Archive for the ‘தென் சீனக்கடல்’ Category

இந்துமாக் கடல் இந்தியாவின் கடலல்ல என அடிக்கடி சொல்லும் சீனா தென் சீனக் கடலும் கிழக்குச் சீனக் கடலும் தன்னுடையது என வலியுறுத்தி வருவதுடன் தென் சீனக் கடலில் கடற்படுக்கையில் உள்ள மணலை வாரி இறைத்து பவளப் பாறைகள் மேல் நிரப்பி பல தீவுகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் பிரதாஸ் தீவுகள், பரசெல் தீவுகள். ஸ்காபரோ ஷோல், ஸ்பிரட்லி தீவுகள் ஆகியவை முக்கியமானவையாகும். சீனா தீவுகள் நிர்மாணிக்கும் கடற்பிரதேசத்திற்கு வியட்னாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான், புருனே போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன. சீனா பன்னாட்டுக்கடற்பரப்பில் தீவுகளை நிர்மாணிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது. இதனால் உலகிலேயே இரு வல்லரசுகளுக்கு இடையில் போர் மூளும் ஆபத்துள்ள பிரதேசமாக தென் சீனக் கடல் இருக்கின்றது. ஆண்டு தோறும் 5.3ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் கடந்து செல்லும் தென் சீனக் கடல் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்

போக்குவரத்தும் எரிபொருளும்

தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு.

இந்தியா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் உட்பட இருபது நாடுகள் கலந்து கொள்ள ஆண்டு தோறும் நடக்கும் பசுபிக் {The Rim of the Pacific (RIMPAC)} விளிம்பு நாடுகளின் கடற்போர்ப் பயிற்ச்சியில் கலந்து கொள்ள சீனாவிற்கு விடுத்த அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக்கும் இந்தப் படைப்பயிற்ச்சிக்கு சீனாவும் இரு தடவைகள் அழைக்கப்பட்டிருந்தது. சீனா தென் சீனக்கடலில் தான் செயற்கையாக நிர்மாணித்த தீவுகளில் ஒன்றான ஸ்பிரட்லி தீவில் பலவிதமான வலிமை மிக்க படைக்கலன்களை நிறுத்தியுள்ளது. சீனா அங்கு தீவுகளை நிர்மாணிக்க ஆரம்பித்த போது அவற்றில் படையினரோ படைக்கலன்களோ நிறுத்தப்பட மாட்டாது என அறிவித்திருந்தது. தற்போது சீனா அத்தீவுகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகள், இலத்திரனியல் குழப்பும் முறைமைகள் (electronic jammers) போன்றவற்றை நிறுத்தியுள்ளமைக்கு உறுதியான ஆதரங்கள் கிடைத்திருப்பதால் சீனாவுடன் இணைந்து பயிற்ச்சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

தீவுகளுக்குள் தீப்பந்தம்

ஸ்பிரட்லி தீவுகளில் சுபி, மிஸ்சீஃப், ஃபியரி குரொஸ் ஆகிய இடங்களில் விமானத் தளங்களை சீனா அமைத்துள்ளது. அவற்றுடன் உழங்கு வானூர்திகளுக்கான கட்டமைப்பு உட்படப் பல சிறு கட்டமைப்புக்களையும் உருவாக்கியுள்ளது. பரசல் தீவுகளில் உள்ள வூடி தீவில் பல காத்திரமான படைநிலைகளை சீனா நிர்மாணித்துள்ளதுடன் ரடார் வசதிகளையும் உழங்கு வானூர்திகளுக்கான நிலைகளையும் நிர்மாணித்துள்ளது. இத்தீவுகளில் சீனா வான் சண்டை விமானங்களையும் வேவு விமானங்களையும் ஏவுகணைச் செலுத்திகளையும் பெருமளவில் நிறுத்தியுள்ளது. தரையில் இருந்து ஏவக்கூடிய சீர்வேக ஏவுகணைகச் செலுத்திகளும் {ground-launched cruise missiles (GLCMs)

இனிவரும் காலங்களில் மேலும் பல தீவுகளை படைத்துறை மயமாக்கும் திட்டம் சீனாவிடம் உண்டு. இரசியாவிடமிருந்து சீனா வாங்கும் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளும் அங்கு நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தீவுகளா தீர்த்துக் கட்டுவோம் என்கின்றது அமெரிக்கா

இரண்டாம் உலகப் போரில் இருந்து மேற்குப் பசுபிக் கடலில் சிறிய தீவுகளை சிதறடிக்கும் அனுபவம் அமெரிக்காவிற்கு நிறைய உண்டு என அமெரிக்கப் பாதுகாப்புத்துறையான பெண்டகன் 2018 ஜூன் மாத

இறுதியில் தெரிவித்தது. சீனா உருவாக்கிய செயற்கைத் தீவுகளை துவம்சம் செய்வது அமெரிக்காவிற்கு பெரும் பணியல்ல என்றா அமெரிக்கக் கடல்சார் படையின் லெப்டினண்ட் ஜெனரல் கென்னத் மக்கென்சீ. மேலும் அவர் தனது கருத்து சரித்திர அடிப்படையிலான உண்மை என்றும் அதன் மூலம் தான் சீனாவிற்கு எதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். இரண்டாம் உலக போரின் போது ஜப்பான் தற்போது அமெரிக்கா பாரிய படைத்தளம் வைத்திருக்கும் குவாம் தீவு உட்படப் பல தீவுகளை பசுபிக் மாக்கடலில் வைத்திருந்தது. போர் உக்கிரமாக நடக்கும் போது அத்தீவுகள் ஜப்பானுக்கு அவை சொத்தாக இல்லாமல் பொறுப்பாக மாறியிருந்தது. அங்குள்ள படையினருக்கான ஆதார வழங்கல்களைச் செய்வது பெரும் சிரமாக இருந்தது.

சீனக் கொல்லையில் அமெரிக்கக் கொள்கை

சிங்கப்பூரில் நடந்த ஷங்கிரிலா உரையாடல் மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஜிம் மத்தீஸ் சீனாவின் தென் சீனக் கடற் கொள்கை அமெரிக்காவின் திறந்த கடற் கொள்கைக்கு எதிரானதாக இருப்பதால் இரு நாடுகளும் உடன்படாத நிலைகளில் அமெரிக்கா சீனாவுடன் கடுமையாகப் போட்டியிடும் என்றார். அமெரிக்கா சீனாவுடன் ஆக்கபூர்வமான பயன்சார் உறவைத் தொடர விரும்பினாலும் போட்டியிட வேண்டிய கட்டங்களில் தீவிரமாகப் போட்டியிடுவோம் என்றார் ஜிம் மத்தீஸ்.

எகிறும் சீனா இரசியாவிற்கு அடங்கியது.

தென் சீனக் கடலில் வியட்னாமின் கரையில் வியட்னாமிற்காக ஸ்பெயின் செய்த கடற்படுக்கை எரிபொருள் அகழ்வு முயற்ச்சி சீனாவின் மிரட்டலால் கைவிடப்பட்டது. பின்னர் அதே பணியை இரசியா தற்போது இரசியா மேற்கொண்டு வருகின்றது. இதை எதிர்த்து சீன வெளியுறவுத் துறை கடுமையான தொனியில் அறிக்கை ஒன்றை வெளிவிட்டதுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. மறுபுறத்தில் பிலிப்பைன்ஸ் தென் சீனக் கடலில் எரிவாயு உற்பத்தி செய்ய எடுத்த முயற்ச்சியும் சீனாவின் மிரட்டலால் கைவிடப்பட்டது. பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்த சீன அதிபர் Reed Bank என்னும் கடலோரத்தில் ஒரு தலைப்பட்சமாகச் செய்யப்படும் எரிபொருள் அகழ்வுகள் சீனாமீதான போராகக் கருதப்படும் என்றார். 2016-ம் ஆண்டு பன்னாட்டு கடல் எல்லை தொடர்பான தீர்ப்பாயம் Reed Bank  உட்படப் பல தீவுகளை பிலிப்பைன்ஸுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

வலிமையில்லாச் செயற்கைத் தீவுகள்

ஒரு நாடு தன் தரையில் இருந்து வான் நோக்கியும் தரையில் இருந்து தரைக்குமான ஏவுகணைச் செலுத்திகளை நிலத்துக்குக் கீழ் அல்லது பாறைகளுக்கு மத்தியில் மறைத்து வைத்திருப்பது வழமை. அவற்றை எதிரியின் ஏவுகணை வீச்சால் அழிக்க முடியாத வகையில் வைத்திருப்பது வழமை. இது படைத்துறை விமானங்களின் ஓடுபாதைகளுக்கும் விமானத் தரிப்பிடத்திற்கும் பொருந்தும். மணல் வாரி இறைத்து உருவாக்கிய செயற்கைத் தீவுகளில் படைக்கலன்களை மறைத்து வைத்திருப்பது கடினமான ஒன்றாகும் நிலத்தைத் துளைத்துக் கொண்டு போகக்கூடிய ஏவுகணைகளால் தென் சீனக் கடலில் உள்ள தீவுகளின் படை நிலைகளை இலகுவாக அழிக்க முடியும். அமெரிக்காவின் புலப்படாப் போர்விமானங்களில் இருந்தும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் வீசப்படும் ஏவுகணைகள் தென் சீனக் கடற் தீவுகளில் உள்ள படை நிலைகளைத் துவம் செய்ய முடியும். சீனப் பெரு நிலப்பரப்பில் இருந்து செயற்கைத் தீவுகளுக்கான வழங்கல்களை அமெரிக்காவின் கடற்படையால் துண்டிக்க முடியுமானால் அது அத் தீவுகளின் அழிவிற்கு வழிவகுக்கும். 2018 ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீனாவின் ஸ்பிரட்லி தீவின் மேலாக அமெரிக்காவின் அணுக்குண்டுகளைத் தாங்கிச் சென்று வீசக் கூடிய B-52 விமானங்கள் பறந்து சென்றன. இந்த விமானங்கள் டியாகோகாசியாத் தீவில் உள்ள அமெரிக்கத் தளத்தில் இருந்து சென்று தென் சீனக் கடலில் மேலாகப் பறந்துவிட்டுத் திரும்பின. இப்பறப்பு தனது பன்னாட்டு வான்பரப்பில் தான் வழமையாகச் செய்யும் பறப்பு என்றது அமெரிக்கா. இதைத் தொடர்ந்து சீனா வூடி தீவில் (Woody Island ) இருந்து தனது ஏவுகணைச் செலுத்திகளை அகற்றியது. இதை இஸ்ரேலிய செய்மதிகள் பதிவு செய்துள்ளன. 2018 ஜூன் 6-ம் திகதி தென் சீனக் கடலைப் படைத்துறை மயமாக்குவது சீனாவல்ல அமெரிக்காவே நெ சீனா குற்றம் சாட்டியது. அத்துடன் போர்விமானப் பறப்புக்களுக்குப் பயந்து சீனா தனது கடல் இறையாண்மையை விட்டுக் கொடுக்காது என்றும் சூளுரைத்தது. அமெரிக்கா தனது மற்ற நட்பு நாடுகளையும் தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளையும் சீனாவிற்கு எதிரான நகர்வுகளை தென் சீனக் கடலில் செய்யும் படி வேண்டு கோளும் விடுத்துள்ளது.

 

சீனாவின் பன்மிகையொலி ஏவுகணைகள்

சீனா அண்மைக்காலங்களாக ஒலியிலும் பன்மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டி வந்தது. தற்போது அது அதில் வெற்றியும் கண்டுள்ளது. ஒலியிலும் பார்க்க பத்து மடங்கு வேகத்தில் பாயக்கூடிய ஏவுகணைகளை சீனா வெற்றீகரமாகப் பரிசோதனை செய்தும் உள்ளது. மேலும் சீனா கடந்த பத்து ஆண்டுகளாக முயற்ச்சி செய்து ஒலியிலும் பார்க்க வேகமாகப் பறக்கக் கூடிய ஆளில்லாப் போர்விமானத்தையும் உருவாக்கியுள்ளது. தாக்குதல் மற்றும் குண்டு வீச்சுக்குப் பாவிக்கக் கூடிய இந்த ஆளில்லா விமானங்கள் கறுப்பு பாணம் என்னும் குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது அமெரிக்கக் கடற்படைக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கக் கூடியது.

கடந்த சில ஆண்டுகளாக தென் சீனக் கடல் தொடர்பாக வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்த அமெரிக்கா தற்போது பல படை நகர்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்கின்றது. தென் சீனக் கடலினூடான சுதந்திரப் போக்கு வரத்தை அமெரிக்கா எப்படியும் உறுதி செய்யும் என வலியுறுத்தியும் வருகின்றது. தென் சீனக் கடல் இரு வல்லரசுகளுக்கும் இடையில் போரை ஆரம்பிக்காவிடினும் பனிப்போரை ஆரம்பித்து விட்டது.

 

2016 ஜனவரி 4-ம் திகதி தென் சீனக் கடலில் தனது இறைமைப் பிராந்தியத்தினுள் அத்து மீறியதாக வியட்னாம் குற்றம் சாட்டியுள்ளது. Spratly தீவுக் கூட்டத்தில் உள்ள Fiery Cross என்னும் பவளப் பாறையை மேடுறுத்தி சீனா உருவாக்கிய செயற்கைத் தீவில் சீனாவின் போர் விமானம் தரையிறங்கியதையே வியட்னாம் தனது இறைமைக்குள் சீனா அத்து மீறியதாகச் சொல்கின்றது. வியட்னாம் வெளியுறவுத் துறை பேச்சாளர் லீ ஹை பின் Fiery Crossஇல் விமான ஓடுபாதை சட்ட விரோதமாக நிர்மாணிக்கப் பட்டதாகத் தெரிவித்தார்.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் சீனாவின் இறையாண்மைக்குள் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட தீவுக்குள்தான் தமது விமானம் பரீட்சார்த்தமாக தரையிறக்கப் பட்டதாகத் தெரிவித்தார் என சீனச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா அறிவித்துள்ளது. தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, புரூனே,  போன்ற நாடுகள் தமது கடல் எல்லைகள் தொடர்பாக சீனாவுடன் முரண்படுகின்றன.

சீனா தென் சீனக் கடலில் உருவாக்கும் தீவுகளை செய்மதிகள் மூலம் எடுத்த படங்களில் இருந்து அங்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள், சிறப்புப் படைகளுக்கு எதிரான நடவடிக்கை நிலையங்கள், ரடார் எனப்படும் கதுவிக் கோபுரங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பாரிய கப்பல்களுக்கான துறைமுகங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கருதப் படுகின்றது.

தென் சீனக் கடலில் சீனாவின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் எதிர்க்கின்றது. சீனா பன்னாட்டுக் கட்ற்பரப்பில் சுந்திரக் கடற்போக்கு வரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தீவுகளைச் செயற்கையாக உருவாக்குவதாக அமெரிக்கா சொல்கின்றது. சீனாவின் தீவுகளுக்கு சவால் விடும் வகையில் அதன் மேலாகத் தனது போர் விமானங்களைப் பறக்க விட்டதுடன் தன் நாசகாரிக் கப்பலையும் அதற்கு அண்மையாகக் கொண்டு சென்றது. அமெரிக்கப் வெளியுறவுத் துறைச் செயலர்அஸ்டன் கார்ட்டர் ஒரு போர் உருவாகக் கூடிய அபாயம் தென் சீனக்  கடலில் உள்ளது என்றார். அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் Nimitz வகையைச் சேர்ந்த பெரிய விமானம் தாங்கிக் கப்பலான USS Ronald Reagan, வழிகாட்டு ஏவுகணைகள் தாங்கி நாசகாரிக் கப்பல்கள், குண்டு வீச்சு விமானங்கள் போன்றவை தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

எரிபொருள் பெருமளவில் இருக்கின்றது என நம்பப்படும் தென் சீனக் கடலில் 2,740,000 சதுர மீட்டர் கடற்பரப்பை சீனா தனதாக்க முயல்கின்றது. ஆண்டு ஒன்றிற்கு நான்கு ரில்லியன் டொலர்கள் பெறுமதியான வர்த்தகம் தென் சீனக் கடலின் ஊடாக நடக்கின்றது. சீனா Fiery Crossஇல் உருவாக்கிய செயற்கைத் தீ்வு 3000மிட்டர் அல்லது இரண்டு மைல் நீளமானது. இதில் பெரிய போர் விமானம் தரையிறங்க முடியும். இதனால் இந்தச் செயற்கைத் தீ்வு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த்ததாக உள்ளது.

தென் சீனக் கடலின் முக்கியத்துவத்திற்கு இரு பெரும் காரணங்கள் உள்ளன.  முதலாவது கடற்போக்கு வரத்து முக்கியத்துவம். இரண்டாவது எரிபொருள் மற்றும் கனிம வள இருப்பு. உலகக்கடற்போக்கு வரத்தில் 30 விழுக்காடு தென் சீனக் கடலினூடாகச் செல்கின்றது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிம வளங்களும் கடலுணவு வளங்களும் உண்டு. 1974இலும் 1988இலும் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லிதீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன.

சீனாவின் இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பல் உருவாக்கியதும், ஆபிரிக்காவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்ததும், ஆறு குண்டு வீச்சு விமானங்களை பசுபிக் பிராந்தியத்தில் பறக்க விட்டமையும் சீனா தனது பிராந்திய ஆதிக்கத்தில் அதிக கவனம் செலுத்துகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

தென் சீனக் கடலின் பவளப் பாறைகள் மீது கடலடி மணலை வாரி இறைத்து சீனா உருவாக்கிய தீவுகளுக்குச் சவால் விடும் வகையில் அமெரிக்காவின் வழிகாட்டு ஏவுகணை தாங்கி நாசகாரிக் கப்பலான USS Lassen அத்தீவுகளின் ஆதிக்கக் கடற்பரப்புக்குள் சென்றது. ஸ்பிரட்லித் தீவுக்  கூட்டத்தில்
(Spratly Island chain ) உள்ள Subi and Mischief reefs என்னும் பவளப்பாறைகளில் உருவாக்கப் பட்ட தீவுகளைச் சுற்றி உள்ள 12 கடல் மைல்கள் கொண்ட கடற்பரப்பு தனது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என சீனா தெரிவித்திருந்தது.  

ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கையின் படி ஒரு நாட்டின் தரையை ஒட்டிய் 12கடல் மைல் நீளக் கடற்பரப்பு  அந்த நாட்டின் படைத்துறை ஆதிக்கத்துக்கு உட்பட்டது. இது அந்த நாட்டுக்குச் சொந்தமான தீவுகளுக்கும் பொருந்தும். கடல் வற்றும் போது தெரிந்தும் கடல் பெருக்கத்தின் போது நீருள் மூழ்கியும் போகும் சிறுதீவுகளுக்கு இந்த 12 கடல் மைல் ஆதிக்கப் பரப்பு செல்லுபடியாகாது. ஏற்கனவே தமக்குச் சொந்தமான தீவை நாம் மேடுறுத்தியுள்ளோம் என்கின்றனர் சீனர்கள். ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தை சீனர்கள் Nansha Islands என அழைக்கின்றார்கள். இரண்டாம் உலகப் போரின் முன்னரே சீனா தென் சீனக்கடல் தன்னுடையது எனச் சொல்லியிருந்தது. 1980களில் சீனர்கள் அங்கு குடியிருந்தார்கள்.

இரசியா கிறிமியாவில் செய்தது நில அபகரிப்பு என்றும் சீனா தென் சீனக் கடலில் செய்வது கடல் அபகரிப்பு என்றும் சொல்கின்றனர் அமெரிக்கர்கள்.

தென் சீனக் கடலை ஒட்டியுள்ள மற்ற நாடுகள் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் சீனா நிர்மாணிக்கும் தீவுகளுக்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள்கள் விடுத்திருந்தன. அமெரிக்கப் பராளமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரும் அதை ஆதரித்திருந்தனர். சீனா பன்னாட்டுக் கடற்பரப்பிலே தீவுகளை நிர்மாணிக்கின்றது அது சுதந்திர உலகக் கப்பற் போக்கு வரத்துக்கு சவால் விடுக்கின்றது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தப் பன்னாட்டுக் கடற்பரப்பில் நாம் விரும்பிய நேரத்தில் விரும்பிய வகையில் பயணிக்கும் உரிமை எமக்கு உண்டு என்கின்றது அமெரிக்கா. அமெரிக்கா ஒரு வலிமை மிக்க நாசகாரிக் கப்பலை அனுப்பியது தென் சீனக் கடல் தொடர்பாக அதன் உறுதிப் பாட்டை எடுத்துக் காட்டுகின்றது என்றனர் படைத் துறை ஆய்வாளர்கள்.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும்  ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. 18-ம் நூற்றாண்டில் இருந்தே தென் சீனக் கடல் கடற்போக்குவரத்து தொடர்பாக பிரச்சனைக்கு உரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. ஸ்பிரட்லி தீவுகளுக்கு அடியில் மட்டும் 5.4பில்லியன் எண்ணெயும் 55.1 ரில்லியன் கன அடி இயற்கை வாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 கிழக்குச் சீனக் கடலிலும் சீனாவிற்கு சவால் விட்ட அமெரிக்கா
கிழக்குச் சீனக் கடல் வான் பரப்பில் பெரும் பகுதியை சீனா தனது வான் பாதுகாப்பிற்கு உட்பட்ட வலயம் என 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் திகதி  அறிவித்தது. அந்த வான்பரப்பில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் அனும்தி பெறவேண்டும் என்றது சீனா. இந்த வான் பரப்பு சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் சென்காகு அல்லது டயோயு தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கியது என்பதால் உலக அரங்கில் ஒரு பெரும் அதிர்வலை உருவானது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக 2013நவம்பர் 26-ம் திகதி முற்பகல் 11-00இல் இருந்து பிற்பகல் 1.22 வரை அமெரிக்கா தனது இரு பி-52 போர் விமானங்களை சீனா அறிவித்த வான் பாதுகாப்பு வலயத்திற்குள் பறக்க விட்டது.  அமெரிக்க விமானங்கள் மேற்குப் பசுபிக் கடலில் உள்ள குவாம் கடற்படைத் தளத்தில் இருந்து கிழக்குச் சீனக் கடலில் தமது பறப்புக்களை மேற் கொண்டன. இப்பறப்புக்கள் பற்றி அமெரிக்கா சீனாவிற்கு எந்த முன்னறிவிப்பையும் செய்யவில்லை. சீனா அறிவித்த வலயம்  சீனத் தரையில் இருந்து 500 மைல்கள் வரை நீண்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை சீனா அறிவித்த வான் பரப்புக்குள் பறக்க விட்டன.  தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகள் தமது கப்பல்களை சீனாவின் ஸ்பிரட்லி தீவுகளுக்கு அனுப்புமா?

2015-ம் ஆண்டு ஒக்டோபர் 27-ம் திகதி உள்ளூர் நேரம் காலை 06-40இற்கு அமெரிக்காவின் நாசகாரிக் கப்பல் USS Lassen தனது ஆதிக்கக் கடற்பரப்பினுள் வந்தமை சட்ட விரோதமானது என்றும் தனது இறையாண்மைக்கு அச்சுறுத்தாலனது என்றும் சீன அதிகாரிகள் சினத்துடன் தெரிவித்தனர். ஆனால் அமெரிக்கா  தனது சுதத்திரக் கடற்பயண நடவடிக்கை தொடர்ந்து நடக்கும் என அறிவித்துள்ளது. பன்னாட்டு விதிகளுக்கு ஏற்ப “ஒழுங்கை” நிலைநாட்டுவது தமது பணி என்கின்றது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் படைத்துறை உயர் அதிகாரிகள் இப்படி நாசகாரிக் கப்பல்களை அனுப்புவது சீனாவின் தீவு கட்டும் பணியைப் பாதிக்காது என்கின்றனர்.

போர் தொடுக்க முடியாத பங்காளிகள்
சீனாவின் மிகப்பெரிய வர்தகப் பங்காளி அமெரிக்காவாகும். அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கும் அணுப் படைக்கலன்களின் பரவலாக்கத் தடைக்கும் சீனா பங்காளியாகும்.  அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஒஸ்ரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது. தாய்வான் சீனாவின் ஸ்பிர்ட்லி தீவிக் கூட்டங்களுக்கான உரிமையை நிராகரித்துள்ளது.  கடந்த 18 மாதங்களாகா சீனா இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை ஸ்பிரட்லி தீவுக் கூட்டத்தில் மீட்டுள்ளது. தென் சீனக் கடலை ஒட்டிய மற்ற நாடுகள் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பராட்டுகின்றன. இரு பெரும் வர்த்தகப் பங்காளிகள் ஒன்றுடன் ஒன்று போர் புரிவதைத் தவிர்க்கும். தென் சீனக் கடலில் உள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு தீவை நிர்மாணித்தால் சீனாவின் எதிர்வினை எப்படி இருக்கும்? அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சி மையத்தை நோக்கிய நகர்வு பசுபிக் நாடுகளுடன் செய்து கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக ஒப்பந்தத்தால் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது. நேட்டோவைப் போல் ஒரு படைத்துறை கூட்டணியும் அங்கு உருவாகும் போது சீனாவின் நிலை மேலும் சிக்கலாகும். 

அமெரிக்கத்தூதுவரை அழைத்த சீனா
சீனாவிற்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் அமெரிக்காவின் நகர்வு மிகவும் பொறுப்பற்றது எனத் தெரிவித்தார். அத்துடன் இப்படியான ஆத்திர மூட்டும் நடவடிக்கைகள் சீனாவின் தீவு கட்டும் பணியைத் தீவிரப்படுத்தும் என சீன அரசு தெரிவித்துள்ளது. 

தென் சீனக் கடலின் 80 விழுக்காடு கடற்பரப்பை சீனா தன்னுடையது என அடம் பிடிப்பதற்கு எதிராக பிலிப்பைன்ஸ் ஹொலண்ட் நகர் ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதை விசாரிக்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப் பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பாயத்திற்கு தென் சீனக் கடல் தொடர்பாக விசாரிக்கும் நியாய ஆதிக்கம் இல்லை என்றது சீனா. ஆனால் 22015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29-ம் திகதி Permanent Court of Arbitration  தீர்ப்பாயத்திற்கு விசாரிக்கும் உரிமை உண்டு எனத் தீர்மானித்துள்ளது. அதன் தீர்ப்புக்கு சீனா கட்டுப்படவேண்டும் எனவும் அது தெரிவித்துள்ளது.  இறுதித் தீர்ப்பு 2016-ம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவரும்.  ஆனால் அதன் தீர்ப்பிற்ற்கு சீனா கட்டுப்படுமா?

தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்சீனா களையும் நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. சில நாடுகள் இது தமக்கு சொந்தமான பிரதேசம் எனவும் சொல்கின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.
எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன. தென் சீனக் கடலில் 17.7 பில்லியன் தொன் எரிபொருள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குவைத்தில் உள்ள 13 பில்லியன் தொன்னிலும் அதிகமாகும். சீன அரசு தென் சீனக் கடலின் எரிபொருள் ஆய்விற்க்கு முப்பது பில்லியன் டொலர்களைச் செலவிடத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடலை சீனா இரண்டாவது பாரசீகக் கடல் என்கின்றது. 

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி  (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.
தென் சீனக் கடலில் உள்ள பவளப் பாறைகளின் மேல் கடற்படுக்கையில் இருந்து மணலை வாரி இறைத்துப் போட்டு நிரவி சீனா பல தீவுகளை உருவாக்கி வருகின்றது. இந்தத் தீவுகளில் விமான ஓடுபாதைகளையும் படைத் தளங்களையும் சீனா நிர்மானிக்கின்றது. சீனா தீவுகளைக் கட்டி எழுப்பும் கடற்பரப்பு பன்னாட்டுக் கடற்பரப்பு என சீனாவின் அயல் நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றன. இத்தீவுகளைச் சுற்றிய 12 கடல் மைல்கள் தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றது சீனா. இதற்குச் சவால்விடும் வகையில் அந்த 12 கடல் மைல் பரப்பினுள் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கலன்களை இரண்டு வாரங்களுக்குள் அனுப்பப் போவதாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது.

எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் பலமாக முரண்படுகின்றன.

உலகக் கடற் போக்கு வரத்தில் 30 விழுக்காடு செல்லும் தென்சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் வளர்வதை பல நாடுகள் விரும்பவில்ல்லை. தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன.  மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான்,  பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில்  பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.

 பசுபிக் மாக்கடலின் இரு புறமும் உள்ள 12 நாடுகள் இணைந்து  பசுபிக்தாண்டிய கூட்டாண்மையை Trans Pacific Partnership (TPP ) உருவாக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திட்டன.  ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.   சீனாவிற்கு எதிரான  பொருளாதார, பூகோள அரசியல், மற்றும் கேந்திரோபாய நகர்வுகளின் முக்கிய பகுதியே இந்தக் கூட்டாண்மை உருவாக்கமாகும்.

 ஐக்கிய அமெரிக்கா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த தென் சீனக் கடல் ஒரு ஆபத்து நிறைந்த ஆரம்பப் புள்ளியாகும்.  சீனா உருவாக்கிய தீவுகளுக்கு அண்மையாக அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். Trans Pacific Partnership உடன்படிக்கை கைச் சாத்திட்ட பின்னரே வெள்ளை மாளிகை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. அஸ்டன் கார்ட்டர் அமெரிக்கப் படைகள் பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமைய உலகின் எப்பாகத்திற்கும் செல்லும் என்றார். ஒஸ்ரேலியாவில் நடந்த கடற்பயணம் தொடர்பான மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின்  பசுப்பிராந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் Scott Swift சில நாடுகள் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமையாமல் செயற்படுகின்றன என்றார். அந்த நாடுகள் கடற்போக்கு வரத்திற்கு கண்டபடி கட்டுப்பாடுகளும் எச்சரிக்கைகளும் விடுக்கின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அமேரிக்காவிற்கு சவால் விடக் கூடிய வகையில் வட துருவத்தில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான அலாஸ்க்காவிற்கு பராக் ஒபாமா வடதுருவ நாடுகளின் கூட்டத்திற்குச் சென்ற போது சீனா தனது ஐந்து கடற்கப்பல்களை அலாஸ்க்காவை ஒட்டிய கடற்பிராந்தியத்திற்கு அனுப்பி இருந்தது.

சீனாவின் எதிர்வினை
தான் நிர்மாணிக்கும் தீவுகள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஏற்கனவே பல பேச்சு வார்த்தைகள் நடத்திவிட்டோம் என்கின்றது சீனா. அமெரிக்கா தனது தீவுகளுக்கு அண்மையாக தனது கடற்படைக் கப்பல்களை அனுப்புவது தொடர்பாக தனது ஆட்சேபனையை ஏற்கனவே அமெரிக்காவிற்கு சீனா தெரிவித்து விட்டது. சீனாவும் தனது கடற்படைக்கப்பல்கலை தனது தீவுகளுக்கு அனுப்பும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சுதந்திரக் கடற்பயணம் என்னும் பெயரில் தனது கடல் எல்லைக்குள்
 

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி ஐக்கிய அமெரிக்காவும் வியட்நாமும் ஒன்றை ஒன்று பாதுக்காக்கும் உடன்படிக்கைக செய்து கொண்டன. ஐக்கிய அமெரிக்கா சார்பில் பாதுகாப்புத் துறைச் செயலர்  அஸ்டன் கார்ட்டரும் வியட்னாம் சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர்ஃபுங் குவாங் தானும்  “பாதுகாப்பு உறவு தொடர்பான இணை நோக்குக் கூற்று” (Joint Vision Statement) என்னும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். ஏற்கனவே ஒன்றுடன் ஒன்று போர் புரிந்த ஐக்கிய அமெரிக்காவும் வியட்னாமும் இப்போது சீனாவைப் பொது எதிரியாகக் கொண்டு ஒன்று பட்டு வருகின்றன.  சென்ற ஆண்டு வியட்னாமிற்கு எதிரான படைக்கல விற்பனைத் தடையை அமெரிக்கா தளர்த்தி இருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு 2011- ஆண்டு செய்யப்பட்ட புரிந்துணர்வுக் குறிப்பாணையின் படி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.

வியட்னாம் தனது படைக்கலன்களில் 90 விழுக்காட்டை இரசியாவில் இருந்து இறக்குமதி செய்கின்றது. வியட்னாமிற்கு அதிக அளவு படைக்கலன்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா முயல்கின்றது. ஐக்கி நாடுகள் சபையின் பன்னாட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சியை வியட்னாமியப் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. ஒரு மனித உரிமை மீறும் பொதுவுடமை நாடாகக் கருதப்படும் வியட்னாமின் படைகளுக்கு ஐக்கிய அமெரிக்கப் படைகள் பயிற்ச்சி அளிப்பதா என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஐநா பணி என்ற போர்வை பாவிக்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவிற்கும் வியட்னாமிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவின் இருபதாம் ஆண்டு நிறைவில் இரு நாடுகளும் பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவு ஆழமாக்கப்படும் என்றார் அமெரிக்க ப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஷ்டன் கார்ட்டர். வியட்னாமில் நிலவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முட்கள் போல் தடையாக இருக்கின்றது.

ஆசிப பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைத் தனிமைப் படுத்தி தனது நட்பு வட்டத்தைப் பெருக்க முயலும் அமெரிக்காவிற்கு வியட்னாமின்  உறவு முக்கியமானதாகும். 1979-சினாவும் வியட்னாமும் போர் புரிந்தன. 2014-ம் ஆண்டு மே மாதம் சீனக் கப்பல் ஒன்று  வியட்னாம் தனது எனச் சொந்தம் கொண்டாடும் கடற்பரப்பினுள் எரிபொருள் ஆய்வு வேலைகளில் ஈடுபட்டது. அதைத் தடுக்கச் சென்ற வியட்னாம் கப்பலை சீனா மூழ்கடித்தது. இது சீனாவிற்கு எதிரான உணர்வை வியட்னாமில் தூண்டியது. வியட்னாமில் உள்ள சீன முதலீகளுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. பின்பு சீன எரிபொருள் ஆய்வுக் கப்பல் இரண்டு மாதங்களில் சீரற்ற கால நிலை காரணமாக விலகிச்சென்றது. வியட்னாமின் வெளிநாட்டு வர்த்தகத்தில் சீனா பெரும் பங்கு வகிக்கின்றது. இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தகம் 24 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாகும். வியட்னாமில் உற்பத்திகளை மேற்கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உள்ளீடுகளிற்கு சீனாவில் பெரிதும் தங்கியிருக்கின்றன. பல சீன உட்கட்டுமானங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. சீனாவின் மிரட்டல்கள் அத்து மீறல்களில் இருந்து தன்னைப் பாதுகாக்க வியட்னாமிற்கு மாற்று வழி தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து பல அமெரிக்க இராசதந்திரிகள் வியட்னாமிற்குப் பயணம் செய்தனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் வியட்னாமிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் வியட்னாமின் கடற்படைத் தலைமையகத்திற்கும் ரோந்துபடைத் தலைமையகத்திற்கும் சென்றிருந்தமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

2014-ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜப்பான் வியட்னாமிற்கு போர்ப்படகுகளை வழங்க முன்வந்தது. இவற்றைத் தொடர்ந்து சீனப் பொதுவுடமைக் கட்சி யின் உயர் பீடத்தைச் சேர்ந்த ஒருவர் வியட்னாமிற்குச் சென்றார். ஆனாலும் சீன வியட்னாம் உறவு சீரடையவில்லை. இதன் பலனாக அமெரிக்காவுடன் வியட்னாம் பாதுகாப்பு உடன்படிக்கையைச் செய்துள்ளன.

 தென் சீனக் கடலில் ஸ்பிராட்லி தீவுக் கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகளை மேடுறுத்தி சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் P8-A Poseidon என்னும் வேவு விமானம் சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றது. அமெரிக்காவின் விமானத்திற்கு சீனக் கடற்படையினர் எட்டுத் தடவைகள் எச்சரிக்கைச் செய்திகளை அனுப்பினர். ஸ்பிராட்லி தீவுக் கூட்டங்களில் உள்ள பியரி குரொஸ் என்னும் பவளப்பாறையை மேடாக்கி சீனா உருவாக்கிய தீவின் மேல் இச் சம்பவம் நடந்தது.

பிலிப்பைன்ஸில் இருந்து கிளம்பிய விமானம்.                   
அமெரிக்காவின் P8-A Poseidon போர் விமானம் வேவு பார்ப்பதற்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடுவதற்கும் நீரின் மேற்பரப்பில் உள்ள கடற்கலங்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்கும் இலத்திரனியல் சமிக்ஞைகளை ஒற்றுக் கேட்பதற்கும் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட சிறப்பு விமானமாகும். ஒரு விமானத்தின் விலை 257 மில்லியன் டொலர்களாகும். சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்ட சீனாவிற்கு எதிராக P8-A Poseidon போர்விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துகின்றது. இதனால் இந்த விமானங்களை இந்தியாவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. பிலிப்பைன்ஸின் கிளார்க் விமானத் தளத்தில் இருந்து சி.என்.என் தொலைக்காட்சிச் சேவையினருடன் கிளம்பிய விமானம் 460 மைல்கள் பறந்து சீனா நிர்மாணித்த தீவின் மேல் உள்ள வான்பரப்பை அடைந்தது. சி.என்.என் தொலைக்காட்சியினர் சீனாவின் இயந்திரங்கள் கடற்படுக்கையில் இருந்து மணலை இறைத்துக் குவித்து தீவுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை தாம் அவதானித்ததாகச் தெரிவித்தார்கள். தொடர்ந்து எட்டுத் தடவைகள் எச்சரிக்கை செய்தி அனுப்பிய சீனக்கடற்படையினரின் குரலில் இறுதியில் விரக்தி தென்பட்டதாகவும் அவர்கள் செய்தி வெளியிட்டனர். அமெரிக்கப் போர்விமானம் பறந்த அதே வேளை அமெரிக்க குடிசார் விமானச் சேவையான டெல்டாவின் விமானமும் அதே பகுதியில் பறந்தது. சீனா தனது கடற்படைக்கு என ஆழ்கடல் துறைமுகங்களையும் தென் சீனக் கடலில் உருவாக்குகின்றது.

அமெரிக்கா வரைந்த செங்கோடு
சீனாவின் தீவுகளின் மேல் பறந்த பின்னர் அமெரிக்க அரசு தமது கடற்கலன்களும் விமானங்களும் பன்னாட்டுச் சட்டத்திற்கு அமைய உலகின் எந்தப் பாகத்திற்கும் செல்லும் என்றது. சீனா தென் சீனக் கடலில் செய்யும் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா ஒரு செங்கோடு வரைந்துள்ளது என ஓர் அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் விமான ஓடுபாதை                                     
பியரி குரோஸில் சீனா அமைத்த தீவில் 3000 மீட்டர் நீளமான விமான ஓடுபாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதை 2015-ம் ஆண்டின் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அங்கு சீனக் கடற்படையினர் பெருமளவில் இருந்ததாக சி.என்.என் தொலைக்காட்ச்சிச் சேவையினர் தெரிவித்தனர். ஸ்பார்ட்லித் தீவுகளில் சீனா உருவாக்கும் தீவுகள் அத் தீவுகளுக்கு உரிமை கொண்டாடும் பிலிப்பைன்ஸ், வியட்னாம், மலேசியா, தாய்வான். புரூனே ஆகிய நாடுகளைக் கலக்கமடைய வைத்துள்ளது. இந்த நாடுகளுக்கு நம்பிக்கை கொடுக்கவும் தென் சீனக் கடலினூடாக உலகக் கப்பற் போக்கு வரத்துக்குள் சுந்ததிரமாக நடமாடுவதை உறுதி செய்யவும் தான் முயற்ச்சிப்பதாக அமெரிக்கா சொல்கின்றது.

தென் சீனக் கடலின் பின்னணி
தென் சீனக் கடலானது பசிபிக் பெருங்கடலுக்கும் இந்துப் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் 3.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடற்பரப்பாகும். இது வடக்குத் தெற்காக 1800 கிலோ மீட்டர்  நீளத்தையும் கிழக்கு மேற்காக 900 கிலோ மீற்றர் நீளத்தையும் கொண்டது. தென் சீனக் கடலில் பல குட்டித் தீவுகள் உள்ளன. இவற்றில் பல தீவுகள் கடல் பெருக்கெடுக்கும் போது முற்றாக நீரில் மூழ்கிவிடும். உலக கடற் போக்கு வரத்தில் அறுபது விழுக்காடு தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. மொத்த வர்த்தக போக்குவரத்துப் பெறுமதி ஐந்து ரில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.

சீனாவின் ஒன்பது புள்ளிக் கோடு
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது சீனா. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும். தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன. சீனா தனது ஒன்பது புள்ளிக் கோட்டின் மூலம் தென் சீனக் கடலின் 90 விழுக்காடு பரப்பளவிற்கு உரிமை கொண்டாடுகின்றது.

உறுதியாக நிற்கும் சீனா
அமெரிக்காவின் வேவு விமானமான P8-A Poseidon சீனா பியரி குரொஸ் பவளப்பாறையில் உருவாக்கிய தீவின் மேற் பறந்ததால் சீனாவின் ஆத்திரத்தை அதன் வெளிநாட்டமைச்சர் வாங் யி வெளிப்படுத்தினார். சீனா தனது பிராந்திய ஒருமைபாட்டையும் இறைமையையும் பாதுகாக்கக் கொண்டுள்ள உறுதி பாறையைப் போல் உறுதியானது என்றார் அவர். பீஜிங் இந்த பிரதேச முரண்பாட்டை சுமூகமாகத் தீர்க்க முயல்கின்றது என்றும் அவர் சொன்னார்.

உலக அரங்கில் சீனா

தனது எரிபொருள் தேவையை நிறைவேற்றும் வழங்கல்களையும் வழங்கல் பாதையையும் உறுதி செய்தல், தனது நாணயத்தை உலக நாணயமாக்குதல், ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் தனது பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைத்திருத்தல் ஆகியவை சீனாவின் தலையாய கேந்திரோபாயக் கொள்கைகளாக இப்போது இருக்கின்றது. உலக வங்கிக்கும் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் போட்டியாக சீனா ஆரம்பித்துள்ள ஆசியக் கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் 57 நாடுகள் இணைந்துள்ளன. அமெரிக்காவின் அதிருப்தியையும் மீறி பிரித்தானியாவும் ஒஸ்ரேலியாவும் கூட இதில் இணைந்துள்ளன. சீனாவிற்குத் தேவையான எரிபொருளும் அதன் ஏற்றுமதிகளும் அமெரிக்க ஆதிக்கத்தில் உள்ள கடற்பரப்புக்களைக் கடந்து செல்ல வேண்டி இருக்கின்றது என்பது சீனாவின் கரிசனையாகும். அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுபட முயலும் சீனாவை ஒடுக்க தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் அமெரிக்கா பாவிப்பதாக சீனாவில் உள்ள தேசிய வாதிகள் நம்புகின்றனர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வும் அதன் ஆசியச் சுழற்ச்சி மையத் திட்டமும் தவிடு பொடியாகிவிடும் என சீனக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பியிருந்தனர். அவர்களின் நம்பிக்கையை சீனா உருவாக்கிய தீவுகளின் மேல் 2015-05-20-ம் திகதி புதன் கிழமை ஐக்கிய அமெரிக்காவின் என்னும் வேவு விமானம் P8-A Poseidon சி.என்.என் தொலைக்காட்சிக் சேவையினர் சகிதம் பறந்து சென்றமை சிதறடித்தது.

தன் வலு காட்டும் சீனா
சீனாவின் முன்னாள் அதிபர் டெங் சியொபிங் (Deng Xiaoping) “சீனாவின் படைவலுவை மறைத்துவை, தருணம்  வரும்வரை காத்திரு” என்ற கொள்கையுடன் இருந்தார். ஆனால் தற்போதைய அதிபர் சி ஜின்பிங் சீனாவின் படைவலுவைப் பகிரங்கப் படுத்தும் கொள்கையை மேற்கொண்டுள்ளார். மே மாதம் 25-ம் திகதி சீன வெளிநாட்டமைச்சு அமெரிக்க வேவு விமானம் தனது தீவின் மேலாகப் பறந்தது தொடர்பாக தனதுஆட்சேபனையை அமெரிக்காவிடம் தெரிவித்தது. அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் அஸ்டன் கார்ட்டர் தென் சீனக் கடலில் சீனா கட்டும் தீவுகளில் இருந்து 12 மைல் தொலைவில் அமெரிக்க வான் படையும் கடற்படையும் சீனாவிற்கு சவால் விடும் வகையில் செல்லக் கூடியதாகத் திட்டங்கள் வரையும்படி பணித்துள்ளார். அதேவேளைசீனப்படையினரின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய சீன மக்கள் படைத் தளபதி யாங் யுஜுன் (Yang Yujun) வெளி வல்லரசுகள் சீனப் படையினரின் மதிப்பைக் கெடுக்கும் விதத்தில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
சீனாவின் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமானவை:
1.  சீனாவின் கடற்படைக் கட்டமைப்பு சீனாவின் தேசிய பாதுகாப்புக்கும், நலன்களுக்கும் இறைமைக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்படும்
2. ஜப்பான் மீள் படைத்துறை மயமாக்கல் செய்கின்றது என்பதை சீனா கருத்தில் கொண்டுள்ளது. .
3. உலக கேந்திரோபாய ஈர்ப்பு மையம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தை நோக்கி விரைவாக நகர்கின்றது
4. அமெரிக்காவுடனும் மற்ற மேற்கு நாடுகளுடனும் முறுகல் நிலையில் உள்ள இரசியாவுடன் கேந்திரோபாய் ஒத்துழைப்பை சீனா மேற்கொள்ளும்.
5. தென் சீனக் கடலில் உரிமை கொண்டாடும் அயல் நாடுகள் ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளைச் செய்கின்ற வேளையில் வெளி வல்லரசுகள் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்கின்றன.
6. கடலிலும் பார்க்கத் தரை முக்கியமானது என்ற மரபுவழி மனப்பான்மை மாற்றப்பட வேண்டும்.
7. சீன வான்படை பாதுகாப்பிற்கு மட்டுமன்றித் தாக்குதல்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்படும்.
8. இணையவெளிப் படைப்பிரிவு உருவாக்கப்படும்.
சீனாவின் படையில் 23 இலட்சம் பேர் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 73 விழுக்காடு தரைப்படையினரும், 17 விழுக்காடு வான்படையினரும் 10 விழுக்காடு கடற்படையினரும் அடங்கும்.

தென் சீனக் கடலில் சீனாவின் விரிவாக்கம் தடுக்கப்பட முடியாது என்கின்றார் வஷிங்டன் போர்க் கல்லூரிப் பேராசிரியர் பேர்னார்ட் டி கோல்.

தற்போது உலகின் மிகப்பெரிய வேவு பார்க்கும் கப்பல் ஜப்பானுடைய 1992-ம் ஆண்டு கட்டப்பட்ட ஷிக்கிஷ்மா (Shikishima) என்னும் 7175 தொன் எடையுடைய கப்பலாகும். அத்துடன் 2012-ம் ஆண்டு இதே போன்ற இன்னும் ஒரு கப்பலை அக்கிட்சுஷிமா (Akitsushima) என்னும் பெயரில் கட்டியது. ஜப்பானுடன் கடுமையாக கிழக்குச் சீனக் கடலில் முரண்பட்டுக் கொண்டிருக்கும் சீனா உலகிலேயே மிகப்பெரிய வேவு பார்க்கும் கப்பலைக் கட்டத் தொடங்கியுள்ளது. சீனாவின் கப்பல் 10,000 தொன் எடையுள்ளது.

வேவுக் கப்பல் Haijian-50
சீனா தனது வேவுபார்க்கும் கப்பலுக்கு Haijian-50 எனப் பெயரிட்டுள்ளது. Haijian என்றால் சீன மொழியில் கடற்கண்காணிப்பு எனப் பொருள்படும். Haijian-50 வேவுக் கப்பலில் எந்த வகையான படைக்கலன்கள் பொருத்தப்படும் என்பது பற்றி எந்த விபரமும் சீன அரசால வெளிவிடப்படவில்லை. அண்மைக் காலங்களாக சீனா தனது கடற்படையை மிகவும் வலுமிக்கதாக  மேம்படுத்தி வருகிறது. ஏற்கனவே சீனா தனது லியோலிங் எனப்படும் விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியுள்ளது. சீனாவின் விமானம் தாங்கிக் கப்பலைப் பற்றிப் பார்க்க இங்கு சொடுக்கவும்: லியோனிங்.

Corvette என்பது ரோந்துக் கப்பல் 
சீனா தொழிற்சாலையில் பிஸ்கட் தயாரிப்பது போல corvette எனப்படும் சிறிய ரக கப்பல்களை அதிகம் தயாரித்து வருகின்றது. Corvette என்பது ரோந்துக் கப்பல் வகையைச் சார்ந்தவை. இவற்றை சீனா ஆழமற்ற கடல்களான தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் பாவிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. சீனாவின் கப்பல்கள் Type 056 என்னும் கப்பல்வகையைச் சார்ந்தவை. இவற்றில் தற்பாதுகாப்பு படைக்கலன்களும் கப்பல்களையும்  நீர் மூழ்கிகளையும் தாக்கியழிக்கக் கூடிய 76மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும் 30 மில்லி மீட்டர் துப்பாக்கிகள் இரண்டும் பொருத்தப்பட்டிருக்கின்றன.  சீனாவின் இந்த ரோந்துக் கப்பல்கள் அமெரிக்காவின் Phalanx CIWS ரோந்துக் கப்பல்களை ஒத்தவையாகக் கருதப்படுகின்றன. அத்துடன் சீனாவின் பறக்கும் சிறுத்தைகள் எனப்படும் ஏவுகணைகளும் 134 மைல்கள் ஒலியிலும் இரு மடங்கு வேகத்தில் பாயக் கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளும் இந்த ரோந்துக் கப்பல்களில் உள்ளன. மேலும் torpedo வகையைச் சேர்ந்த நீர்மூழ்கி எதிர்ப்பு  ஏவுகணைகளும் உள்ளன. ஒரு உழங்கு வானூர்தியையும் இந்த ரோந்துக் கப்பல் தாங்கிச் செல்லும். இந்த வகை ரோந்துக் கப்பல்கள் இருபதை சீனா இப்போது உருவாக்கிக் கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சீனாவின் நாசகாரிக் கப்பல்கள்
சீனா Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல்களையும் உருவாக்கி வருகின்றது. இவற்றின் முக்கிய பணி மற்றக் கடற்படைக்கலன்களை விமானத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதாகும். இதன் முன்புறமும் பின்புறமும் 32 ஏவுகணைகள் கொண்ட ஏவுகணை வீசிகள் இரண்டு உள்ளன. சீனாவின் HQ-9 வ்கையைச் சேர்ந்த செம்பதாகைகள் என்னும் ஏவுகணை எதிப்பு முறைமை இவற்றில் உண்டு. அத்துடன் ஒரு உழங்கு வானூர்தி்யையும் சீனாவின் Type 052D வகையைச் சார்ந்த நாசகாரிக்கப்பல் தாங்கிச் செல்லக் கூடியது.

Type 071 amphibious landing dock
சீனாவின் Type 071 amphibious landing dock எனப்படும் நீரிலும் நிலத்திலும் பயணிக்கும் கப்பல் 400முதல் 800 பேரைக் கொண்ட ஒரு படையணியையும் 18 கவச வண்டிகளையும் உழங்கு வானூர்த்களையும் தாஙகிச் செல்லக் கூடியவை. அத்துடன் இந்தக் கப்பலில் பல ஈரூடக வண்டிகளும் இருக்கின்றன. இந்தவகைக் கப்பல்கள் பலவற்றை சீனா உருவாக்கி வருகின்றது.

Dongdiao வேவு-கண்காணிப்புக் கப்பல்கள்
சீனாவின் Dongdiao வேவு மற்றும் கண்காணிப்புக் கப்பல்கள் தற்போது இரண்டு இருக்கின்றன. அத்துடன் மேலும் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவற்றை  உளவுக் கப்பல்கள் என்றும் கூறுவர்.

தனது படைக்கலன்களை திட்டமிட்டுப் பெருக்கி வரும் சீனா இந்த ஆண்டு தென் சீனக் கடலில் தனது வலுவை உலக அரங்கில் நிச்சயம்  அரங்கேற்றும்.