Archive for June, 2010


யாஹூ அரட்டையில் மலர்ந்த உறவு
மின்னஞ்சலில் மென்னையான கொஞ்சல்கள்
நெற்கபேயில் நேருக்கு நேராக சந்திப்பு
வலயத்தில் ஒரு தனியறை ஏற்பாடு
மென் பொருட்கள் வன்பொருட்களாகின
கருவித்தொடர்களில்(Tool Bar) தடவித் தொடர்ந்தது
அசைவூட்டமும் மேலோடலும் மிகுந்தது(animation and browsing)
அவன் அணை மீறி தரவேற்றினான்
அவள் அணைபட்டு தரவிறக்கினாள்
பிணைந்தனர் நெருப்புணர்வில்
துடித்தனர் காம நெருப்பணைக்க
மறந்தனர் அங்கே நெருப்பணையை(firewall)
தட்டத் தவறினர் அழிப்பொத்தானை(delete button)
முடியாமற் போனது நிலைமீட்டல்(Reset)
தாயானாள் அவள்! தந்தையாக மறுத்தான் அவன்!!


இலங்கை அரசிடம் அகப்பட்டு ஒநத்துழைத்துக் கொண்டிருக்கும் அல்லது 2006இல் இருந்து சேர்ந்தியங்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து ஒன்பது பேர் இலங்கை சென்றனர். இவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இந்த ஒன்பது பேரின் விபரம்:

  • பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், மருத்துவர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
  • பிரான்ஸ்: கெங்காதரன்
  • சுவிஸ்லாந்து: மருத்துவர் சந்திரா மோகன் ராஜ்
  • அவுஸ்திரேலியா: மருத்துவர் ரூபமூர்த்தி
  • கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இலங்கை சென்ற இந்த ஒன்பது பேரையும் பலரும் துரோகிகளாகவும் கருதுகின்றனர்.

இவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களைப்பற்றி ஒரு பேட்டி பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சியான ஜீரீவியில் ஒளிபரப்பானது. அது மட்டுமா இவரது காணொளிப் பேட்டி tamilnet இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. tamilnet இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேட்டிகளை எடுப்பது வழமையான ஒன்றல்ல. அதிலும் காணொளிப் பேட்டி. அதில் அவர் பல மர்மங்களைத் துலக்கியுள்ளார். அப்பேட்டியை இங்கு காணலாம்:tamilnet இணையத் தளம்

பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த ஸ்கந்ததேவா என்பவரை ஜீரிவீயின் பிறேம் பேட்டி கண்டு ஒளிபரப்பினார். அதில் கூறப்பட்டவை:

  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஒரு ஆயுட்கால் உறுப்பினர்.
  • அவர் இலங்கை சென்றது அவரது தனிப்பட்ட பயணம்.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் இலங்கை சென்றமைக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

tamilnet இணையத் தளத்திற்கு மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் வழங்கிய பேட்டியில் மிக முக்கியமானவையும் இதற்கு முன் அறியப்படாதவையுமான பல தகவல்கள் உள்ளன.

மற்றப் ஒன்பது பேரில் எவரையும் ஏன் tamilnet இணையத் தளம் பேட்டி காணவில்லை? அவரைப்பற்றிய பேட்டி ஏன் ஜீரிவீயில் ஒளிபரப்பானது? இவற்றைச் சேர்த்தும் பார்க்கும் போது இலங்கை அரசையும் மற்ற எட்டுப் பேரையும் உளவு பார்க்க மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியதா?

இந்த ஒன்பது பேரின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு தமிழர்களின் புலனாய்வுத் துறை பலமாக இருப்பதாக மீண்டும் ஒரு முறை அறிவித்தது.


வாழாத இனமொன்றின்
ஆளாத மொழியொன்று
செம்மையானால் என்ன

உயிரிலும் மேலான தமிழ்
என முழங்கியதற்கு
அர்த்தம் புரிந்தது இன்று

தமிழரின் உயிரிலும்
உமக்குத் தமிழ் மேலானது
அதற்கு ஒரு மாநாடு

கலைஞர் தொலைக்காட்சியில்
கணிகையர் பேசும் “ரமிளை”
முதலில் செம்மையாக்குவீர்

தனிப்பட்டோர் துதி பாடி
அவர்தம் விரோதிகளில்
வசை பாடும் கவியரங்கு


சூளக வம்சத்தை சுடுகாடனுப்பி
மகா வமசத்தை வழிகாட்டியாக்கி
தமிழனைப் பகையாளியாக்கினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

வேதியனையும் குழந்தையையும்
கொதிதாரில் போட்டு கொன்று
பௌத்தம் வாழ்க என உரக்கக் கத்தினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

சோல்பரி என்றொரு பேமானி
போட்டுவைத்த சிக்கலிது
என்றோ தீர்திருக்க வேண்டியது
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ஆட்சி மொழி உம் மொழியென்றீர்
கேட்க வந்தோரை பாராளமன்று முன்
காடையரால் உதைத்துத் தள்ளினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

இந்திரா காந்தியின் பேராதிக்க கொள்கை
போட்டு மூட்டிய தீ சோறு சமைக்கு முன்னே
சல்லடையாகப் பிணமாய்ச் சரிந்தார்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ராஜீவ் காந்தியின் முட்டாள்த்தனம்
பிசைந்து தப்பும் சப்பாத்தியென
எண்ணி ஏமாந்த கதையறிவீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

தமிழன் கறி விற்று மகிழ்ந்த
கதை தன்னை மறந்திட்டீரோ
முள்ளிவாய்க்கால் கொள்ளியும் மறந்தீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

டட்லி-செல்வா அரசை இட்லி என்றீரே
மசால வடை அரசென இகழ்ந்தீரே
டட்லியில் நல்லெண்ணை மணந்தது அறியீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

புளித்துப் போன அப்பம் இது
கருகிப் போன “கவும் பணியாரம்” இது
நாறிப்போன கருவாடிது
தீர்க்க முடியா இடியப்பச் சிக்கலிது

அன்று இந்தியாவை எதிரியென்றீர்
இந்தியா உமக்கிருக்கின்றது என்கிறீர்
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை
தமிழன் தலை நிமிர முடியாதென என நாமறிவோம்


பெண்கள் சொல்பவையும் அவற்றின் பொருள்களும்

ஆம் = இல்லை
இல்லை = ஆம்
நீ யே முடிவு செய்து கொள்= பின்னால் எனது நச்சரிப்பு தாங்கமாட்டாய்
ஏதோ செய்திடு= செய்தியோ மவனே தொலைச்சுப் புடுவன்
நீ ஆண்மையானவன்= உன் வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை
நீ என்னை எந்த அளவு விரும்புகிறாய்=விலை உயர்ந்த நகை ஒன்று தேவைப்படுகிறது
நான் குண்டாய் இருக்கிறேனா?= சொல்லடா நான் அழகாய் இருக்கிறேன் என்று
எப்படிக் கதைப்பது என்று பழகிக்கொள்= சொல்வதற்கெல்லாம் தலையாட்டு
நான் சொல்வது காதில் விழவில்லையா? = மவனே தொலைந்தாயடா

ஆண்கள் சொல்பவையும் அவற்றின் பொருள்களும்
களைத்துப் போய் இருக்கிறேன்= களைத்துப் போய் இருக்கிறேன்
பசிக்குது= பசிக்குது
சரி= ஏதோ செய்து தொலை
இன்று சினிமா போவோமா?= இன்று இரவு எனக்கு நீ வேண்டும்
இன்று வெளியில் சென்று சாப்பிடுவோமா?=இன்று இரவு எனக்கு நீ வேண்டும்
உனது ஆடை அழகாக இருக்கிறது= உன் மார்பைப் பார்க்க ஏதோ செய்கிறது
எனக்கு போரடிக்கிறது=எனக்கு நீ வேண்டும்
எனக்குத் தூக்கம் வரவில்லை=எனக்கு நீ வேண்டும்
சரி கொஞ்ச நேரம் கதைப்போம்=எனக்கு நீ வேண்டும்


மாக்சிசம் என்று புரட்சி செய்து லெனினிசமாகி இஸ்டாலினிசமாகத் திரிபுபட்டு இப்போது மபியாஇசத்தில் மாட்டுப்பட்டிருக்கும் ரஷ்யாவிற்கு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு நாளாந்தம் வேளை தோறும் அறிக்கை விடுவது வேலை. ஆனால் இலங்கை தொடர்பாக அறிக்கை விடுவது அதன் வழமையல்ல. லெனின் சொன்னார் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்னும் நூலில் சொன்னார் முதலாளிகள் உலகத்தை தங்களுக்குள் பிராந்திய ரீதியாகப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று. ரஷ்யாவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் பங்கிற்கு உட்பட்டது. இந்த அடிப்படையிலேயே ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியபோது தென் ஆபிரிக்கா இந்தியாவிற்கு இசைவாக வாக்களித்தது.

இலங்கையில் நடந்த இனக்கொலையை இனக்கொலையாக ஏற்றுக் கொள்ளாமல் குறைந்த அளவு ஒரு போர் குற்றம் நடந்ததாக சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவை கூறி அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டன. இந்த சாட்சியங்களை சீன நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அழிக்க முயல்வதாகவும் செய்திகள் வந்தன. சனல்-4 தொலைக்காட்சியும் சில ஆதாரங்களை முன்வைத்தது. அது போலியானது என இலங்கை அரசும் இல்லை அது போலியானது அல்ல உண்மையானது என்று ஐநா விசாரணையும் முடிபுகளை வெளிவிட்டன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவற்றின் வற்புறுத்தல் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் திகதி இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடார்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப் படவிருப்பதாகத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக அது இழுத்தடிக்கப் பட்டது. ஐநாவைச் சேர்ந்த லியோம் பொக்ஸ் அவர்கள் இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடாத்திய பின்னர் நிபுணர் குழு அமைக்கப் படும் என்று சொல்லப் பட்டது. அவர் இலங்கை வந்தவுடன் மேலும் பலர் இலங்கை வந்தனர். ஜப்பானின் யசூசு அகாசி வந்து இலங்கை அரசின் பேச்சாளர் போல் பேசினார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் இலங்கை வந்தார். மௌனித்திருந்த எரிக் சொல்ஹெய்ம் வாய்திறந்தார். இந்தியா சும்ம இருக்கவில்லை நடிகர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஐநா செயலர் அறிவித்தது அலோசனைக் குழுவே விசாரணைக் குழு அல்ல. இருந்து இலங்கை துள்ளிக் குதித்தது. இலங்கை எதிர் கட்சிகள் முழங்கின புலம் பெயர் தமிழர்களிடம் இலங்கை தோற்று விட்டது என்று. இலங்கை ஆலோசனைக் குழு அமைத்ததைக் கண்டித்தது. இந்தியா மௌனமாக இருந்தது. அமெரிக்கா வரவேற்றது. ரஷ்யக் கரடி ஒரு பாய்ச்சல் பாய்ந்தது. விரைந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

  • இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக இலங்கை அரசு குழுவொன்றை அமைத்துள்ள நிலையில் இவ்வாறான குழுவொன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இலங்கை தனது நாட்டு இறைமைக்குள் ஐநா தலையிடமுடியாது என்று ஒரு பெரும் கூச்சலிட்டது. இலங்கை இந்த ஆலோசனைக் குழுவால் பெரிதும் ஆடிப் போய்விட்டது என்பது அது விடும் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது. இலங்கைக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. அது ரஷ்யாவிடம் இருந்து விரைந்து வந்தது.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது? இலங்கை படையுடன் இந்திய்ப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா? அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா? இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான விசாரணை வரும் பட்சத்தில் அதில் இந்தியப் பங்களிப்பு வெளிவரும் என்று பயந்து இந்தியா ரஷ்சியாவூடாக விசாரணைக்கு முட்டுக் கட்டு போடுகிறதா?

இலங்கையில் நடக்கும் வல்லாதிக்க நாடுகளின் போட்டியில் இந்தியாவிற்குப் பின்னால் தான் இலங்கை நிற்கும். 1987இல் இலங்கையின் “இறைமையில்” இந்தியா தலையிட்டபோது வாய் மூடி இருந்த ரஷ்சியாக் கரடி இந்த வெறும் ஆலோசனைக் குழுவிற்கு மட்டும் ஏன் இந்தப் பாய்ச்சல் பாய்கிறது?

Times of India விற்கு ராஜபக்சவிற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில் போர் குற்ற விசாரணை தொடர்பாகக் கேட்டபோது
“Why should I worry about others? If India and neighbours are good with me, that is enough for me. நான் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படவேண்டும் இந்தியாவும் மற்ற நல்ல அயலவர்களும் என்னுடன் நல்லபடியாக இருக்கிறார்கள். அது எனக்கு போதும் என்றார். இரஷ்சியா தன்னுடன் இருப்பதாக அவர் கூறவில்லை. ரஷ்யாவின் கூற்றுக்கு அவர் நன்றி தெரிவிக்கவுமில்லை. இதிலிருந்து தெரிகிறது ரஷ்யாவின் பாய்ச்சலின் பின் யார் இருக்கிறார்கள் என்று.


இலங்கையில் சமாதான(?) பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த வேளையில் காணாமற் போன இருவர் மீண்டும் உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் யசூசி அகாஷி இவர் இருவாரங்களுக்கு முன்னர் இலங்கை சென்று தானும் ஒரு ஹெகேலிய ரம்புக்வேலபோல் பேசிவிட்டுச் சென்றார். அடுத்தவர் நோர்வேயின் அமைச்சர் எரிம் சொல்ஹெய்ம். இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்த தாங்கள் முயல்வது போல் காட்டிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்வதாக அறிவித்த பின்னர் இவர்களும் மௌனித்துக் கொண்டனர். போர் முடிந்தபின்னர் தமிழர்களின் அவலங்கள் பற்றியோ அவர்களுக்கு இழைக்கப் பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகள் பற்றியோ இவர்கள் கவலைப்பட்டதில்லை. இவர்கள் இருவரும் இலங்கையில் சமாதானம் ஏற்படுத்துவதைத் தவிர வேறு ஏதோ நிகழ்ச்சி நிரலின் கீழ்தான் செயற்பட்டிருக்கிறார்கள்.

2009 மே மாதம் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் ஒரு வெளிநாட்டு முக்கிய பிரமுகரை உழங்கு வானொலியில் அழைத்துச் சென்று முள்ளிவாய்க்காலுக்குள் ஒரு சிறு பிரதேசத்தில் மூன்று இலட்சம் மக்கள் அகப்பட்டுத் தவிப்பதைக் காட்டி இச்சிறு பிரதேசத்துக்குள்தான் இந்த விடுதலைப் புலிகள் எஞ்சியுள்ளனர் என்று காட்டினார்களாம். அப்போது அந்தப் பிரமுகர் அப்படியே குண்டுகளைப் போட்டு அத்தனைபேரையும் அழித்தொழிக்கும்படி கூறினாராம். அந்தப் பிரமுகர் ஜப்பானின் யசூசு அகாசி என்று நம்பப்படுகிறது.

பலகாலமாக மௌனமாக இருந்த எரிக் சொல்ஹெய்ம் இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அவர் உதித்த திருவாசகம்:

  • 2009 மே மாதம் 17-ம் திகதி விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன் மற்றும், சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தேன். இதன் போது அவர்கள் சரணடையப் போவதாக என்னிடம் அறிவித்தனர். இதே கோரிக்கையை அவர்கள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ஐநா சபை ஆகியவற்றிடமும் விடுத்திருந்தனர். விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்தேன்.எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் இவை நடந்த சில மணித்தியாலங்களில் அவர்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன்.
  • என்னைப் பற்றி இலங்கை ஊடகங்கள் அப்பட்டமான பொய் செய்திகள் பரப்பின.
  • புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களே போருக்கான பசி வேண்டாம். போருக்கு பன்னாட்டு ஆதரவு கிடையாது.
  • தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்ற பரந்த ஆதரவு உலகெங்கும் உண்டு.

எரிக் சொல்ஹெய்ம் சொல்லாமல் விட்டது:

  • இலங்கையில் சிங்களவர்கள் அவர்களுடன் நான் பழகியதன் அடிப்படையில் அவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்போவதில்லை
  • அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதைக் கூறவில்லை.
  • சரணடையும் பேச்சு வார்த்தையில் எரிக் சொஹெய்ம், ஐக்கிய நாடுகளின் சதீஸ் நம்பியார், கனிமொழி, ஜகத் கஸ்பர், இந்திய வெளியுறவுத்துறையினர், பாலித கொஹென்ன ஆகியோர் சம்பந்தப்பட்டிருந்தனர்.

இந்தியாவின் வெளியுறவுச் செயலர் தமிழீழ விடுதலைப் புலிகளை வேரோடு அழிப்பேன் என்று கூறியிருந்தார். இந்தியாவை ஆளும் குடும்பத்தின் நேக்கமும் அதுவே என்பது பகிரங்கப்படுத்தப் பட்ட உண்மை. அதற்கு அவர்களை சரணடையச் சொல்லிவிட்டு கொன்று குவிப்பதுதான் ஒரே வழி. இதை இலங்கையும் இந்தியாவும் ஒன்று சேர்ந்து செய்ததா? இறுதியில் படுகாயமடைந்திருந்தவர்களை கடைசியாக யார் புலிகள் யார் பொதுமக்கள் என்ற நிலையில் அனைவரையும் உயிருடன் புதைத்தனரா? செஞ்சிலுவைச் சங்கத்தால் காயமடைந்தவர்கள் என்று சொல்லி கொண்டு வந்தவர்களை இந்தியாவில் இருந்து வந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சைகள் வழங்காமல் கைகால்களைத் துண்டித்து அவர்களை நிரந்தர முடமாக்கினார்களா? அவர்களின் உடலுறுப்புக்களைத் திருடினரா? இவற்றை யார் சொல்வார்?


உலகின் எந்த நாட்டிலும் எந்த இனக் குழுமத்திலும் மாமியார் மருமகள் சண்டையும் மாமியாரில் மருமகனுக்கு வெறுப்பும் பொதுவானதோ? மாமியார் பற்றி எத்தனையோ நகைச்சுவைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படி ஒன்று.

ஒரு நடுத்தர வயதுத் தம்பதிகள் மகிழூந்தில்(காரில்) உல்லாசமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். மனைவிக்கு கொஞ்சம் “மூடு” வந்துவிட்டது. மனைவி கைகள் ஏதோ செய்ய கணவன் இன்னும் வேகமாகக் மகிழூந்தை(காரை) ஓட்டினார். மகிழூந்து(கார்) மோதுண்டு கணவருக்கு கையில் காயம். மனைவி பாவம் முகத்தில் படுகாயம் கன்னங்களில் உள்ள சதைகள் கிழிந்தே விட்டன.

மருத்துவ மனையில் ஒரு நல்ல மருத்துவர்.கைதேர்ந்தவர். அவர் கணவனின் பின்புறத்தில்(buttocks)இருந்து தசை எடுத்து மனைவியின் முகத்தில் வைத்து மிகச்சிறப்பாக மனைவியின் முகத்தை சரிசெய்துவிட்டார்.

மனைவியின் முகம் இப்போது மிகவும் புதுப் பொலிவுடன் காணப்பட்டது. ஏற்கனவே இருந்த சுருக்கங்கள் யாவும் போய்விட்டன. இப்போது முன்பிருந்ததிலும் பார்க்க இளமையாகத் தோற்றம் அளித்தார்.

தனது முகம் புதுப் பொலிவு பெற்றதால் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் தனது கணவருக்கு நன்றி சொல்வதை மனைவி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இப்படிச் சிலகாலம் சென்றது. ஒரு நாள் கணவரின் பின்புற(buttocks)தசைத் தானத்திற்கு நன்றி சொல்லும் போது கணவர் சொன்னார். நீ அடையும் மகிழ்ச்சியிலும் பார்க்க எனக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது உனது கன்னத்தில் உனது தாயார் முத்தமிடும் போதெல்லாம் என்றார்.


என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
நெஞ்சோரத்தில் ஒரு கனப்பு
உள்ளமெங்கும் உன் நினைப்பு

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
விழியோரத்தில் ஒரு நனைப்பு
இதயத்தில் ஒரு வலிப்பு

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
என்னருகில் இன்று நீ இல்லை
என்படுக்கையில் ஒரு இடைவெளி

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
கைகளிணைய கால்கள் உரச
ஆடிய நடங்கள் ஓய்ந்து விட்டன

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
பார்வைகளால் வந்த அம்புகள்
வார்த்தைகளால் வந்தன

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
ஏறிப்போன் கடனட்டை நிலுவைகள்
கனவுகள் ஏறின சிலுவைகள்

என்றும் போல் இன்றும் புலர்ந்தது – ஆனால்
என்றும் போல் இன்று இல்லை
உறைந்த பனியில் கருகிய தளிராய்
ஏன் மறைந்தது நம் உறவு


அமெரிக்காவில் முதலி ஐ-போன்4 இம்மாதம் 23-ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆறு இலட்சம் மக்கள் இணையத்தினூடாக முதல்நாள் வாங்கிக் கொண்டனர். மற்றவர்கள் கடைகளின் முன்னால் முதல் நாள் இரவில் இருந்தே காத்திருந்தனர். பலர் எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருந்தனர்.

இலண்டனில் ஐ-போன் 4 அறிமுகப்படுத்தப் பட்ட போது நிலைமை வேறு. இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் ஐ-போன்4 இன் பிரியர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

தான் முதல் ஆளாக வாங்க வேண்டும் என்று துபாயில் இருந்து இலண்டன் பறந்து வந்தார் அலெக்ஸ் லீ என்னும் 27 வயது இளஞர். இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் காத்திருந்த அவருக்கு ஐ-போன்4 கிடைத்தது ஆனால் முதலாவதாகக் கிடைக்கவில்லை. முற்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்த ஒருவருக்கு 16 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்ததன் பின் முதலாவதாகக் கிடைத்தது.

ஐ-போன் கடைகளில் உள்ள கையிருப்பு அதன் பிரியர்களிலும் பார்க்கக் குறைவானதாகவே இருக்கிறது.

The iPhone 4, unveiled at Apple’s WWDC in June, boasts a high-resolution ‘retina’ display, a longer-lasting battery and improved cameras among its many new features.

Not only does it run Apple’s latest iOS4 (which finally includes multitasking), the newest incarnation of the popular mobile features video chat – something that Apple has named ‘Facetime’. Users will be able to use the front-facing camera to chat with other users around the globe, though the service is limited to Wi-Fi only at present.