியல் அமைப்பின் க்கீழ் ஆளப்படும் பாக்கிஸ்த்தானில் நான்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேலும் ஒரு பிரதேசம் மைய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. பஞ்சாப் மாநிலம் பாக்கிஸ்த்தானின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கு மேல் கொண்டுள்ளது. இந்த மாநிலம் ஷரிஃப் நவாஸின் கட்சியின் ஆட்சியின் கீழ் அவரது உடன் பிறப்பை முதலமைச்சராகக்  கொண்டு ஆளப்படுகிறது. அங்கு பல முதலீடுகள் செய்யப்பட்டதுடன் தீவிரவாதத் தாக்குதல்களும் குறைவடைந்துள்ளது நவாஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. ஆனால் நவாஸ் பாக்கிஸ்த்தனியத் தீவிரவாத இயக்கமான தலிபான்களுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டமையால் இது சாத்தியமானது எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மொத்த 18 கோடி மக்கள் தொகையில் ஒன்றரைக் கோடி தீவிரவாதிகளைக் கொண்ட நாட்டில் இதைத் தவிர வேறு வழி இருக்கிறதா? தலிபானின் கொள்கைப்படி மேற்கத்தைய பாணி மக்களாட்சி இசுலாமிய மார்க்கத்திற்கு விரோதமானது. தேர்தலின் போது பல வேட்பாளர்கள் தலிபான் இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தேர்தலின் போது பல குண்டு வெடிப்புக்கள், கொலைகள், ஆட்கடத்தல்கள் நடைபெற்றன.

இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்டுவாரா நவாஸ்?

இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் அண்மைக்காலங்களாக பெரும் எல்லை முறுகல்கள் நடந்து வருகின்றன. எல்லாவற்றிலும் பெரும் முறுகலாக இருப்பது 2008இல் பாக்கிஸ்த்தானில் இருந்து சென்ற லக்ஸர் இ தொய்பா அமைப்பினர்களாகக் கருதப்படுவோர் மும்பை நகரில் நடாத்திய தாக்குதலே. நவாஸ் தான் ஆட்சிக்கு வந்தால் மும்பைத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடாத்துவேன் என்றும் பக்கிஸ்த்தானிய மண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் செயற்பட அனுமதிக்க மாட்டேன் என்றும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். நவாஸ் இந்தியாவுடனும் ஆப்கானிஸ்த்தானுடனும், அமெரிக்காவுடனும் நட்புறவை விரும்புவதாகத் தெரித்துள்ளார். 1999-ம் ஆண்டு இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தனிற்கும் இடையில் நடந்த கார்கில் போரைத் தொடர்ந்து அப்போது தலைமை அமைச்சராக இருந்த நவாஸை அப்போதைய தளபதி பர்வேஸ் முஷாரஃப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார். பாக்கிஸ்த்தானியப் படையினர் எல்லை தாண்டி கார்கிலில் நிலைகொண்ட செய்தி அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் தொலைபேசியில் சொல்லித்தான் தெரியும் எனப்படுகிறது. இதைத் தொடர்ந்து எழுந்த நாவஸிற்கும் முசஃப் முறுகலில் நவாஸைத் தூக்கி எறிந்தார். படைத்துறையினருடன் நல்ல உறவைக் கொண்டிராத நவாஸால் பாக்கிஸ்த்தானின் வெளியுறவுக் கொள்கையில் அதிக செல்வாக்குத் செலுத்தும் படைத்துறையினரின் சம்மதத்தை பெற்று இந்தியாவிற்கு நட்புக்கரம் நீட்ட முடியுமா? ஆனால் நவாஸின் வெற்றிக்கு உதவி வழங்கிய பாக்கிஸ்த்தான் முதலாளிகள் இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்துவதன் மூலம் தமது இலாபத்தைப் பெருக்கலாம் என உறுதியாக நம்புகின்றனர். இந்தியாவில் பல பத்திரிகைகளும் பெரு வர்த்தகர்களும் நவாஸின் வெற்றியையிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளன. இந்திய அரசு நவாஸை இந்தியா வரும்படி விடுத்த அழைப்பை பாராதிய ஜனதாக் கட்சி அவசரப்பட்டு செய்யத வேலை என விமர்ச்சித்துள்ளது. நவாஸ் தனது பதவியேற்பு வைபவத்திற்கு இந்தியத் தலைமை அமைச்சரை தனது பதைவியேற்பு வைபவத்திற்கு அழைத்துள்ளார்.

அமெரிக்காவும் நவாஸும்
பின் லாடனுன் தனது நட்பைப் பெருமையாகச் சொல்லும் ஷரிஃப் நவாஸுடன் அமெரிக்காவின் உறவு எப்படி அமையப் போகிறது? 2014இல் ஆப்கானிஸ்த்தனில் இருந்து வெளியேறவிருக்கும் அமெரிக்காவிற்கு தலிபானுடன் இரகசிய ஒப்பந்தம் செய்யும் நவாஸின் ஆட்சியை எப்படிக் கையாளப் போகிறார்கள்? தீவிரவாதத்தைத் தேர்தலின் போது கடுமையாகக் கண்டித்த நவாஸ் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்தையும் பெயர் சொல்லிக் கண்டிக்கவில்லை. தலிபானுடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் எனச் சொல்லும் நவாஸும் தலிபானை ஒழித்துக் கட்டத் துடிக்கும் அமெரிக்காவும் எப்படி ஒன்றாகச் செயற்படப் போகிறார்கள்? இவை நவாஸின் வெற்றிக்குப் பின்னால் எழுந்துள்ள கேள்விகள். Sipah-e-Sahaba Pakistan என்னும் தடைசெய்யப்பட்ட இயக்கத்துடன் நவாஸின் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. பதினெட்டுக் கோடி மக்கள் தொகையில் பத்துக் கோடியினர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள். இது அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு நல்ல சந்தை வாய்ப்பாகும். பிரிக்ஸ்(BRICS) நாடுகளுக்கு வெளியில் இது ஒரு பெரிய சந்தை வாய்ப்பாகும். வளர்ந்து வரும் சீன ஆதிக்கத்தை சமப்படுத்த அமெரிக்காவிற்கு பாக்கிஸ்த்தானுடனான உறவு மிக முக்கியமாகும். தனியார் மயமாக்குதல் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள உருக்குத் தொழிற்சாலை முதலாளி நவாஸ் அமெரிக்க முதலாளிகளுக்கு உகந்தவராக இருக்கலாம்.

நவாஸின் பெரும் சவாலாக பொருளாதாரம்.

மிக மோசமான மின்சாரத் தட்டுப்பாடு, பணவீக்கம், அந்நியச் செலவாணித் தட்டுப்பாடு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாக்கிஸ்த்தானியப் பொருளாதாரத்திற்கு நவாஸ் புத்துயிர் அளிப்பார் என முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். நவாஸின் வெற்றியைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தனியப் பங்குச் சந்தைச் சுட்டெண் அதிகரிப்பு அடைந்துள்ளது. நவாஸின் கொள்கைகளான தாராளமயமாக்கலும் தனியார் மயமாக்கலும் முதலீட்டாளர்களுக்கு உகந்தவை.

மிகப் பெரும் சவாலாக படைத்துறை

நவாஸ் எதிர் நோக்கும் சவால்கல் எல்லாவற்றிலும் மோசமான சவால் பாக்கிஸ்த்தானின் படைத்துறையைச் சமாளிப்பதே. பாக்கிஸ்த்தனின் வெளியுறவுக் கொள்கையிலும் பாதுகாப்புக் கொள்கையிலும் படைத்துறையினர் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றனர். பாக்கிஸ்த்தான் சுதந்திரம் அடைந்த பின்னரான காலத்தில் அரைப்பகுதி அங்கு படைத்துறையினரின் ஆட்சியே நிலவியது.

தேறுமா பாக்கிஸ்த்தான்
இந்தத் தேர்தல் பாக்கிஸ்த்தானைப் பொறுத்தவரை ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. அது பாக்கிஸ்த்தானை எந்த வழியில் இட்டுச் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விரைவில் நவாஸ் வாஷிங்டன் செல்லலாம் அல்லது அமெரிக்க அரச செயலர் ஜோன் கெரி பாக்கிஸ்த்தான செல்லலாம் அல்லது இரண்டும் நடக்கலாம். இது நிச்சமாக நடக்கும். அதன் பின்னர் பாக்கிஸ்த்தானிற்கான நிதி உதவியை அமெரிக்கா அதிகரிக்காலம். ஆனால் பாக்கிஸ்த்தான் தேறுவதாயின் தலிபான்கள் அடக்கப்பட வேண்டும் அல்லது கொள்கை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். சஷ்டியப்பப் பூர்த்தி செய்த பாக்கிஸ்த்தான் இன்னும் வயசுக்கு வரவில்லை. வெறும் அணுக்குண்டு மட்டும் ஒரு நாட்டின் பலத்தை தீர்மானிக்காது.

தமக்கெனத் தலைக்கொரு பிடி அரிசியடி – ஆங்கு
இரந்து வருவோர்க்கு ஒரு படிஅரிசியடி
தேடிவருவோர்க்கு மேலும் ஒரு படி அரிசியடி
வேகுமடி வன்னிமண் உலைகளிலடி
அவ்விருந்தோம்பல் புகழ் பாடிக் கும்மியடி
நல்லோர் என்றும் கெட்டதில்லை எனச் சொல்லியடி

அணையாதடி வன்னிமண்ணின் அடுப்படி நெருப்படி
குறையாதடி அவர்தம் அன்புதானடி குன்றாதடி அவர் வளமடி
வந்தோர் பசி தீர்ப்பாரடி வருவார் யாரெனப் பார்ப்பாரடி
ஈழத்து அட்சய பாத்திரமடி அந்த வன்னி வள நிலமடி
குன்றாத அவரன்பை பாடிக் கும்மியடி
நன்றாய் மீண்டும் அவர்  வாழ வேண்டியடி

முகிலடிதொடு மலையிலா ஊரடி – ஆனலும்
வற்றாத நீர் வளமடி சளையாத நெஞ்சத்து உரமடி -எதிரிக்கு
வளையா வீர மனமடி கயவர்க்கு வணங்கா மண்ணடி – அது
வன்னிமறவர் தம் மண்ணடி எம் ஈழத்தாயின் இதயமடி – அந்த
வன்னிமண் வீரம் பாடிப் பாடிக் கும்மியடி – அது
மீண்டும் வீறு கொண்டு எழும் எனச் சொல்லியடி

சிதறிய சிறுவர்தம் உடல்களடி கதறிய கன்னியர்தம் குரல்களடி
கருவிலே கருகிய உயிர்களடி பதறிய தமிழினத்து கண்ணீரடி – யாவும்
முளைக்கும் விதைகளாகுமடி வீரம் மீண்டும் தளைக்குமடி
அடங்காப்பற்று நிலமடி அந்த வன்னிமண் வினை தீர்க்குமடி
நாளை வீறு கொண்டு எழுமெனச் சொல்லியடி
வன்னி வீரர் காலைப் போற்றிக் கும்மியடி

ஐம்பது ஆண்டுகளாக அவசரகாலச் சட்டைத்தின் பிடியில் இருக்கும் சிரிய நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஆரம்பித்த பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரிய தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.

கட்டார் நாட்டில் உருவாக்கப்பட்ட சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பை (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) வளைகுடா கூட்டுறவுச் சபை என்னும் வளைகுடாவைச் சேர்ந்த நாடுகளின் கூட்டமைப்பும் அரபுநாடுகள் சபையும் அங்கீகரித்தன.

சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி………..இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன. இவற்றில் சுதந்திர சிரியப்படை ஓர் ஐக்கிய அமெரிக்காவை சார்ந்த அமைப்பாகவும் ஜபத் அல் நஷ்ரா ஓர் அல் கெய்தாவைச் சார்ந்த அமைப்பாகவும் இருக்கின்றன. இதுவே சிரிய விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றன.

அமெரிக்காவின் தலையிடாக் கொள்கை – Pentagon’s hands-off approach
ஐக்கிய அமெரிக்கா அசாத்திற்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் சிரியாவில் நேரடியாக தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டுடனும் இதுவரை இருந்தது. இதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை பெண்டகனின் தலையிடா அணுகுமுறை (Pentagon’s hands-off approach) என்பர். அமெரிக்கவின் இந்த தலையிடாக் கொள்கை அதன் நட்பு நாடுகளான துருக்கி, சவுதி அரேபியா, கட்டார், ஜோர்தான் ஆகிய நாடுகளை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளன.

பேராபத்தும் பேரழிவும்
சிரியப் போரில் இதுவரை எழுபதினாயிரத்திற்கு மேற்பட்டோர் இறந்து விட்டனர். பல இலட்சக் கணக்கானோர் இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். சிரிய உள்நாட்டுப் போர் இன்னும் தீவிரமடையும் நிலையில் சிரியா யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட கட்டுப்பாடில்லாத பல குழுக்கள் சிரியாவில் சிரியாவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் ஒரு நிலை உருவாகும் போதும்; சிரியாவில் இருக்கும் தனது கடற்படைத் தளத்தை இரசியா எப்படிக் காப்பாற்றப் போகிறது என்ற கேள்வி எழும் போதும்; இஸ்ரேல் ஹிஸ்புல்லா போராளிக் குழுக்களிடம் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்க்லன்கள் போகாம தடுக்க முயலும் போதும்; ஈரான் தனது கடைசி நட்பு ஆட்சியாளர் கவிழாமல் பாதுகாக்க முற்படும் போதும்; வலுமிக்க அரச படையின் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களை யார் எப்படிப் பாவிக்கப் போகிறார்கள் என்ற ஆபத்தான நிலை உருவாகும் போதும் மத்திய கிழக்கில் பெரும் நெருக்கடி உருவாகும். சிரியாவிற்கு அண்மையாக உள்ள பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டு உலக எரிபொருள் விநியோகமும் தடைப்படலாம்.

என்ன செய்வது?
அமெரிக்கப்பாதுகாப்புத் துறைச் செயலர் ஹஜலிடம் சிரிய நிலைமை பற்றிக் குறிப்பிட்ட ஓர் அமெரிக்க இராசதந்திரி “Everybody’s scared. And nobody knows what the hell we are going to do there.”. சிரியாவில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி எல்லோரும் அஞ்சுகிறார்கள். ஆனால் ஒருவருக்கும் என்னத்தைச் செய்து தொலைப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள். சிரிய நிலைமை பற்றி எழுதிய அமெரிக்காவின் நிதித் துறை ஊடகமான த் வால் ஸ்-ரீட் ஜேர்ணல் Pentagon Plans for the Worst in Syria  பெனடகன் மோசமான சிரிய நிலைக்குத் தயாராகிறது எனத் தனது செய்திக்கு தலைப்பிட்டுள்ளது.

 ஜோர்தானில் மேலும் அமெரிக்கப்படையினர்.
சிரியக் கிளர்ச்சி ஜோர்தானில் பிரச்சனைகளை கிளறாமல் இருக்க அங்கு ஒரு தடைப் பிரதேசத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது. விரைவில் அமெரிக்கப் படையினர் ஜோர்தானில் தரையிறங்கலாம். ஏற்கனவே ஜோர்தானில் அமெரிக்கப்படையின் வேதியியல் படைக்கலன் நிபுணர்கள் நிலை கொண்டுள்ளனர். எகிப்து சிரியப் பிராந்தியத் திடத்தன்மையை பாதுகாக்க மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் நிபந்தனைக்கு உட்பட்டும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இருதலைக் கொள்ளி எறும்பாக அமெரிக்கா
சிரிய உள்நாட்டுப் போரைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கு இரு பெரும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றன. சிரிய ஆட்சியாளரின் வீழ்ச்சி பிராந்திய சமநிலையையும் திடநிலையையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் அங்கு படைரீதியாகத் தலையிட்டு முடிவை தனக்கு சாதகமாக்க வேண்டும் அல்லது தனக்கு ஆதரவான குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கி தனக்கு சாதகமான நிலையை உருவாக்க வேண்டும். அமெரிக்கா படைத்துறை ரீதியாக எந்த ஒரு நாட்டிலும் தலையிடுவதை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. அதன் பொருளாதார நிலையும் அதற்கு உகந்ததாக இல்லை. அமெரிகா தனக்குச் சாதகமான கிளர்ச்சிக் குழுக்களுக்கு படைக்கலன்கள் வழங்கினால் அது அல் கெய்தாவின் கைகளிற்குப் போய்ச் சேரும் என அஞ்சுகிறது. இதை உறுதி செய்யும் முகமாக அமெரிக்க அதரவு கிளர்ச்சிக் குழுவான சுதந்திர சிரியப்படையில் இருந்து பல போராளிகள் அல் கெய்தா ஆதரவுப் போராளிக் குழுவான ஜபத் அல் நஷ்ராவிற்கு மாறியுள்ளனர். இது அமெரிக்காவிற்குப் பெரும் தலையிடி கொடுக்கும் செய்தியானது. இன்னும் ஒரு சங்கடமான நிலைமை அமெரிக்காவில் ஜோர்தானில் ஏற்பட்டுள்ளது. ஜோர்தானை சிரியக் கிளர்ச்சி பாதிக்காமல் இருக்க அங்கு அமெரிக்கப்படைகள் நிலை கொள்வது அவசியம். ஆனால் அதிக அளவில் அமெரிக்க்பப்டைகள் ஜோர்தானில் நிலை கொண்டால் அது அங்கு இசுலாமியத் தீவிரவாதம் தலை தூக்க வழிவகுக்கும். எமது மண்ணில் இசுலாமிய விரோத அமெரிக்கப்படைகளா என்று ஜோர்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இசுலாமிய தீவிர வாதம் எழும்பலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது.

பணமும் பலமும் மிக்க ஜபத் அல் நஷ்ரா
அல் கெய்தா ஆதரவு இயக்கமான ஜபத் அல் நஷ்ராவிடம் நிறையப் பணமும் சிறந்த படைக்கலங்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் அதன் போராளிகள் இசுலாமிய மதப் பற்றால் உந்தப்பட்டு மிகச் சிறப்பாக போர் புரிகின்றனர். பல துணிச்சல் மிக்க தாக்குதல்களையும் தற்கொடைத் தாக்குதல்களையும் அவர்கள் செய்து வருகின்றனர். இவர்களின் தாக்குதல் அசாத்திற்கு எதிரான கிளர்ச்சியில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

மஹிந்த ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆலோசனை சொல்ல என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. இதுவரை அவர்களின் பல வெற்றிகளுக்கு அந்த ஆலோசனை சொல்லும் கூட்டம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஆனால் புவிசார் கேந்திரோபாயம் (Geo-strategic) தொடர்பாகவும் அதன் நீண்டகால அடிப்படையிலான மாற்றம் தொடர்பாகவும் ஆலோசனை சொல்வதென்பது கடினமான விடயம் என்பதை ராஜபக்ச சகோதரர்களோ அவரது ஆலோசகர்களோ உணர்ந்திருக்க வில்லை.

போர் முடிந்த பின்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுடன் கூட்டறிக்கை ஒன்றை விட்ட மஹிந்த அந்த அறிக்கையில் இலங்கையில் நடந்த போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையை மேற்கொள்வதாகவும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என்றார். பின்னர் மஹிந்த ராஜபக்ச தன்னைச் சந்திக்க வருபவர்களிடமும் தான் செல்லுமிடங்களிலும் பொறுப்புக் கூறல் தொடர்பான நம்பகரமான விசாரணை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணல் பற்றி வாக்குறுதி அளிப்பதற்கு மஹிந்த ராஜ்பக்ச தயங்குவதில்லை. சில சமயங்களில் 13இற்கு மேலே செல்வேன ன்றும் கூறியதுண்டு. பின்னர் தனது அரசியல் கூட்டங்களில் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இலங்கையில் போர்க்குற்றம் ஏதுவும் நடக்கவில்லை, நான் எனது எந்த ஒரு படைவீரனையும் தண்டிக்க மாட்டேன் எனச் சூளுரைப்பதுமுண்டு.

பல மனித உரிமை அமைப்புக்களினதும் மேற்கு நாடுகளினதும் வேண்டுகோள்களையும் அழுத்தங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழத்தின் தீர்மானங்களையும் இலங்கை இதுவரை வெற்றிகரமாகப் புறந்தள்ளி வருகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து போகக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் மஹிந்த அரசுக்கு எதிராக கவனமாக காய்களை நகர்த்துகின்றன. இந்தச் சீனத் துருப்புச் சீட்டை ராஜபக்சேக்கள் தந்திரமாகக் கையாண்டு இந்தியாவை தமது இராசதந்திரக் கைக்கூலியாகவே மாற்றி விட்டனர். ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களின் கடுமையை ராஜபக்சேக்கள் இந்தியாவின் மூலமாக குறைத்துவிட்டனர்.

எத்தனை நாள் ராஜபக்சேக்களால் இந்த சீனப் பூச்சாண்டித் துருப்புச் சீட்டை வைத்து விளையாட முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் முதல் நினைவிற்கு வருவது 17-05-2011-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிரான தீர்மானம் – 1973தான். இத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டபோது எதிர்த்து வாக்களிப்பவர்கள் வாக்களிக்கலான் என அவைத் தலைவர் சொன்னவுடன் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒளிப்பதிவுக் கருவிகள் யாவும் சீனப் பிரதிநிதியை நோக்கித் திரும்பின. அவரது கை ஒற்றை விரல் மேல் நின்றபடியும் மற்ற விரல்கள் மடித்தபடியும் மேல் எழும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சீனப் பிரதிநிதியின் கை மேசையிலேயே இருந்தது. விளைவு லிபியாமீது நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து குண்டு மழை பொழியப்பட்டது. இறுதியில் மும்மர் கடாஃபி கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டார். இவையாவும் நடக்கும் என்று தெரிந்தும் தனது வர்த்தக நலன்கள் புவிசார் கேந்திரோபாயங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் சீனா தனது இரத்து அதிகாரத்தை பாவித்து தீர்மானம்-1973ஐத்  தடுக்கவில்லை. அடுத்து சீனாவின் ஒரே ஒரு நெருங்கிய நட்பு நாடும் அதன் அயல் நாடுமான வட கொரியாவிற்கு நேற்று (07/05/2013) செய்தது இலங்கைக்கான ஓர் அபாயச் சங்காக ஒலிக்கிறது. சீன அரச வங்கியான Bank of China வட கொரியாவின் வங்கியுடனான தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராம் ஒபாமா சீனா வட கொரியாவிற்குச் செய்யும் தனது நீண்டகால அடிப்படையிலான உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளிற்கு ஏற்பவே இது செய்யப்பட்டது.  ஏற்கனவே பல நாட்டு வங்கிகள் வட கொரியாவுடனான தமது நடவடிக்கைக்களை நிறுத்தியுள்ள நிலையில் சீனாவைன் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வட கொரியா தொடர்பாக சீனா பன்னாட்டுச் சமூகம் எனப்படும் மேற்கு நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைக்க தாயாராக உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

வட கொரியாவை அதன் போக்கில் விட்டால் அது அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உருவாக்கிவிடும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நம்புகிறது. அதனால் வட கொரியாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது. வட கொரிய ஆட்சி கவிழ்ந்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவும் வட கொரியாவும் இணைந்து ஒரு பெரும் அமெரிக்க நாடு உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனாலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்களுக்கு சீனா தடையாக இருக்க முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. இந்த ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையில் மாற்றம் தற்போது இல்லை.  மத்திய கிழக்கில் சீனாவுடன் இனைந்து செயற்பட அமெரிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. அங்கு ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுச் செயற்படாமல் இருவரும் இணைந்து மத்திய கிழக்கை சுரண்டுவது எப்படி என்று முடிவெடுக்கலாம். இதே நிலை இலங்கையிலும் ஏற்படலாம்.

சீனா உலகப் பொருளாதார பெரு வல்லரசாகவும் படைத்துறைப் பெரு வல்லரசாகவும் மாறும் என்ற எதிர்பார்ப்புடன் ராஜபக்சேக்களின் ஆலோசகர்கள் கூறிய ஆலோசனைக்கேற்ப நிறைய முட்டைகளை ஒரு கூடையில் வைத்து விட்டார்கள். ஆனால் சீனா லிபியாவைக் கைவிட்டது போலவும் வட கொரியாவைக் கைவிடுவது போலவும் ராஜபக்சேக்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரம், உலகில் அதிக எற்றுமதி செய்யும் பொருளாதாரம், உலகின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் பொருளாதாரம், உலகில் அதிக அளவு எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருளாதாரம், 2050இல் உலகில் முதல்தரமாகப் போகும் பொருளாதாரம் என்றேல்லாம் சீனப் பொருளாதரத்திற்கு நல்ல பெயர் உண்டு.

சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது படைத் துறையையும் வளர்த்து வருவதுடன் தனக்கென்று சில நாடுகளை வளைத்துப் போடுவதிலும் முயன்று வருகிறது. மனித உரிமைப் பிரச்சனை, புவிசார் அரசியல் நிலைமை, தீவிரவாதம் போன்றவற்றிற்காக மேற்கு நாடுகள் சற்று விலகி இருக்கும் ஈரான், சிம்பாப்வே, பாலஸ்த்தீனம் போன்ற நாடுகளுடன் சீனா தனது நட்புறவை வளர்த்து வருகிறது.

பொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி முதலாளைத்துவப் பொருளாதாரத்தை நோக்கி சீனா நகர்ந்து உலக வர்த்தகத்தில் தீவிர பங்காளியாக மாறியதில் இருந்து சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியக் கண்டது. 1978இல் சீனாவின் மொத்த உற்பத்தி(GDP) 214பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012இல் அது எட்டு மடங்காகி 8.3ரில்லியன் டாலர்களானது.

சீனா தனது பொருளாதார வளர்ச்சியில் இலக்கை 8 வி்ழுக்காடாக நிர்ணயித்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் உயர் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பேணாவிடில் சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கி அங்கு பெரும் உள்நாட்டுப் போர் நிகழும் என்று சீன ஆட்சியாளர்க்ள் அறிவர்.

2012இல் சீனாவால் தனது  பொருளாதார வளர்ச்சியின் இலக்கை எட்ட முடியவில்லை. 2012இல் சீனப் பொருளாதார வளர்ச்சி  7.4 விழுக்காடு மட்டுமே. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல வளர்ச்சிதான். 2012இல் பொருளாதார வளர்ச்சி: இந்தியா – 4.5, ஜெர்மனி – 0.10, ஜப்பான்  – .50, பிரான்ஸ் – -0.30(தேய்வு), ஐக்கிய இராச்சியம் – 0.60, ஐக்கிய அமெரிக்கா – 1.80. 2013 முதலாம் காலாண்டிலும் சீனப் பொருளாதாரம் 8 விழுக்காடு வளர்ச்சியை அடையவில்லை. 2013 ஏப்ரல் மாதமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை அடையாது என கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சுட்டிக்காட்டுகிறது.

சீனப் பொருளாதாரத்தின் பலவீனங்கள்.
1. ஏற்றுமதியிலும் வெளியாருக்கான உற்பத்தியிலும் பெரிதும் தங்கி இருக்கிறது.
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியிலேயே பெரிதும் தங்கி இருக்கிறது. அதன் உள்ளூர் பொருளாதாரம் பலவீனம் அடைந்த நிலையிலேயே இருக்கிறது. சீனத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு உற்பத்தியாக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து சீனா தனது பொருளாதாரவளர்ச்சியை எட்டுகிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்டவையோ அல்லது உருவாக்கப்பட்டவையோ அல்ல. ஏற்கனவே வேறு நாடுகளில் கண்டிபிடிக்கப்பட்ட பொருள்களை சீனா குறைந்த செலவில் உற்பத்தி செய்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பொருட்களை சீனாவில் உற்பத்தி செய்கின்றன. தற்போது இத்துறையில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், பங்களாதேசம் போன்ற பல நாடுகள் போட்டியாக உருவாகி வருகின்றன. சீனாவின் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரித்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அத்துடன் சீனத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு வருகின்றனர்.

2. ஆராய்ச்சி அபிவிருத்தி உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப்ப்டுகிறது.
சீன அரசு உயர் கல்வி நிறுவங்களுக்கு ஆராய்ச்சி அபிவிருத்திக்கு வழங்கும் உதவித் தொகையை அவை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால் உலகச் சந்தையில் தனது சொந்த கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்வதில் சினா பின் தங்கி இருக்கிறது.

3. சீன அரசின் பல உள்நாட்டு முதலீடுகள் தோல்வியில் முடிவடைகின்றன.
தனது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்குடன் பல முதலீடுகளைச் செய்கின்றது. உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி அணை, உலகின் வேகமிக்க பெரும் கணனித் தொகுதிகள், கடுகதி தொடரூந்துச் சேவை ஆகியவற்றில் சீனா வெற்றியடைந்தாலும் வேறுபல உள்ளூராட்சி அமைப்புக்களில் சீன அரசு செய்யும் பல முதலீடுகள் தோல்வியில் முடைவடைவதால் நிக்ர விளைவு தோல்வியாகவே இருக்கிறது.

4. சீனா ஒரு பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஒரு நாடே. 
சீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியும் அதன் வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதாக இருக்கிறது. ஆனால் தன் நபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனாவின் நிலை மிகவும் மோசமானதே. தனிநபர் வருமானப் பட்டியலில்: 
ஐக்கிய அமெரிக்கா 12வது இடத்தில் $49000.
ஜேர்மனி ……………….27வது இடத்தில் $38,400
ஐக்கிய இராச்சியம் 34வது இடத்தில் $36,000 
பிரான்ஸ் ………………36வது இடத்தில் $35,600
ஜப்பான் ………………….37வது இடத்தில் $35,200 
சீனா………………………..164வது இடத்தில் $8,500.

இதில் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமானது 164இடத்தில் $3700.

5. ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
சீனா பொருளாதாரத்தில் முன்னேறினாலும் அதன் சமுதாய மாற்றம் மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. ஒரு நல்ல மருத்துவ வசதி பெறவோ ஒரு நல்ல கல்வியைப் பிள்ளைகளுக்குப் பெறவோ ஒரு சீனக் குடிமகன் பெரும் பணத்தை கையூட்டாகக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமன நிலையில் உள்ளான். சீனாவில் பல மில்லியன் அதிபதிகளை அதன் பொருளாதார வளர்ச்சி உருவாக்கினாலும் அதன சமூக நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.சீன அரசின் சமூக நலக் கொடுப்பனவுகள் மிகவும் குறைவானதே. பல முதியோர் ஓய்வு ஊதியம் எதுவும் இன்றித் துயரப்படுகின்றனர்.

6. பாதகமான மக்கட்தொகைக் கட்டமைப்பு
தற்போது பல மேற்கு நாடுகளைப் பாதித்துள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பு இப்போது சீனாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்யப் பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் தற்போது சீனாவின் மக்கள் தொகையில் இளையோரின் தொகை குறைந்து வருகிறது. முதியோரின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த வகையில் இந்தியா பலமிக்க நாடாக இருக்கிறது.

7. நம்ப முடியாத சீனத் தகவல்கள்
ஆட்சியாளர்கள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்போதும் உயர்த்திக் காட்டுவதுண்டு. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதற்கு பிழையான பொருளாதரப் புள்ளிவிபரத் தகவல்களை வேண்டுமென்றே தயாரித்தது என நம்பப்படுகிறது. இது யூரோ வலய நாடுகளின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனாவின் பொருளாதரம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்களில் செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காக திரித்துக் கூறப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு உண்டு. புள்ளிவிபரங்களில் செய்யப்படும் பல மோசடிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு.

8. உலகின் மோசமான சூழல் மாசு
சீன ஆறுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆறுகள் மாசடைந்துள்ளன. காற்று மாசுச் சுட்டெண் சீனாவில் 469 ஆக இருக்கிறது. இது 301இற்கு மேல் இருப்பது ஆபத்தானது. சீன அரசின் கணிப்பின்படி சீனாவின் 113 நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது.

9. வருமானப் பங்கீட்டில் சமமின்மை
அதிக வளர்ச்சியுடைய பெரிய பொருளாதாரமான சீனாவில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.

10. நிதி நிறுவனங்கள் வளரவில்லை
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் அந்த நாட்டு நிதி நிறுவனங்களும் வளர்ந்து செல்ல வேண்டும். அமெரிக்காவின் நிதிச் சந்தை, பிரித்தானியாவின் வங்கிக் கட்டமைப்பு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சீன நிதி நிறுவனங்கள் இன்னும் பாதாளத்தில்தால் இருக்கின்றன. இதனால் மூலதனங்கள் திறன்மிக்க துறைகளில் முதலீடு செய்யப்படுவதில்லை.

மோசமான வருமானப் பங்கிடு, மாசடையும் சூழல், பெருகும் ஊழல் சமூக ஒருக்கிணைப்பின்மை ஆகியவற்றால் சீனப் பொருளாதார வளர்ச்சியை ஒரு தரங்குறைந்த வளர்ச்சி என்கின்றனர் சமூகப் பொருளாதார வல்லுனர்கள். தற்போது தமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பல நாடுகள் நம்பியிருக்கின்றன. சில தங்கியிருக்கின்றன. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பல மேற்கு நாட்டு ஆட்சித் தலைவர்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞசலாம்.

உணவியல் நிபுணர்கள் நாம் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள், எமது பசியை அடக்க உண்ண வேண்டிய உணவுகளை வகைப்படுதியுள்ளனர். அவற்றைப் பின்பற்றினால் எமது ஆரோக்கியம் பேணப்படும்.  சரியான முறையில் சரியானவற்றை உண்டால் உணவு எமக்கு மருந்தாகும்.

 கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்:
1. அவரைவகைகள் – பருப்பு, பீன்ஸ், அவரை எனப் பல வகையில் கிடைக்கும் உணவு இது. இதில் உள்ள நார் கொழுப்பைக் கரைக்கவல்லது.
2. நீலநெல்லி(Blueberries) – பழங்களிலேயே அதிக antioxidants கொண்டது இது.
3. தயிர் – உங்களுக்குத் தேவையான் கல்சியம் இதில் உண்டு. அத்துடன் உங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருக்க இதில் உள்ள  probiotics உதவுகிறது.
4. ஓட்ஸ் – இது கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
5. பூக்கோசு (broccoli) – மரக்கறி என்று சொல்கையில் முதல் தேர்வாக இருக்க வேண்டிய உணவு இது. இது எமது உடலில் enzymes(நொதியூக்கி) அதிகரிக்கச் செய்கிறது. Enzymes are large biological molecules responsible for the thousands of chemical interconversions that sustain life.
6. முட்டை – புரதம் நிறைந்த உணவு.
7. கீரை – இதில் vitamins A, C and K, fiber, iron, calcium, potassium, magnesium and vitamin E ஆகியவை உண்டு.
8. விதைக்கலவை (Mixed Nuts) – தற்போது கடைகளில் இவை நிறையக் கிடைக்கின்றன. அண்மைய ஆராய்ச்சிகளின்படி விதைகளை உண்பவர்கள் உண்ணாதவர்களிலும் பார்க்க இரண்டு ஆண்டுகள் அதிகம் வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறது எனக் கண்டறிபப்பட்டுள்ளது. அக்ரூட் பருப்பும் (Walnuts) பாதாம் பருப்பும் இவற்றில் முக்கியமானவை.
9. தோடம்பழம்: ஒரு தோடம்பழத்தில் ஒருவருக்குத் தேவையான விட்டமின் C உண்டு.
10. இஞ்சி: தமிழ்ச்சித்தர்கள் இஞ்சியையும் கடுக்காயையும் மிக முக்கியமாக உண்ண வேண்டும் என்றனர். கிருமிகளைக் கொல்லக் கூடியது. கொழுப்பைக் கரைக்கக் கூடியது.


பசியடக்கும் உணவுகள்: 
1. அவக்காடோ– இது இருதயத்திற்கு உகந்த monounsaturated fatஐக்கொண்டுள்ளது. இதை அளவோடு உண்ண வேண்டும்.
2. வற்றாளைக் கிழங்கு(Sweet Potatoes) – விட்டமின் ஏ, பி நிறைந்தது. இதில் உள்ள சர்க்கரை பசியை அடக்கும் அத்துடன் சர்க்கரையை சிறிது சிறிதாக இரத்தத்தில் சேரவைக்கும்.
3.  ஓட்ஸ் – காலை உணவாக ஓட்ஸை எடுத்தால் அது மதியம் வரை உங்கள் பசியை அடக்கி வைக்கும். இதில் உள்ள ghrelin சிறந்த பசியடக்கி.
4. தண்ணீர் – சாப்பிடமுன்னர் இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துப்வர்கள் குறைந்த அளவு உணவு உட்கொள்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. பாதாம் பருப்பு – இது antioxidants, vitamin E, and magnesium ஆகியவை நிறைந்தது. ஒரு கையளவு பாதாம் பருப்பு தினமும் உண்ண வேண்டும்.
6. முட்டை– காலை உணவாக முட்டையை உண்டால் அது நீண்ட நேரம் உங்கள் பசியை அடக்கி வைக்கும். புதிய ஆய்வுகள் முட்டையில் உள்ள கொழுப்பு இருதயத்திற்கு நன்மை பயக்கக் கூடியது என்று சொல்கிறது,.
7. கறுப்பு சாக்லெட் – இதில் உள்ள antioxidants நன்மை பயக்கக் கூடியது.
8. பச்சை தேநீர் – இதிலும் antioxidants உள்ளது.
9. இலவங்கப்பட்டை (கறுவா) – இது  உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் மட்டத்தை(blood sugar levels) குறைத்து உங்கள் பசியை அடக்கும். உங்கள் உணவுகளில் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
10. காப்பி – இது சோர்வைப் போக்கும் குணமுடையது. உங்கள் பசியால் வருவது சோர்வு. உங்கள் உடலின் metabolismஐ இது ஊக்குவிக்கும்.

இந்த நூற்றாண்டில் இரு நாடுகளிடையான உறவிலும் பார்க்க அவற்றினடையான வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தந்திரோபாய நிலைப்பாடு பன்னாட்டு உறவின் ஓர் அம்சமாகிவிட்டது. முன்பெல்லாம் ஆ..ஊ என்றால் அமெரிக்கா இரசியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை கொண்டுவரும். பின்னர் அமெரிக்க வியாபாரிகள் கள்ளத்தனமாக அரச தடைகளை மீறிய வர்த்தகம் செய்து பெரும் இலாபமீட்டும்.

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்திய சீனாவிடையிலான வர்த்தகம் 2011இல் எழுபது பில்லியன்களாக உயர்ந்தது. இரு நாடுகளிடையான வர்த்தகத்தை மேலும் வளர்ப்பதற்கு அவை உறுதி பூண்டுள்ளன. ஆனால் இரு நாடுகளிடையான உறவு சென்ற நூற்றாண்டு இருந்ததிலும் பார்க்க இப்போது மோசமடைந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசமும் காஷ்மீரில் சில பகுதிகளும் தன்னுடைய பிரதேசம் என சீனா சொல்லி வருகிறது.

இரு பிரதான பிரதேசங்களான காஷ்மீரிலும் அருணாச்சலப் பிரதேசத்திலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முறுகல் நிலை இருக்கிறது. 10-10-1962இற்கும் 21-11-1962இற்கும் இடையில் நடந்த இந்திய சீனப் போரில் இந்தியா அக்சாய் சின் என்னும் பிரதேசத்தில் சுவிற்சலாந்து தேசத்தின் நிலப்பரப்பு கொண்ட இடத்தையும் (அதாவது 38,000சதுர கிலோ மீட்டர்) அருணாசலப் பிரதேசத்தில் ஒஸ்ரியா நாட்டின் நிலப்பரவளவு இடத்தையும் (90,000சதுர கிலோ மீட்டர்)சீனாவிடம் பரிதாபகரமகப் பறிகொடுத்தது.

2008-ஆம் ஆண்டு சீனா சிக்கிம்மை இந்தியாவிடமிருந்து பிடுங்கி விடுமா என்ற நிலை இருந்தது. இரண்டு மாதங்களாக இருதரப்பும் என்னேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதட்ட நிலையில் இருந்தன. 

இந்திய சீன எல்லையில் மிக நீண்ட தூரம் பிரச்சனைக்கு உரியதாக இருக்கிறது. இப்பகுதியில் சீனா 2012இல் நானூற்றிற்கு மேற்பட்ட தடவை ஊடுருவல்களை மேற்கொண்டது. பல இடங்களில் இருந்து சீனா ஊடுருவிய பின்னர் விலகிச் சென்றாலும் சில இடங்களில் சீனா தனது படை முகாம்களை நிறுவி நிரந்தரமாகத் தங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது 50,000இற்கும் 60,000இற்கும் இடைப்பட்ட துருப்புக்களைக் கொண்ட இரு பெரும் படையணிகளை அருணாச்சலப் பிரதேரத்திற்கு நகர்த்தியது. இதற்கு சீனா தனது எச்சரிக்கையை 2010 ஜூன் மாதம் ஆறாம் திகதி இப்படி வெளியிட்டது: India’s current course can only lead to a rivalry between the two countries. India needs to consider whether or not it can afford the consequences of a potential confrontation with China.” இந்தியாவின் செயல்கள் இரு நாடுகளிடையான முரண்பாட்டை வளர்க்கும். இதன் விளைவுகளை இந்தியாவால் எதிர் கொள்ள முடியுமா என்பதை இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும். அருணாச்சலப் பிரதேசம் என்பது சுவிஸ்ற்லாந்து நாட்டிலும் பார்க்க மூன்று மடங்கு நிலப்பரப்பைக் கொண்டது.

2013 ஏப்ரல் நடுப்பகுதியில் சீனப்படையினர்  காஷ்மீர்  மாநிலம் லடாக் பகுதியில்  டேப்சாங் பள்ளத்தாக்கில்   19 கிலோ மீட்டர் தூரம்ஊடுருவி முகாம் அமைத்துள்ளனர்.  ஒரு நாள் கழித்தே இது இந்தியப்படையினருக்குத் தெரிய வந்தது. புது டில்லியில் உள்ள சீனத் தூதுவரை அழைத்து இந்தியா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. அதற்குச் சீன கொடுத்த பதில் மேலும் இரண்டு முகாம்களை அங்கு அமைத்தமையே. அத்துடன் இது நம்ம ஏரியா உள்ளே வராதே என ஆகிலத்தில் ஒரு அறிவிப்புப் பலகையையும் நிறுவியது. அந்த அறிவிப்புப் பலகை இந்தியப் படைகளிற்கு “You are in Chinese side.”  எனச் சொன்னது. இரு நாடுகளிடையான மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. சீனா இந்தியப் படையினர் இந்திய நிலப்பரப்பில் இருந்து விலக வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர். மேலும் இந்தியா தனது எல்லைக்குள் அமைத்த காப்பரண்களை உடைத்து அழிக்க வேண்டும் என்றும் இந்தியாவை நிர்ப்பந்திக்கிறது. அத்துடன் சீனப்படைகள் தமது எல்லைக்குள்ளேயே நிலை கொண்டிருக்கின்றன என்று சீன வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார்.

 சில முக்கிய கேள்விகள்
 கடும் குளிரில் கள்ளத்தனமாக நள்ளிரவின்உள்வந்த 30 பேர் கொண்ட சீனக் காலாட் படையை சுற்றி வளைத்து வெளியேறு அல்லது சரணடை என்று சொல்ல வேண்டிய இந்தியா ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது? கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா உலகச் சந்தையில் உலகிலேயே ஆகக் கூடிய அளவு பணம் செலவழித்து படைக் கலன்களைக் கொள்வனவு செய்த இந்தியா சீனாவைச் சமாளிக்கக் கூடிய நிலையை இன்னும் அடையவில்லையா?19 கிலோ மீட்டர் உள் வந்தது வெறும் எல்லைப் பிரச்சனையா அல்லது ஆக்கிரமிப்பா?
சீனத் தலைமை அமைச்சர் லீ கெப்பியோங் விரைவில் புதி டில்லிக்குப் பயணம் செய்ய விருக்கும் நிலையி இப்படி ஒரு நகர்வு ஏன்?
தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் கொதிக்கும் நிலையிலும் வட கொரியா குதிக்கும் நிலையிலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் சீனா இந்தியாவுடன் மோதுவதற்கான இன்னும் ஒரு களமுனையைத் திறந்தது ஏன்? ஐக்கிய அமெரிக்கா ஆசியப் பிரதேசத்தில் தனது கேந்திரோபாய பங்காளியாக இந்தியாவை மாற்ற முயற்ச்சி செய்யும் நிலையிலும் இந்தியா அது சினாவுடனா விரோதத்தை மோசமாக்கும் என்று தயங்கும் நிலையிலும் சீனா இப்படி ஓர் ஆத்திர மூட்டும் செயலை ஏன் செய்கிறது?
சீனாவின் பல ஊடுருவல்களுக்கு கிடைக்காத முக்கியத்துவம் இப்போது கொடுக்கப்படுவது ஏன்?

இந்தக் கேள்விகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் சீன ஊடுருவலின்  பின்னால் ஒரு சதிக் கோட்பாடு இருக்கலாம். சீனாவின் அத்துமீறல் நிறைந்த செயற்பாடுகள் ஆளும் கட்சியினருக்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் பெரும் பணத்திற்கு எந்தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது. சீனா இந்தியாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமித்தால் அது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் பெரும் பணக்காரர்களின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால்தான் பெரும் பிரச்சனைக்கு வழிவகுக்கக் கூடிய இந்த ஊடுருவலை இந்திய வெளிநாட்டமைச்சர் சல்மன் குர்ஷித் ஒரு முகத்தில் உள்ள ஒரு சிறு புள்ளியை வைத்துக் கொண்டு முகம் அழகில்லை என்று சொல்ல முடியாது. அதை எதாவது ஒரு பூச்சைப் பூசிச் சரிபடுத்தி விடலாம் என்றார். இது அவரின் மனைவிக்குச் சரியாக இருக்கலாம் ஒன்றை ஒன்று சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் உலகின் இரு பெரும் நாடுகளுக்குச் சரிவராது. இந்தியப் தலைமை அமைச்சர் “It is a localized problem, We do believe it can be solved. We have a plan. We do not want to accentuate the situation.”  ஒரு நாட்டுப் படை இன்னொரு நாட்டுக்குள் புகுந்ததை ஒரு உள்மயமாக்கப்பட்ட பிரச்சனை என்று சொல்லிய முதல் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்தான். இப்படிச் சொல்லும் ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருப்பது சீனாவிற்கு மிகவும் சாதகமான நிலையாகும். இந்தக் காங்கிரசு ஆட்சி விரைவில் வரவிருக்கும் தோல்வியடைந்து சீனாவிற்கு சாதகமற்ற ஓர் ஆட்சி உருவாகுவதை சீனா விரும்புமா? சீனா தேர்தலுக்கு முன்னர் சீனாவை இந்தியா மிரட்டி வெளியேறச் செய்வது போல் ஒரு நாடகத்தை ஆடினால் அது காங்கிரசின் வெற்றிக்கு வழி சமைக்கும். எந்தபுற்றுக்குள் எந்தப் பாம்போ? எந்தப் பாம்பிற்குள் எந்த நஞ்சோ?