Archive for the ‘செய்திகள்’ Category

அமெரிக்காவுடன் பல துறைகளில் முரண்படும் நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, நேட்டோவில் இணைய முயலும் இரசியக் கவச நாடுகளான உக்ரேனும் ஜோர்ஜியாவும், தென் அமெரிக்காவரை தன் பொருளாதார ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் சீனா, சீனாவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கும் இரசியா, அமெரிக்காவுடன் படைத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்கும் இந்தியா, தன் படைவலுவை அதிகரித்துக் கொண்டிருக்கும் ஜப்பான், தமது பாதுகாப்பு அமெரிக்காவில் தொடர்ந்து தங்கியிருக்க முடியுமா எனச் சிந்திக்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் என பல வழிகளிலும் பன்னாட்டு உறவுகள் மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஏற்ப நாடுகள் தமது படைத்துறையை வலிமையாக்கிக் கொண்டிருக்கின்றன.

 

மாற்றம் தொடரும்

நேட்டோ தேவையற்ற என்ற கருத்துடன் அரசியலுக்கு வந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதன் உறுப்பு நாடுகள் மீது கடுமையான தாக்குதல்களைச் செய்கின்றார். ஐரோப்பிய ஒன்றியம் தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே திரிபு படுத்துகின்றது என்கின்றார். உலக நாடுகள் இணைந்து செய்த சூழல் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்குகின்றார். ஜேர்மனியுடனும் மற்ற வல்லரசு நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் செய்த ஒப்பந்தத்தை ஒரு தலைப்பட்சமாக இரத்துச் செய்கின்றார். உலக வர்த்தகத்தைக் குழப்புகின்றார். டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளை இட்டுக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் இப்படி ஒரு நண்பன் எமக்கு இருக்கையில் எமக்கு எதிரிகள் தேவையில்லை என்றார். அமெரிக்காவே முன்னின்று உருவாக்கிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கை டிரம்ப் நிர்மூலம் செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் டிரம்ப் என்பவர் ஒரு தனிப்பட்ட மனிதர். அவர் நான்கு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருந்து விட்டுப் போய்விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடையே டிரம்பிற்கு 90 விழுக்காடு ஆதரவு இருக்கும் போது டிரம்ப் தனிமனிதரல்லர் என்பது உறுதியாகின்றது. டிரம்ப்வாதம் என ஒன்று உருவாகிவிட்டது. டிரம்ப் போனாலும் அது தொடர்ந்து இருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் மார்கரட் தட்சர் ஆட்சியில் இருக்கும்போது அவரோடு அவரது தட்சர்வாதம் போய்விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத இடமான தொழிற்கட்சியில் இருந்து ரொனி பிளேயர் மோசமான தட்சர்வாதியாக உருவாகினார். அது போலவே டிரம்பிற்கும் யாராவது மோசமான வாரிசு வரமாட்டார் சொல்ல முடியாது என்ற நிலையில் உலக ஒழுங்கில் டிரம்பிற்கு பின்னர் ஏற்பட்ட மாற்றம் மாற்ற முடியாமல் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாறிய நிலைமை

1991இன் இறுதியில் நடந்த சோவித் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மேற்கு நாடுகள் எனப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் தமது படைத்துறைச் செலவுகளைக் குறைத்தன. பின்னர் இரசியா 2014-ம் ஆண்டு இரசியா கிறிமியாவை தன்னுடன் இணைத்துடன் சிரியாவில் மேற்கு நாடுகள் தமது படைத்துறைச் செலவை அதிகரித்தன. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் பாதுகாப்புச் செலவு அதிகரிப்பில் மந்த நிலை உருவானது. தற்போது மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சூழல் சீரடைய தொடங்கிய நிலையில் மேற்கு நாடுகளில் பிரபல்யவாதமும் தேசியவாதமும் தலை தூக்கியுள்ள நிலையில் மேற்கு நாடுகளிடையேயான ஒற்றுமை கேள்விக்குறியாகியுள்ளது.

மாறுமா ஜேர்மனி? அணுக்குண்டு தயாரிக்குமா?

அண்மையில் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் ஐரோப்பியரிடையே அமெரிக்கா மீதான வெறுப்பு பரவலாக இருந்தது. ஆனால் மேற்கு ஐரோப்பியர்கள் இப்போது அமெரிக்கா இல்லாத ஐரோப்பாவை இட்டு அச்சமடைந்துள்ளனர். 1940களில் ஐரோப்பியத் தலவர்கள் தமது பதையை இட்டு தெளிவாக இருந்தனர். இப்போது உள்ள தலைவர்கள் எப்படிப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். கிஸ்ஸிஞ்சரின் கருத்து அமெரிக்க உலக ஆதிக்கத்தை மற்ற  நாடுகள் ஏற்று அதற்கு ஏற்பட நடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாக இருந்தாலும் தற்போதைய மேற்கு ஐரோப்பியத் தலைவர்கள் தமது பிராந்தியத்தை வழி நடத்தக் கூடிய சிந்தனை அற்றவர்களாக உள்ளனர் என்பது உண்மை. நேட்டோ நாடுகளைப் பொறுத்தவரை இரசியாவின் அச்சுறுத்தலுக்கு அதிகம் உள்ளாகியுள்ள நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும். ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டிருப்பதாலும், உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக இருப்பதாலும் கடந்த காலம் போர் நிறைந்ததாக இருப்பதாலும் ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கு மற்ற நாடுகளை நம்பி இருக்க முடியாது. ஜேர்மனி தனது பாதுகாப்பிற்கான உடனடி நடவடிக்கையாக அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடிய விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. F-35, F-15. F/A-18 ஆகியவற்றை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இச் செய்தி வந்ததும் ஜேர்மனி அணுக்குண்டுகளை உற்பத்தி செய்யப்போகின்றது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டு ஜேர்மனி மற்ற நட்பு நாடுகளான, அமெரிக்கா, பிரித்தானியா. பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுடன் செய்து கொண்ட பரிஸ் உடன்படிக்கையின்படி ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்வதில்லை என ஒத்துக்கொள்ளப்பட்டது. தற்போது உலகிலேயே அதிக அளவிலும் உயர்ந்த தரத்திலும் யூரேனியத்தைப் பதன் படுத்தும் ஜேர்மனியால் அணுக்குண்டு தயாரிக்கக் கூடிய தொழில்நுட்ப அறிவு உண்டு. இரசியாவின் அணுக்குண்டுகளில் இருந்து ஜேர்மனிக்கான கவசத்தை அமெரிக்கா வழங்காவிடில் ஜேர்மனி அணுக்குண்டு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு ஜேர்மனியர்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கின்றது.

புதுப்பிக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் போர் விமானங்களில் மிகவும் பிரபலமானவை அதனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களான F-22 வும் F-35வும் ஆகும். F-22 பல போர்முனைகளில் வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளது. அது எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாத சிறந்த புலப்படா விமானமுமாகும். F-35 போர்களங்களில் இன்னும் பெரிதாகப் பாவிக்கப்படாத புலப்படாப் போர்விமானங்கள். அவை கணினி மயமாக்கப் பட்ட விமானங்களாகும். எதிரி விமானங்கள் F-35ஐ கண்டறிய முன்னர் F-35 எதிரி விமானங்களை கண்டறிந்து அழித்துவிடும். சீனாவினதும் இரசியாவினதும் வான் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருதும் அமெரிக்கா F-22இன் உடலையும் F-35இன் மூளையையும் கொண்ட புதிய போர்விமானங்களை உருவாக்க அமெரிக்க விமான உற்பத்தி நிறுவனமான லொக்கீட் மார்ட்டின் திட்டமிட்டுள்ளது.

மாறுமா இரசிய சீன உறவு?

Vostok 2018, என்னும் பெயரில் 2018 செப்ரம்பர் 11-ம் திகதி முதல் 15-ம் திகதி வரை ஒரு படைப்பயிற்ச்சியைச் செய்யவுள்ளது. Vostok 2018 தமிழில் கிழக்கு-2018 எனப்பொருள்படும். பனிப்போர் முடிவுக்குப் பின்னர் இரசியா செய்யும் மிகப்பெரிய இந்தப் படைபயிற்ச்சியில் சீனாவும் இணையவுள்ளது. இரசியத் தரப்பில் 300,000 படையினரும் ஆயிரம் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்படவுள்ளன. கடைசியாக இரசியா செய்த பெரும் போர்ப்பயிற்ச்சி 1981-ம் ஆண்டு நடந்தது. சோவியத் ஒன்றிய காலத்தில் நடந்த அப்பயிற்ச்சியில் 150,000 படையினர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டனர். சீன மக்கள் விடுதலைப்படையின் சார்பில் 3200 படையினரும் 30 விமானங்களும் ஈடுபடவுள்ளன. இரசியாவின் தூர கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சுகோல் பயிற்ச்சி நிலையத்தில் இப்படைப்பயிற்ச்சி இடம்பெறவுள்ளது. சிரியப் போரில் 200வகையான படைக்கலன்களையும் கருவிகளையும் பாவித்த இரசியர்களின் அனுபத்தை சீனப்படையினர் நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சீறுமா இரசியா சிரியாவில்?

சிரியாவின் வட பிராந்தியத்தில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா மற்றும் கசக்கா மாகாணங்களில் அமெரிக்கப்படையினர் இரண்டாயிரம் வரை நிலை கொண்டுள்ளனர். சிரியாவில் வேறு ஒரு வெளிநாட்டுப் படைகளும் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை இரசியா தற்போது எடுத்துள்ளது. சிரிய அரசும் அமெரிக்கப்படைகளை வெளியேறும் படியும் குர்திஷ் போராளிகளை அந்த இரு மாகாணங்களின் கட்டுப்பாட்டை தம்மிடம் ஒப்படிக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் 2018 ஓகஸ்ட் 28-ம் திகதி இரசியாவின் பெரும் கடற்படைப் பிரிவு ஒன்று சிரியாவில் தரையிறங்கியுள்ளது. சிரியாவில் எஞ்சியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இத்லிப் மாகாணத்திலும் பெரும் போர் ஒன்று வெடிக்கும் ஆபத்து உள்ளது.

இரசியப் போர்விமானங்களில் செயற்கை விவேகம்

இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானமான SU-57 இல் செயற்கை விவேகம் இணைக்கப் படவிருக்கின்றது. பற்பணிப் போர்விமானமான SU-57 ஒரு போர் நிலை என்று வரும் போது முழுக்க முழுக்க கணினிகளின் உதவியுடன் தானாகவே சிந்தித்துச் செயற்படும். SU-57 2019-ம் ஆண்டு இரசியாவில் பணியில் ஈடுபடுத்தப்படும். அதற்கான பயிற்ச்சிப் பறப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்கா வெற்றிகரமாக செய்து முடித்த செங்குத்தாக விமானங்கள் தரையில் இருந்து (உலங்கு வானூர்தி போல்) பறந்து செல்லும் தொழில்நுட்பத்தை இரசியாவும் உருவக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தொழில் நுட்பம் விமானம் தாங்கிக் கப்பலில் பாவிக்கும் விமானங்களில் இணைக்கப்படவுள்ளன.

 

குழவிப் போர் முறைமை (Swarm Warfare)

இதுவரை காலமும் குழவிப் போர் முறைமை என்பது சமச்சீரற்ற போரில் (asymmetric warfare) பிரயோகிக்கப்படுகின்ற ஒன்றாக இருந்தது. அதில் வலிமை மிக்க எதியின் மீது வலிமை குறைந்த படையினர் பெருமளவில் திடீர் அதிரடித் தாக்குதலை நடத்துவதாகும். எதியில் பதில் தாக்குதல் பல படையினர் கொல்லப்பட்டாலும் ஒரு சில படையாவது எதிரியின் இல்லைக்கில் சேதத்தை விளைவிப்பது இதன் அடிப்படை உத்தியாகும். உதாரணத்திற்கு ஒரு பெரிய கப்பலை நோக்கிப் பல சிறுபடகுகளில் தாக்குதல் செய்வதாகும். பெரும் கப்பலின் தாக்குதலால் பல படகுகள் அழிக்கப்பட்டாலும் ஒரு படகாவது வெடிபொருட்களுடன் சென்று எதிரியின் பெரிய கப்பல் மீது மோதி அழிக்கும். தற்போது குழவிப் போர் முறைமை உயர் தொழில்நுட்பப் போரில் கையாளப்படுகின்றது. அமெரிக்காவின் மிகப் புதிய விமானங்களான F-35 போர் விமானங்கள் தமக்கிடையேயான தொடர்பாடல்களைச் சிறப்பாகச் செயற்படக்கூடியன. அத்துடன் எதிரியின் விமானங்கள், உணரிகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் F-35 போர் விமானங்களை இனம் காணமுன்னதாக F-35 எதிரியை இனம் கண்டு தாக்குதல் தொடுக்கத் தொடங்கிவிடும். பல F-35 போர் விமானங்கள் கூட்டாக தாக்குதல் செய்யக் கூடியவை. அவற்றை இனம் காண்பது எதிரிக்குக் கடினம். பல F-35 ஒன்றாகப் பறக்கும்போது ஒரு விமானம் எதிரியின் வானிலோ தரையிலோ கடலிசோ உள்ள இலக்கை உணர்ந்து கொண்டால் அது அது தான் தாக்குதல் செய்யாமல் தன்னுடன் இணைந்து பறக்கும் விமானத்தில் உள்ள ஏவுகணையை எதிரியின் மீது வீசும். இச் செயற்பாடு மனித செயற்பாடின்றி செயற்கை விவேகத்தின் மூலம் விமானங்கள் தாமாகவே செயற்பட்டு எதிரியின் இலக்கின் மீது தாக்குதல் நடக்கும். இந்த வகையில் அமெரிக்காவின் F-35 செயற்படும் போது இரசியாவின் SU-35 போர்விமானங்களையும் S-400 ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளையும் அழித்துவிடும் வாய்ப்பு அதிகம் உண்டு.

சீனாவின் நித்திரையைக் குழப்பும் குவாம் தீவு

இது வரை காலமும் தனது வான்பரப்புக்குள் மட்டும் தனது போர்விமானங்களின் பறப்புக்களையும் பயிற்ச்சிகளையும் பெருமளவில் செய்து வந்த சீன வான் படையினர் 2018 ஓகஸ்ட் மாதம் தமது புதிய பெரிய விமானமாகிய H-6Kஐ பன்னாட்டு வான் பரப்பில் பறக்க விட்டனர். இவை அணுக்குண்டுகளைத் தாங்கிச் செல்லக் கூடியவை. பசுபிக் கடலில் உள்ள குவாம் தீவில் இருக்கும் அமெரிக்காவின் படைத்தளத்தை இட்டு சீனா எப்போதும் அதிக கரிசனையுடனேயே இருக்கின்றது. இதுவரை காலமும் அதைக் கருத்தில் கொண்டு சீனா தனது ஏவுகணைகளில் அதிக கவனம் செலுத்தியது. இப்போது வான் படையிலும் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. 2018 ஒகஸ்ட் ஆரம்பத்தில் தைவானிற்கான படைத்துறை உதவிகளை அதிகரிக்கும் சட்டத்தை அமெரிக்கப் பாராளமன்றம் நிறைவேற்றியதும அதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியதும் சீன ஆட்சியாளர்களை கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அந்த சினத்தை சீனா H-6Kஐபோர்விமானங்களின் பறப்புக்கள் மூலம் பகிரங்கமாகவும் வட கொரிய விவகாரத்தில் இரகசியமாகவும் காட்டியுள்ளது. இதனால் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் வட கொரியாவிற்கு செல்லவிருந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டது. 2018இல் சீனாவின் படைவலு தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 2018 ஓகஸ்ட் மாதம் 16-ம் திகதி வெளிவிட்ட அறிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனா தனது வானில் இருந்து கடற்பரப்புக்கு செய்யும் தாக்குதல்களின் திறனை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பசுபிக் மாக்கடலின் மேற்குப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவினதும் அதன் நட்பு நாடுகளின் படை நிலைகளை இலக்காகக் கொண்டே சீனா இதைச் செய்வதாக அந்த 130பக்க அறிக்கை தெரிவிக்கின்றது.

மாறிவரும் நாடுகளிடையான உறவு மட்டுமல்ல பொருளாதார மற்றும் வர்த்தகப் போட்டிகளையும் படை வலிமையின் பங்கு அதிகரித்துச் செல்வது ஓரு பேரழிவிற்கான ஆபத்தை அதிகரிக்கின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலத்தின் அல்ரூனா நகரில் ஓர் இரசிய இளைஞர் பேரழிவு விளைவிக்கக் கூடிய குண்டு செய்யும் மூலப்பொருள்களுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்ரூனா நகர் காவற்துறையினர் தாம் கைது செய்தது விளடிச்லாவ் மிஃப்டகோவ் (Vladislav Miftakhov) என்னும் பெயருடைய 19வயது இரசிய இளைஞர் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் அல்ரூனா நகரின் பென் பல்கலைக்கழக மாணவராவார்.

விளடிச்லாவ் மிஃப்டகோவிடம் கைப்பற்றப்பட்டவற்றுள் a pound of atomized magnesium, Chinese potassium perchlorate, potassium nitrate powder, containers of compressed air and fuses, ஆகியவை இருந்தன. அவர் தனது வீட்டில் போதைப் பொருள்களையும் பயிரிட்டிருந்தார். அந்த இளைஞரின் நோக்கம் என்ன எந்த இடத்தை தாக்க முற்பட்டார் போன்ற விபரங்களை அல்ரூனா நகரக் காவற்துறையினர் வெளிவிட மறுத்து விட்டனர். கைசெய்யப்பட்ட இரசிய இளைஞர் விளடிச்லாவ் மிஃப்டகோவ் கலிபோர்ணியாவில் தனது குண்டுகளை வெடித்துப் பரிசோதனை செய்ததாகவும் தெரிவித்தனர். அத்துடன் குண்டு செய்யத் தேவையான பொருட்களை விளடிச்லாவ் மிஃப்டகோவ் இணையத்தில் வாங்கியதாகத் தெரிவித்தார் என்கின்றனர் காவற்துறையினர்.

இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனரும் அமெரிக்காவிற்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தியவருமான ஜூலியான் அசாஞ்சே உலக மக்களுக்கு ஆகஸ்ட 19-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை உரையாற்றியுள்ளார். தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு எதிரான மாய வேட்டையை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு அசாஞ்சே தனது உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தின் முதலாம் மாடியில் இருந்து கொண்டு உலக மக்களுக்கு சுமார் ஒன்பது நிமிடங்கள் உரையாற்றிய ஜூலியான் அசாஞ்சே தனது ஆதரவாளர்களுக்கும் தென் அமெரிக்கச் சிறிய நாடான எக்குவேடருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் பல நாடுகளுக்கும் முக்கியமாக ஆர்ஜென்ரீனா, எல் சல்வடோர், பொலிவியா, கொண்டூரஸ், மெக்சிக்கோ, பிரேசில், சிலி, கொலம்பியா, நிக்கரகுவா, பெரு, வெனிசுலேவியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியாவில் வாழும் தனது ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். 41 வயதான அவரது உரையைக் காண பெரும் தொகையான மக்கள் திரண்டிருந்தனர். தனது ஆதரவாளர்களும் உலகமும் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருப்பதால் பிரித்தானிய வியன்னா உடன்படிக்கையை மீறி தூதுவரகத்துள் நுழைய முடியாமல் இருப்பதாகக் அசாஞ்சே தெரிவித்தார்.

மிரட்டிய பிரித்தானியா. ஆத்திரமடைந்த எக்குவேடர்.
எக்குவேடர் நாட்டு வெளிவிவகார அமைச்சர் இலண்டனில் உள்ள தமது தூதுவரகத்தில் நுழைந்து ஜுலியன் அசாஞ்சேயை கைது செய்யப் போவதாக மிரட்டியதாகச் செய்த குற்றச்சாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 16-ம் திகதி எக்குவேடர் தூதுவரகத்தை பிரித்தானியக் காவற்துறையினர் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தென் அமெரிக்காவில் உள்ள 12 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தைக் ஆகஸ்ட் 18-ம் திகதி கூட்டினார் எக்குவேடர் வெளிநாட்டமைச்சர். அக்கூட்டத்தில் பிரிந்தானியாவின் மிரட்டலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அசாஞ்சே ஆதரவாளரக்ள் கைவரிசை!
அமெரிக்கா செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பிய கியூரோசிட்டி ஆய்வு வாகனத்தை ஜுலியன் அசாஞ்சேயின் ஆதரவாளரகள் இணைய ஊடுருவல் மூலம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாகச் செய்திகள் வெளிவந்தன. ஆனால் நாசா அதை முறியடித்து விட்டதாம்.

ஜூலியன் அசாஞ்சேயின் உரையின் காணொளி:

ஜுலியன் அசாஞ்சே தொடர்பான முந்தைய பதிவு: பெரும் இழுபறியில் விக்கிலீக் அசாஞ்சே

இலண்ட னில் உள்ள ஒரு பிரபல கோவிலில் மிகவும் வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உண்மை உடை மாற்ற முன்னர் பொய் உலகத்தைச் சுற்றிவிடும். அதன் படியே மேற்படி ஆலயத்தில் நடந்த சம்பவம் பற்றியும் பல கதைகள் பரவத் தொடங்கிவிட்டன.

பிரித்தானியக் கோவில்களும் பக்தர்களும்
பிரித்தானியாவில் கோவில்கள் மிகுந்த வருமானத்துடன் இயங்கின்றன. சில நல்ல திருப்பணிகளை தாயகத்தில் வாழும் மக்களுக்குச் செய்கின்றன. ஆலயத்தின் வருவாய் அங்கு வரும் பக்கதர்களின் எண்ணிக்கையில் பெரிதும் தங்கியுள்ளது. பிரித்தானியாவில் வாழும் ஒரு குடும்பத்தில் வேலையால் வந்த குடும்பத் தலைவிக்கு வெளியில் செல்வதாயின் முதலில் குடும்பத்தில் உள்ளவர்களின் இரவுச் சாப்பாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கோவிலுக்குப் போவதாயின் அப்படியே. பிரித்தானிய ஆலயங்களில் பூசை முடிந்தபின்னர் நல்ல சுவையான உணவு வழங்கப்படுவதுண்டு. இது உண்மையான கடவுள் அன்புடன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு வசதியாக அமைந்துவிடும். வேலையால் வந்தவுடன் குளித்துவிட்டு கோவிலுக்குப் போய் அங்கு கும்பிட்டுவிட்டு ஆலயத்திலேயே உணவை அருந்திவிட்டு வீடு வரலாம். சிலரின் பிள்ளைக வீட்டில் படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் போகும் போது பிள்ளைகளுக்கும் உணவு எடுத்துச் செல்வார்கள். ஆனால் இந்த உணவை உண்பதற்கென்றே சில “பக்த கோடிகள்” ஆலயம் செல்வதுண்டு.

வெளியில் தள்ளிவிடப்பட்ட பக்தர்
மேற்படி அசம்பாவிதம் நடந்த கோவிலில் ஒருவர் தினமும் குடித்து விட்டு மதுமயக்கத்தில் ஆலயம் சென்று தனக்கு உரிய நேரத்திற்கு முதல் உணவு வழங்கவேண்டும் என்று அடம் பிடிப்பதுண்டு. சிலசமயங்களில் பெண்கள் கூட்டத்திற்குள்ளும் நுழைந்துவிடுவார். இது பலரைப் பொறுமை இழக்கச் செய்வதுண்டு. 17/08/2012 வெள்ளிக்கிழமை வழமை போல் மேற்படி ஆலயம் அடியார்களாலும் “பக்தர்களாலும்” நிறைந்து வழிந்தது. அப்போதும் அக்குடிமகன் மது போதையில் ஆலயத்துக்குள் சென்று வழமையிலும் அதிகமாகக் கலாட்டா செய்தாராம். அதனால் ஆத்திரமடைந்த ஒருவர் அவரை ஆலயத்துக்கு வெளியே இழுத்துச் சென்று தள்ளிவிட்டார். ஆனால் அக்குடிமகன் தள்ளாடி விழுந்து நடைபாதை விளிம்பில் தலை அடிபட்டுவிட்டது. இரத்தப் பெருக்குடன் விழுந்த ஒருவரைப் பார்த்த பிரித்தானியப் பெண் ஒருத்தி உடன் காவற்துறைக்கு அவசர சேவைப்பிரிவிற்கும் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்தார். அங்கு விரந்த காவற்துறையினரும் அவசர சேவைப்பிரிவினரும் காயப்பட்டவரை மருத்துவ மனைக்கு அனுப்பினர். விசாரணையின் போது பிரித்தானியப் பெண் காயப்பட்டவரைத் தாக்கியவர் ஆலயத்துக்குள் சென்றுவிட்டார் என்று சொல்லிவிட்டார். காவற்துறையினர் ஆலயத்தைச் சூழ்ந்து கொண்டு உழங்கு வானூர்தி மூலமும் யாராவது தப்பி ஓடுகிறார்களா என்றும் கண்காணித்தனர்.
ஆலயத்தின் உள்ளுக்குள் இருப்பவர்கள் வெளியில் செல்லாமலும் வெளியில் இருந்து யாரும் உள்ளுக்கு செல்லாமலும் தடுப்புக்கள் போடப்ப்ட்டன. உடனே குறுந்தகவல்கள் மூலம் கண்டபடி செய்திகள் பரவின.

 வதந்திகள்
காயப்பட்டவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியவில்லை. அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்கின்றனர் சிலர். சிலர் அவர் இறந்து விட்டார் என்கின்றனர். இப்போது இதுபற்றிப் பல வதந்திகள் அடிபடுகின்றன. சம்பவம் நடந்த போது ஆலயக் கண்காணிப்புக் காணொளிப்பதிவு வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தும் காவற்துறையினர் காணொளிப்பதிவுகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கோவிலைப் பற்றி அதன் உண்மையான அடியார்கள் கூறுவது:

  • பிரித்தானியாவிலேயே அதிக அளவு பணத்தை இலங்கையில் தமிழர் நலன்களுக்காக அனுப்பிய கோவில் இது.
  • மூர்த்தீகரம் நிறைந்த கோவில் இது. இங்கு எலுமிச்சை விளக்கேற்றி தொடர்ந்து தொழுபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறியுள்ளன.

சிலர் பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய தமிழர்கள் தங்களுக்கு பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர் வழங்கிய காணிக்கைகளால் வளர்ந்த கோவில் இது என்கின்றனர்.

விக்கிலீக் என்னும் இணையத்தளத்தின் மூலம் அமெரிக்காவின் உலகெங்கும் உள்ள தூதுவராலயங்கள் படைத்தளங்களுக்கிடையிலான இரகசிய தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் அம்பலப் படுத்திய தகவல்கள் அமெரிக்காவையும் பல நாடுகளையும் சஞ்சலத்திற்கு உள்ளாக்கியது. ஈராக்கில் அமெரிக்கப்படைகள் செய்த அட்டூழியங்கள், குவாட்டனாமோ சித்திரவதைகள், அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது செய்யப்பட்ட மின்னஞ்சல்கள், ஷெல் எரிபொருள் நிறுவனம் நைஜீரிய அரசில் ஊடுருவியமை, சவுதி இளவரசரின் பாலியல் மற்றும் போதைப்பொருள் சாகசங்கள், சவுதி அரேபியா அல்கெய்தாவிற் நிதி உதவி செய்தமை, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா ஒற்றாடியமை, அமெரிக்க இரசியாவை மாபிய அரசு எனக் கருதியமை, ஈரானைத் தாக்கும் படி சவுதி மன்னர் அமெரிக்காவைத் தூண்டியமை எனப்பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தினார்.

குற்றம் சாட்ட முடியாமல் திணறிய அமெரிக்கா
விக்கிலீக்கினால் வெளிவிடப்படும் தகவல்கள் அமெரிக்கப் படைத்துறையைச் சேர்ந்த பிரட்லி மன்னிங் (Bradley Manning) என்பவரால்தான் பெறப்பட்டு விக்கிலீக்கிற்கு வழங்கப்பட்டது. இதில் பிரட்லி மன்னிங் (Bradley Manning)தான் தகவல் திருடியவராகக் கருதப்படவேண்டியவர். அவற்றை பிரசுரித்த குற்றம் தான் விக்கிலீக்கிற்க்கும் அதன் நிறுவனர் ஜுலியான் அசங்கே புரிந்ததாகக் குற்றம் சாட்டப்படமுடியும். அமெரிக்க அரச அல்லது படைத்துறை இரகசியங்களை திருடியவர்மீது குற்றம் சுமத்தப் பட்டு தண்டிப்பது அமெரிக்காவில் நடந்துள்ளது. அந்த இரகசியங்களை பிரசுரித்தவர் மீது எப்படி குற்றம் சாட்டுவது என்று அமெரிக்க இதுவரை தேடிக்கொண்டிருந்தது. கடைசியில் அமெரிக்க மக்களவை ஆய்வாளர்கள் ஒற்றாடல் சட்டத்தின் கீழ் ஜுலியான் அசங்கேயை மாட்டக்கூடிய ஒரு சட்டப் பிரிவை கண்டு பிடித்துள்ளனர். ஆனால் ஒரு பிரசுரிப்பாளரை அந்தச் சட்டப்பிரிவுகளின் கீழ் இதற்கும் முன் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க சட்டவாளர்கள் திணறினர்.

வித்தியாசமான சட்டங்களைக் கொண்ட சுவீடன்.
பல தகவல்களை ஜுலியான் அசஞ்சே அம்பலப் படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு ஒன்று சுவீடனில் பதிவு செய்யப்பட்டது. சுவீடன் தேசத்துச் சட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் வித்தியாசமானவை. சுவீடனில் ஜூலியான் அசங்கே தனது இணையம் விக்கிலீக்கில் அமெரிக்க இரகசியங்களை வெளிவிடுவது குற்றம் ஆகாது. அதனால் அவர் அங்கிருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுவீடன் அரசிடம் விண்ணப்பித்திருந்தார். சுவீடனில் கற்பழிப்புச் சட்டங்களும் விநோதமானவை. ஆகஸ்ட் மாதம் 11-ம் 18-ம் திகதிகளில் ஜூலியான் அசங்கே இரு பெண்களுடன் அவர்களின் சம்மதத்துடன் மேற்கொண்ட உடலுறவு அவருக்கு எமனானது. முதற் பெண்ணுடன் உறவு கொள்ளும் போது பாவித்த ஆணுறை கிழிந்து விட்டது. இரண்டாவது பெண் ஆணுறை அணியச் சொல்லியும் ஜூலியான் அசங்கே ஆணுறை அணியாமல் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது உடலுறவு கொண்டாராம். இவை இரண்டும் சுவிடன் நாட்டுச் சட்டப்படி குற்றமாகுமாம். ஆனால் இரு பெண்களும் தங்கள் சம்மதத்துடனேயே உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இரு பெண்களும் ஜூலியான் அசங்கேஇற்கு அமெரிக்காவால் வைக்கப்பட்ட பொறியா என்ற கேள்வியும் எழுந்தது.

விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் குற்றத்தின் பின்னணி
ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் போரில் ஊடகங்களின் பங்கு பற்றி ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) நடந்த மாநாட்டில் உரையாற்ற ஜுலியன் அசாஞ்சே என்னும் அவுஸ்த்திரேலியாவில் பிறந்த முன்னாள் கணனி ஊடுருவி(computer hacker) அழைக்கப்படுகிறார். மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மத்திய இடதுசாரி சகோதரத்துவ இயக்கம். இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய அழகி-1 (இவர் பெயர் வெளிவிடப்படவில்லை) ஜுலியன் அசாஞ்சேயுடன் தொடர்புகொள்கிறார். ஸ்ரொக்ஹொல்மில்(Stockholm) தனது தங்குமிடத்தைப்பற்றி அழகி-1 இடம் ஜுலியன் அசங்கே விசாரிக்கிறார். தனது வீட்டில் (Flat) தங்கலாம் மாநாடு நடக்கும் வேளையில் தான் வீட்டில் இருக்கமாட்டேன் நகரத்திற்கு வெளியில்தான் தங்குவேன் என்று அழகி-1 கூறுகிறார்.
மாநாட்டிற்கு சென்ற ஜுலியன் அசாஞ்சே அழகி-1 இன் வீட்டிலேயே தங்குகிறார். ஆனால் அழகி-1 குறிப்பிட்ட தினத்திற்கு ஒரு நாள் முன்கூட்டியே தன் விட்டிற்கு திரும்புகிறார். ஜுலியன் அசாஞ்சேயும் அழகி-1 இரவு ஒரு உணவகத்திற்கு சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வீடுவந்து இருவரும் அழகி-1 இன் சம்மதத்துடனேயே உடலுறவு கொள்கின்றனர். பாவம் ஜுலியன் அசங்கே அவர்கள் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் பாவித்த ஆணுறை கிழிந்து விடுகிறது. மறுநாள் அழகி-1 ஜுலியன் அசாஞ்சேயிற்கு ஒரு விருந்தும் வழங்குகிறார்(உணவுதான்).

அழகி-1 ஒரு பெண்ணுரிமைப் போராளி. பல்கலைக்கழகமொன்றில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றுகிறார். பெண்ணுரிமை உட்படப் பல முற்போக்கு இயக்கங்களில் பங்கு கொள்பவர். பல நாடுகளுக்கும் சென்று வருபவர்.

ஜுலியன் அசாஞ்சே மாநாட்டில் உரையாற்றும் போது அழகி-2 முன்வரிசையில் இருக்கிறார். அவர் அதிக புகைப்படங்கள் ஜுலியன் அசாஞ்சே உரையாற்றும் போது எடுக்கிறார். மாநாட்டின் பின்அழகி-1 அழகி-2ஐ ஜுலியன் அசாஞ்சேயிற்கு அறிமுகம் செய்கிறார். இருவரும் நகரத்தை சுற்றுகின்றனர். அழகி-2 இல் ஜுலியன் அசாஞ்சே மயங்கிவிடுகிறார். நீ அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறாய் என்று ஜுலியன் அசாஞ்சே பிதற்றவும் செய்கிறார். இங்கும் உடலுறவு நடக்கிறது. அழகி-2 இன் சம்மதத்துடன்தான். ஆனால் அழகி-2 ஆணுறை அணியும்படி வேண்டியதை ஜுலியன் அசாஞ்சே மறுத்துவிடுகிறார். அழகி-1ம் அழகி-2ம் பின்னர் சந்தித்துக் கொள்கின்றனர். ஜுலியன் அசாஞ்சே உடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். பெண் உரிமைப் போராளியான அழகி-1 ஆணுறை இன்றி அழகி-2 உடன் உடலுறவு கொண்டதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தாராம். பின்னர் இருவரும் காவல் துறையில் முறையீடு செய்கின்றனர். உங்களையும் என்னையும் போலவே ஜுலியன் அசாஞ்சே இற்கு சுவீடன் தேசத்து கற்பழிப்புச் சட்டத்தைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். பெண் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் ஆணுறை கிழிப்பது ஆணுறை அணிய மறுத்து உறவு கொள்வது எல்லாம் அங்கு குற்றமாம். அழகி-2 தான் ஜூலியன் அசாஞ்சேயில் காமம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அழகிகள் ஜுலியன் அசாஞ்சே நடந்த விததைப் பற்றி பத்திரிகைகளிலும் வெளியிருகின்றனர் ( தங்கள் பெயர் வெளிவராமல்தான்). தங்கள் சம்மதத்துடன் தான் ஜுலியன் அசாஞ்சே தம்முடன் உறவு கொண்டதாகவும் பத்திரிகைகளில் ஒத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

சுவீடனில் விக்கிலீக் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் தன்னிடம் ஜூலியன் அசாஞ்சே மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு தொடர்பாக முக்கிய தகவல் உள்ளதாகவும் அதை வெளியிட சட்டம் தன்னைத் தடுப்பதாகவும் கூறியுள்ளார். சுவீடன் அரச புலன் விசாரணைப் பத்திரங்களின்படி அசங்கே தம்முடன் பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் குற்றம் சாட்டும் இரு பெண்களும் பொய் சொல்கிறார்கள் என்றும் அவர்கள் ஒரு இரகசிய ஏற்பாட்டின் பேரில் செயற்படுகிறார்கள் என்றும் சொல்கிறார் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளர் பி. ஹன்ரிங். மேலும் பி. ஹன்ரிங் தெரிவிக்கையில் இருவரும் பொறாமையுள்ளவர்களென்றும் ஒருவர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் செயற்படுகிறார் என்பதை தன்னால் நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். தனக்கு பிரித்தானிய நீதிமன்றில் சாட்சியமளிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு ஒரு நாடகம் என்று தன்னால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சுவீடனில் உள்ள சட்டம் ஜூலியன் அசாஞ்சேயின் சட்டவாளராக செயல்படும் பி ஹன்ரிங் இத்தகவல்களை வெளியிடத் தடை செய்கிறது. மீறி வெளியிட்டால் அவர் தனது தொழிலை இழக்கவேண்டிவரும்.

பிரித்தானியாவில் நாடுகடத்தும் வழக்கு
சுவிடனில் ஜூலியன் அசாஞ்சேயை நாடுகடத்தும் வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது. 2010 டிசம்பர் 8-ம் திகதி மறைந்திருந்த அசாஞ்சே பிரித்தானிய காவல்துறையினரிடம் சரணடைந்தார். 2011 பெப்ரவரி 24-ம் திகதி பிரித்தானிய நீதி மன்றம் அசாஞ்சே சுவீடனுக்கு நாடுகடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தது. மேன்முறையீடு செய்த அசாஞ்சே உயர்நீதிமன்றிலும் தோல்விகாண்கிறார். 2012 மே மாதம் 30-ம் திகதி பிரித்தானி உச்ச நீதிமன்றமும் அசாஞ்சே நாடுகடத்தப்பட வேண்டும் என உறுதி செய்கிறது. 2012ஆகஸ்ட் 15-ம் திகதி இலண்டனில் உள்ள எக்குவேடர் நாட்டின் தூதுவரகத்தில் அசாஞ்சே அரசிய்ல் தஞ்சம் கோருகிறார். ஆகஸ்ட் 15-ம் திகதி எக்குவேடர் நாட்டு வெளியுறவுத்துறை தமது நாட்டை பிரித்தானிய மிரட்டியதாகக் குற்றம் சுமத்தியது. அடுத்த நால் எக்குவேடர் அரசி அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியது.

எக்குவேடர் ஜூலின் அசாஞ்சேயிற்கு அரசியல் தஞ்சம் கொடுத்தவுடன் பிரித்தானியக் காவல்துறை இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தைச் சூழ்ந்து கொண்டது. நாற்பதிற்கும் அதிகமான காவற்துறையினர் இதில் ஈடுபட்டனர். அசாஞ்சே தூதுவரகத்திற்கு வெளியில் காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் கைது செய்யப்படுவார் என எச்சரித்தனர். அசஞ்சே பொதிகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்தப்படலாம் என்ற சந்தேகத்தில் தூதுவரகத்தில் இருந்து வெளிவரும் பொதிகள் பைகள் போன்றவை இலத்திரனியல் கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றது. சட்ட நடைமுறைகளில் இருந்து தப்ப அசான்சேயிற்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை தப்பு என்கிறார் பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லிய ஹேக். தென் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடாகிய எக்குவேடர் இந்த ராஜதந்திர இழுபறியில் எவ்வளவு தூரம் தாக்கும் பிடிக்கும் என்பதே இப்போது உள்ள கேள்வி. 1984இல் லிபியத் தூதுவரகத்தில் இருந்து செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு பிரித்தானியப் பெண்காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருவரைக் கொன்றததைத் தொடர்ந்து பிரித்தானிய தனது தூதுவராலய நிலச் சட்டத்தை மாற்றிக் கொண்டது.

எக்குவேடர் தூதுவராலயத்தில் இருக்கும் ஜூலியன் அசாஞ்சே அதன் சாளரத்தூடாக அல்லது காணொளி மூலமாக வெளியுலகத்திற்கு ஒரு உரையை ஆற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய அரசு ஜூலியன் அசாஞ்சேயைக் கைது செய்ய எக்குவேடருடனான தனது இராஜதந்திர உறவுகளை முறிக்குமா? பின்னிருந்து இயக்கும் அமெரிக்காவுக்தான் பதில் தெரியும்.

சிரியக் கிளர்ச்சியையும் உலகப் பொருளாதார நெருக்கடியையும் சூடு பிடிக்கும் அமெரிக்கத் தேர்தலையும் ஒரு புறம் தள்ளிவிட்டு உலகம் இரு வாரங்களாக இலண்டனை அவதானித்துக் கொண்டிருந்தது. அழுகுணி கரு மேகங்கங்கள் சூழ்ந்த நகரம் என்று அமெரிக்கர்கள் இலண்டன் நகரத்தைக் கிண்டலடிப்பார்கள். அவர்களே இலண்டன் புது மணப் பெண்போல் காட்சியளித்தது என்றனர்.

இயற்கை அன்னைக்குத் தங்கப் பதக்கம்.

பாக்கிஸ்த்தான் பத்திரிகையின் மூடத்தனமான கருத்துப்படம்

இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அதை மழை கண்ட நேரத்தில் பெய்து குழப்பும் என்பதுதான் முதலில் வெளிவந்த கருத்து. ஒலிம்பிக் நடக்கும் வேளையில் இலண்டன் காலநிலை சீராக இருந்தது. இதுதான் இலண்டன் ஒலிம்பிக்கின் பெரும் வெற்றி. இலண்டனில் ஒலிம்பிக் என்றவுடன் அங்கு பெரும் குண்டுத்தாக்குதல் நடந்தது. இலண்டன் ஒலிம்பிக்கில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதன் முதலாக ஒலிம்பிக் திடலில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டன. இலண்டன் ஒலிம்பில் ஒரு படைத்துறை மயமாக்கப்பட்ட ஒலிம்பிக்காக இருக்கும் என்று குற்றம் சாட்டப்பட்டது. போதாக் குறைக்கு காவலாளிகள் பற்றாக் குறையால் படைத்துறையினர் தொண்டர் சேவை அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் தங்கள் பணிவு கலந்த சேவையாலும் சாதாரண உடையில் செயற்பட்டதாலும் அக்குற்றச் சாட்டு தவிடு பொடியானது. இலண்டன் தெருக்களில் வாகன ஓட்டிக்கள் ஒவ்வோரு சதுர அங்குலத்திற்கும் போட்டி போடுவார்கள். அந்த அளவு வாகன நெருக்கடி நிறைந்த நகரம் அது. அங்கு விளையாட்டு வீரர்களின் போக்கு வரத்து சிரம்மானதாக அமையும் என்று கருதப்பட்டது. சரியான திட்டமிடலாலும் கிழக்கு இலண்டன் பகுதியில் பல போக்கு வரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டதாலும் தொடரூந்துச் சேவைகள் விரிவாக்கப்பட்டதாலும் ஒலிம்பிக்கின் போது போக்குவரத்து சீராக நடைபெற்றது.

உற்று நோக்கிய நாடுகள்
கடந்த ஒலிம்பிக்கை நடாத்திய நாடு என்ற வகையில் சீனாவும் அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசிலும் 2012 ஒலிம்பிக் நடத்த பிரித்தானியாவுடன் கடும் போட்டியிட்ட நாடு என்ற வகையில் பிரான்சும் தாம்தான் உலைன் பெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாடு என்ற வகையில் அமெரிக்காவும் இலண்டன் ஒலிம்பிக்கை உன்னிப்பாகக் கவனித்தன. சீன  பீஜிங் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இல்லாத ஒன்று  இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இருந்தது என்கின்றனர் சீனர்கள். இலண்டன் ஒலிம்பிக் விழாவிற்கு ஓர் ஆத்மா சேர்க்கப்பட்டிருந்தது என்றனர் சீனர்கள். பிரெசில் நாட்டுப் பத்திரிகைகள் இலண்டன் ஒலிம்பிக்கை பூரணத்துவத்தை அண்டியது (near perfect) என்று சொல்லி இலண்டன் தமக்கு பெரும் சவால் விடுத்து விட்டது என்கின்றன. பிரெஞ்சு ஊடகங்கள் இலண்டனில் மக்களின் நட்புத்தன்னமையைப் பாராட்டின. ஒரு ஊடகவியளாளர் தான் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தின் போது இலண்டனில் வாழ விரும்புகிறேன் என்றார். ஆனாலும் பிரேஞ்சுப் பத்திரிகைகள் சில தமது மிதிவண்டிப் போட்டியாளர்கள் பிரித்தானியப் போட்டியாளர்களிடம் தோற்றதை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. இலண்டன் தில்லு முல்லு செய்து விட்டது என்கின்றனர். அமெரிக்கப் பத்திரிகைகள் பல இலண்டனைப் புகழோ புகழ் என்று புகழ்கின்றன.

பிரித்தானிய அரச குடும்பம்
ஒஸ்ரேலியர்களுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியவும் கேம்பிரிட்ஜ் இளவரசி கேற்றும் பிரித்தானிய வீரர்களை ஊக்கப்படுத்தியதையும் அவர்கள் வெற்றியடைந்த போது ஆராவரித்து மகிழ்ந்ததையும் கண்டிக்கின்றன. இவர்கள் எமது நாட்டுக்கும் சேர்த்துத்தான் இளவரச இளவரசியாகச் செயற்படுகிறாரகள். எமது நாட்டினதும் வருங்கால அரச அரசியர். அவர்கள் ஏன தமது நாட்டு வீரர்களை ஊக்குவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரித்தானியப் பத்திரிகைகள் அவர்களை மிகச்சிறந்த இரசிகர்கள் என்று புகழ்கின்றன.

செலவீனம்
இலண்டன் ஒலிம்பிக் ஒரு சிக்கனமான ஒலிம்பிக் என்று கூறலாம். பல்லாயிரக்கணக்கானோர் தொண்டர் சேவை அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இலண்டன் ஒலிம்பிக்கிற்கான நிதி பல்வேறு வழிகளில் பெறப்பட்டது. 2006-ம் ஆண்டிலிருந்து நகராட்சிச் சபை வரிகளை இருபது பவுண்களால் அதிகரிக்கச் செய்ததன் மூலம் 625 மில்லியன் பவுண்கள் சேகரிக்கப்பட்டது. இலண்டன் அபிவிருத்தி முகவரகத்திடம் இருந்து இருநூற்றைம்பது மில்லியன் பவுண்கள் பெறப்பட்டது. ஒன்றரை பில்லியன் பவுண்கள் லொத்தர் மூலம் பெறப்பட்டது. மொத்தச் செலவீனம் ஒன்பது பில்லியன்கள். வர்த்தக நிறுவங்களின் விளம்பர்ங்கள் மூலமும் பெருந்தொகைப் பணம் பெறப்படும்.

உன்னதமான முகாமைத்துவம்
பாரிய நிகழ்வுகளைச் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் பிரித்தானியர்களிடம் உண்டு. அத்துடன் நேரம் தவறாமை அவர்களது அடுத்த சிறப்பு அம்சம். மூன்றாவதாக பாதிட்டுக்குள் செலவை கட்டுப்படுத்தும் திறனும் அவர்களிடம் உண்டு. ஒலிம்பிக் ஏற்பாட்டில் பிரித்தானியர்களின் இந்தத் திறமை நன்கு பயன்படுத்தப்பட்டது. நன்கு வெளிப்படுத்தப்பட்டது. பல விளையாட்டுத் துறை விமர்சகர்களும் ஒலிம்பிக் அவதானிகளும் பிரித்தானியா ஒலிம்பிக் போட்டியை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்ததைப் பாராட்டுகிறார்கள். பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் இலண்டன் கடந்த இரு வாரங்களாக விளையாட்டை பல அம்சங்களில் புத்துணர்வூட்டியது( refreshed the game in many aspects) இலண்டன் 2012 ஒரு உன்னதமான ஒலிம்பிக் என்றார்.

வெற்றிடமான கதிரைகள்
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தில் பல இடங்களில் கதிரைகள் வெற்றிடமாக இருந்ததும் பலர் வெளியில் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் தவித்ததும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் பல தனியார் நிறுவங்கள் அந்த கதிரைகளுக்கு உரிய நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் அந்த நிறுவங்களிடமிருந்து பரிசாகப் பெற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக அங்கு வராமல் போனதும் கண்டறியப்பட்டது.

தோல்வி வேண்டியதால் வெளியேற்றப்பட்ட வீரர்கள்
எட்டு பெண் பட்மின்ரன் வீராங்கனைகள் தோல்வியடைவதற்காக விளையாடிமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்படனர். அல்ஜீரிய ஓட்டக்காரர் தான் 1500மீட்டர் ஓட்டப்போட்டியில் வெல்வதற்கு சக்தி வேணும் என்பதற்காக 800மீட்டர் ஓட்டப்போட்டியில் விரைவாக ஓடுவதைத் தவிர்த்தார். இதற்காக அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல் நிலை அன்று சரி இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியமையால் மீண்டும் சேர்க்கப்பட்டார். தென் கொரிய வீரரைத் தாக்கு தனது டுவிட்டரில் எழுதியமைக்காக சுவிஸ் கால்பந்து வீரர் மைக்கேல் மொர்கனெல்லவை அவரது நாட்டு ஒலிம்பிக் குழுவே போட்டியில் இருந்து நீக்கியது. கிரேக்க நீளப்பாய்சல் வீராங்கனையும் இனக் குரோத வாசங்கள் டுவிட் செய்ததால் விலக்கப்பட்டார்.

கண்டனத்துக்கு உள்ளான பிபிசி
இலண்டனைப் புகழும் பல ஊடகங்கள் பிபிசி தொலைக்காட்சிச் சேவை பிரித்தானிய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமையைக் கண்டித்தன. ஒஸ்ரேலியாவில் ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது அந்த நாட்டுத் தேசியத் தொலைக்காட்சிகள் உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் அமைப்பு ரீதியாக எழுந்துள்ளது. பிபிசியின் இணையத் தளத்தில் ஒலிம்பிக்கில் போட்டியிடும் நாடுகளின் பூகோளப்படங்கள் இணைக்கப்பட்டபோது இஸ்ரேலின் தலைநகர் போடாமல் போனதை இஸ்ரேலியப் பத்திர்கைக்கள் கடுமையாகச் சாடின. பல இசுலாமிய இணையத் தளங்களும் பிபிசியின் பாராபட்சத்தைக் கண்டித்திருந்தன.வெள்ளையர் அல்லாதவர்களைப் பிரித்தானிய வீரர்கள் தோற்கடிக்கும் போது பிபிசி அதிக மகிழ்ச்சியடைந்தது என்கின்றன சில இணையத் தளங்கள். அமெரிக்க ஊடகங்கள் பிபிசி பாராபட்சமாக நடக்கவில்லை என்கின்றன.

பொருளாதாரம்
ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு 13பில்லியன் பவுண் பெறுமதியான மதிப்பு உயர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒலிம்பிக்கின் போது இலண்டன் நகரத்தில் பெரும் வாகன நெருக்கடி ஏற்படும் என்ற செய்தி பலமாக அடிபட்டதால் பலரும் இலண்டன் செல்வதைத் தவிர்த்தனர். உல்லாசப் பிரயாணிகளும் இலண்டர் செல்வதைத் தவிர்த்தனர். இதனால் இலண்டன் நகர வர்த்தகர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மேற்கு முனை இலண்டன் நகரில் சில நாடக இசை அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

களத்திலும் சாதித்த பிரித்தானியர்கள்
ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும் போது அந்த நாட்டு வீரர்கள் வழமையிலும் அதிக வெற்றி பெறுவது வழக்கம். பிரித்தானியாவும் அதற்கு விதி விலக்கல்ல. டெனிஸில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. பிரித்தானியர்களுக்குப் பிடித்தமான கால்பந்தாட்டப் போட்டியில் தண்ட உதையில் இங்கிலாந்து தோல்வியடையும் வழமை ஒலிம்பிக்கிலும் தொடர்ந்தது. அதுவும் ஒரு ஆசிய நாடான தென் கொரியாவிடம் பிரித்தானிய அணி தோல்வியைக் கண்டது. இரசிய விளையாட்டுத் துறை அமைச்சர் பிரித்தானியர்களும் சீனர்களைப் போலவே மோசமானவர்கள் என்றார். பிரித்தானிய இரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு மட்டும் ஆர்பரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது அவரது குற்றச் சாட்டு.

பொய்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கள்
இலண்டன் ஒலிம்பிக் தொடங்க முன்னர் பல முனைகளிலும் இருந்தும் பல எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் முகாமை, காலநிலை, பாதுக்காப்பு, போக்குவரத்துத் தொடர்பாக எழுந்தன. அவையாவும் பொய்பிக்கப்பட்டுவிட்டன. பிரித்தானியர்கள் இப்போது தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தம்மைப் பற்றிய தமது மற்றவர்களினதும் கருத்துக்களுக்கு இலண்டன் ஒலிம்பிக் ஒரு திரும்பு முனையாக அமைந்து விட்டதாக பிரித்தானியர்கள் இப்போது கருதுகின்றனர். இந்த வெற்றி மனப்பானம பரவி மற்றத் துறைகளிலும் பிரித்தானியா வெற்றி பெறுமா?

ஒலிம்பிக் தொடர்பான முந்தைய பதிவு:

இலண்டன் ஒலிம்பிக்கும் அரசியலும்

சிரியாவில் ஆட்சியாளர் மாற்றமும் ஆட்சி முறைமை மாற்றமும் வரவேண்டும் என்று மேற்கு நாடுகள் விரும்புகின்றன. 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.

1970-ம் ஆண்டு சிரியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஹஃபீஸ் அல் அசாத் படைத்துறைப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அங்கு தனது படைத்துறைச் சர்வாதிகார் ஆட்சியை நிறுவினார்.  சிரியா நீண்ட காலமாக அவசர காலச் சட்டத்தின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஃபீஸ் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக சிரியாவின் ஹமா நகரத்தில் 1982-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஹஃபீஸ் அல் அசாத் தனது இரும்புக்கரத்தால் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்கினார். 2000இல் ஹஃபீஸ் அல் அசாத் இறந்த பின்னர் அவரது மகன் பஸார் அல் அசாத் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சி திறமையற்றதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் இருக்கிறது

சிரிய மக்களின் எழுச்சி
அரபு நாடுகளில் 2011இன் ஆரம்பப்பகுதிகளில் மல்லிகைப் புரட்சி அடக்கு முறை ஆட்சியாளர்களுக்கு எதிராக எழுந்த போது அது சிரியாவையும் விட்டு வைக்கவில்லை. 2011 மார்ச் 15-ம் திகதியை சிரிய மக்கள் முகவேட்டின் மூலமாக (Facebook) தன்மான நாளாகப் பிரகடனப்படுத்தி தலைநகர் டமஸ்கஸில் சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். சிரியாவின் தென்பிராந்திய நகரான டராவில் நூறுக்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சி லதாக்கியா போன்ற மற்ற பிரதான நகரங்களுக்கும் பரவ மார்ச் 29-ம் திகதி அதிபர் பஸார் அல் அசாத் பதவியில் இருக்க அவரது மந்திரிகள் பதவிவிலகினர். மறுநாள் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பஸார் அல் அசாத் கிளர்ச்சி ஒரு இசுலாமியச் சதி என்று குற்றம்சாட்டினார். பின்னர் முன்னாள் விவசாய அமைச்சர் அதேல் சஃபாரை புதிய ஆட்சியை அமைக்கும்படி பணித்தார். புதிய அரசு கிளர்ச்சிக்காரர்களை திருப்திப்படுத்தவில்லை. கிளர்ச்சி மேலும் வலுப்பெறுகிறது. மாணவர்கள் உட்படப் பலர் கிளர்ச்சியில் இணைந்து கொள்கின்றனர். கிளர்ச்சி பரவுவதையும் தீவிரமடைவதையும் உணர்ந்த பஸார் அல் அசாத் 1963இல் இருந்து நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டத்தை ஏப்ரல் 19-ம் திகதி இரத்துச் செய்தார். கிளர்ச்சிகள் தொடர்ந்ததால் பலர் மேலும் கொல்லப்படுகின்றனர். ஏப்ரில் 29-திகதி அமெரிக்காவும் மே-15ம் திகதி ஐரோப்பிய ஒன்றியமும் சிரியாமீது பொருளாதாரத் தடையை கொண்டு வந்தன. கிளர்ச்சிகள் மேலும் தீவிரமடைய ஜூனில் பல அரச படையினர் கொல்லப்படுகின்றனர்.

2011 ஜுலையில் ஹமா நகரில் பெரிய பேரணி நடந்தது அதில் அமெரிக்கத் தூதுவரும் பிரெஞ்சுத் தூதுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்தனர். மேற்குலக சார்பு அரசுகளைக் கொண்ட சவுதி அரேபியாவும் குவைத்தும் தமது தூதுவர்களை சிரியாவில் இருந்து திருப்பி அழைக்கின்றன. சிரிய அரசு எதிர்ப்பாளர்களை பேச்சுக்கு அழைத்தது பல எதிர்க்கட்சியினர் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். ஹமா நகரில் படையினர் வீடுவீடாகச் சென்று மக்களைக் கைது செய்தும் தாக்கியும் அட்டகாசம் செய்தனர். அதில் 300இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல சிரியர்கள் துருக்கியில் தஞ்சம் புகுந்தனர். துருக்கிய அரசு சிரிய மக்களின் எழுச்சி தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்த ஒரு சிறப்புத் தூதுவரை சிரியாவிற்கு அனுப்பியது. ஆகஸ்ட் 17-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் சிரிய அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமது கரிசனையை வெளியிட்டார். மறுநாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிரிய அதிபர் பஸார் அல் அசாத் பதவி விலக வேண்டும் எனக் கோரிக்கையை விடுத்து அமெரிக்காவில் உள்ள சிரியச் சொத்துக்களை முடக்கினார். ஆகஸ்ட் 22-ம் திகதி பஸார் அல் அசாத் சிரியாவில் 2012 பெப்ரவரியில் பாராளமன்றத் தேர்தல் நடக்கும் என்றும் அதில் பாத் கட்சியினர் பங்கு பெற முடியாது என்றும் அறிவிக்கிறார். சில அரசியல் சீர் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். அரபு லீக்கின் தலைவர் நபீர் எலரபி சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் சென்று பஸார் அல் அசாத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தினார். 2011 செப்டம்பர் 15-ம் திகதி சிரிய எதிர்ப்பாளர்கள் துருக்கிய நகர் இஸ்த்தான்புல்லில் கூடி தமது சிரியத் தேசிய சபை சிரியாவில் மாற்று ஆட்சியை அமைக்கும் என அறிக்கை விட்டனர்.  மேற்குலக பொருளாதாரத் தடையால் ஏற்பட்ட வெளிநாட்டு நாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்க சிரிய அரசு பல பொருட்களின் இறக்குமதி மீது கட்டுப்பாடு விதித்தது. எதிர்க் கட்சிகளின் சிரியத் தேசிய சபை சிரிய மக்களைப் பாதுகாக்கும் படி உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. 2011 ஒக்டோபர் 4-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் சிரியாவிற்கு எதிராக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை சீனாவும் இரசியாவும் இரத்துச் செய்கின்றன.  2011 ஒக்டோபர் 14-ம் திகதி சிரியாவில் 3000இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. 2011 ஒக்டோபர் 24-ம் திகதி அமெரிக்க தனது தூதுவரை சிரியாவில் இருந்து திருப்பி அழைத்தது. அரபு லீக்கிற்கு சிரிய அதிபர் பஸார் அல் அசாத் வழங்கிய உறுதி மொழிகள் பல இன்னும் அவரால் நிறைவேற்றப் படவில்லை.

வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டி
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அங்கு மேற்குலக சார்பு ஆட்சி ஏற்பட்டால் ஆபிரிக்காக் கண்டத்தில் அதிலும் முக்கியமாக அரபு நாடுகளில் ஆதிக்கச் சமநிலை மேற்கு நாடுகளுக்கு பெரும் சாதகமாக அமைந்து விடும் என்று ஈரான், சீனா, இரசியா ஆகிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன.  சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கான படைக்கலன்களும் பயிற்ச்சியும் துருக்கியூடாக வழங்கப்படுகின்றன. மேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு நேரடியாக உதவி இன்னும் வழ்ங்கவில்லை. மறைமுகமாக வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே வழங்கப்படுகின்றன. கிளர்ச்சிக்காரர்களுக்குத் தேவையான படைக்கலன்களோ, நவீன படைக்கலன்களோ மேற்குலக நாடுகளால் வழங்கப்படவில்லை. அவை தமக்கு வேண்டப்படாதவர்களின் கைகளிற்குப் போய்ச் சேர்ந்து விடுமோ என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன. சிரியாவிற்குத் தேவையான படைக்கலன்களை இரசியா விற்பனை செய்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அப்பாவிச் சிரியர்கள் கொல்லப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள் பலத்த சொத்து அழிவு ஏற்படுகிறது. 2012 பெப்ரவரி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மொரக்கோ கொண்டு வந்த சிரியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை இரசியாவும் சீனாவும் இணைந்து இரத்துச்(veto) செய்தன


சிரியக் கிளர்ச்சியாளர்களிடையே போட்டி
சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர். எந்த ஒரு விடுதலை அமைப்பிலும் முதல் ஏற்படுவது பிளவா? அவர்களுக்கு உதவுபவர்கள் போதிய உதவியைக் கொடுக்காமல் மட்டுப்படுத்த உதவியைக் கொடுத்து மோதல்களை தீவிரபடுத்துவதில் நீண்டகால இழுத்தடிப்பிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர். விடுதலை இயக்கங்களிடை ஏற்படும் பிளவுகள் தனியே வெளியில் இருந்து மட்டும் உருவாக்கப்படுவதில்லை.  உள்ளிருந்தும் உருவாகும். அம்மான், பாரிஸ். பிரஸல்ஸ் ஆகிய நகரங்களில் பிளவடைந்த சிரியக் கிளர்ச்சிக்காரர்களிடை ஒற்றுமையை ஏற்படுத்த பல முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிரியத் தேசிய சபை ஒரு கதிரைக் கனவான்களின் கும்பல்; அது களத்தில் இறங்கிப் போராடுவதில்லை என்று மற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதனால் இவர்களிடம் இருந்து சிலர் பிளவு பட்டு சிரிய தேசப்பற்றாளர் குழுவை ஆரம்பித்தனர். சிரியத் தேசிய சபையினர் ஒரு படைத்துறைச் சபையை அமைத்து அது ஒரு படைத்துறை அமைச்சாக செயற்படும் என்றனர். சுதந்திர சிரியப் படையினர் இது தம்முடன் கலந்து ஆலோசிக்காமல் செய்யப்பட்டது என்று முரண்படுகின்றனர். சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் செயற்படுக் குழுவினரிடை மட்டும்Martyr Hisham Brigade; the Ibn Malik Martyrs Brigade; the Maarratt al-Numan Martyrs Brigade; the Salhauddin Brigade, the Fallujah Brigade என்னும் ஒன்றுடன் ஒன்றுமையில்லாத குழுக்கள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வாழும் சிரிய மருத்துவர்கள் தாம் ஒரு அமைப்பை உருவாக்கி காயப்படும் சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுகின்றனர்.

அரச படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மத்தியிலும் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தீவிரமாகப் போராடுகின்றனர். 26-06-2012இல் தலைநகர் டமஸ்கஸில் பெரும் மோதல் வெடித்துள்ளது. அத்துடன் துருக்கிக்கு தப்பிச் செல்லும் சிரிய அரச படையினரின் தொகைகளும் அதிகரித்து வருகிறது.


அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப் படை!
சுதந்திர சிரியப் படையினர் சிரிய ஆதரவுக் குழு ஒன்றை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைத்து அங்கு தமக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகச் செயற்படவேண்டும் என்று வேண்டி வருகின்றனர். அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ அண்மைக்காலங்களாக சுதந்திர சிரியப் படையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். சிரிய அரச படையில் இருந்து தப்பி ஓடும் வீரர்களில் பலர் இந்த சுதந்திர சிரியப் படையினருடன் இணைந்து வருகின்றனர். இந்த சுதந்திர சிரியப் படையினருடன் அமெரிக்க அரச அதிகாரிகள் அதிக கவனத்துடனும் சந்தேகத்துடனுமே தொடர்புகளை வைத்திருக்கின்றனர். இவர்கள் மத்தியில் அல் கெய்தா போன்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் ஊடுருவிகள் இருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

திரு சக்காவின் சமரச முயற்ச்சி
சுதந்திர சிரியப் படையைச் சேர்ந்த திரு சக்கா (Mr. Sakka) முன்னாள் சிரியப்படை அதிகாரிகளையும் வெளிநாடுகளில் வாழும் சிரியப் பிரமுகர்களையும் இணைத்து சுதந்திர சிரியப்படையை ஒரு ஒழுங்கான கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளார். திரு சக்கா பல மேற்கு நாடுகளின் உளவாளிகளையும் சந்தித்துள்ளார். அத்துடன் தனது படையில் உள்ள அல் கெய்தா மற்றும் ஹமாஸ் ஆதரவாளர்களை விலத்துவதிலும் ஈடுபட்டுள்ளார். திரு சக்காவிற்கும் முன்னாள் நேட்டோ அதிகாரி Brian Sayersருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திரு சக்கா பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துமுள்ளார். இதனால் இவரை ஒரு மேற்குலகக் கைக்கூலி என இலகுவில் இனம் கண்டுகொள்ளலாம். இதனால் ஒரு சுதந்திர தேசியப் படையினர் தலைமையில் சிரியப் புரட்சி வெற்றி பெறுவதை இரசியாவோ சீனாவோ விரும்பாது எனக் கூறலாம். அவை மற்ற இயக்கங்களை தமது கைக்கூலிகளாக்க முனையலாம். இது சிரிய மக்களுக்குப் பாதகமாகவே அமையும்.


சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவுக என்கிறார் கொண்டலினா ரைஸ்
அமெரிக்க முன்னாள் அரசுத் துறைச் செயலர் கொண்டலினா ரைஸ் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் கொடுத்து உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதாலும் அவர்களிடை அல்கெய்தா மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவி உள்ளனர் என்பதாலும் அவர்களுக்கு பராக் ஒபாமா நிர்வாகம் படைக்கலன் கொடுக்கத் தயங்குவது தவறானது என்கிறார் கொண்டலினா. கொண்டலினாவின் அறிக்கை திட்டமிட்டு அமெரிக்க மக்களையும் மற்றும் சீனா இரசியா போன்ற பஷார் அல் அசாத் ஆதரவு நாடுகளினதும் நாடிகளைப் பிடித்துப் பார்க்கும் ஒரு முயற்ச்சியாக இருக்கலாம்.

இனிவரும் மாதங்களில் மேற்கு நாடுகள் சிரியாவில் தமது தலையீட்டை அதிகரிக்கும் என்பதை கொண்டலினா ரைஸின் அறிக்கையும் துருக்கி தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துள்ளுவதும் எடுத்துக் காட்டுகின்றன.

நுண் கிருமிகள்(bacteria) எங்கும் இருக்கின்|றன. அவற்றால் ஏற்படுக் ஆபத்துக்கள் அதிகம். அவை அதிகம் இருக்கும் இடங்களை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நாம் சவரம் செய்யும் ரெஸர், (Razor) பற்தூரிகை (toothbrush) என்பவற்றில் அதிக நுண்கிருமிகள் இருக்கின்றன. வீட்டுப் பொருட்களில் கணனி மௌஸில் அதிகம் கிருமிகள் இருக்கின்றன.

ஈரலிப்பான குளியலறையில் இருக்கும் சவர அலகில் (Razor) ஐந்து மில்லியன் நுண்கிருமிகள் இருக்கின்றன. நல்ல வெட்பக் கால நிலையில் இவை இருபது மில்லியன்களாக அதிகரிக்கும். பற்தூரிகை (toothbrush) கைப்பிடிகளில் இதே அளவு நுண்கிருமிகள் இருக்கின்றன.

ஒரு கைப்பேசியில் ஆயிரம் வரை நுண்கிருமிகள் இருக்கின்றன. ஒரு கழிப்பறை இருக்கையில் (toilet seat) இருப்பதிலும் பார்க்க ஐந்து மடங்கு நுண்கிருமிகள் கணனிவிசைப்பலகையில்(Keyboard) இருக்கின்றன.

Super market Trolley இன் கைப்பிடியிலும், மாடிகளின் ஏறும் போது கைப் பிடிக்க வைத்திருக்கும் இரும்புக் கம்பிகளிலும் நிறைய நுண்கிருமிகள் இருக்கின்ற்ன.

தலைவாரிகள்(சீப்புக்கள்)
வாரந்தோறும் சுடுநீரில் கழுவ வேண்டும். ஒரு மில்லி மீற்றர் தடிப்பான தலைமுடி சிக்குப்பட்டிருந்தால் அதில் 50,000 வரையிலான கிருமிகள் இருக்கலாம்.

காலணிகள்
250 இருந்து 500 மைல்கள் நடந்தவுடன் மாற்றவேண்டும். பழையகாலணிகளில் கழிப்பறையில் இருக்கும் கிருமிகளிலும் பார்க்க 100 மடங்கு அதிகமான கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு.

பற் தூரிகை(toothbrush)
பற்தூரிகைகள் மூன்று மாதத்திற்கு ஒருதடவை மாற்ற வேண்டும். அதற்கு மேல் பாவித்தால் அதன் பயன்படுதன்மை குறைகிறது.

Bras

உங்கள் Bra களை நாற்பது தடவை துவைத்த பின் பாவிக்கக் கூடாது அல்லது மூன்று மாதங்களுக்கு மேலும் பாவிக்கக் கூடாது. அதன் பின் அங்கு அதிக கிருமிகள் சேரும் அத்துடன் அதன் காப்புத் தன்மையும் குறைந்துவிடும். Department Of Sport And Exercise Science at the University of Portsmouth இன் கணிப்பின் படி ஒரு பெண் ஒரு மைல் அசைந்தால் அவளது மார்பு 135 மீட்டர் குலுங்குமாம். ( எப்படிக் கணக்குப் பண்ணினாங்க?)

படுக்கைகள்
வாரந்தோறும் கழுவ வேண்டும். எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு ஒருதடவை உங்கள் படுக்கைகளைப் புதுப்பிக்க வேண்டும். எமது படுக்கையில் ஒரு இரவில் அரைப் பைந்த் வேர்வையை நாம் வெளிவிடுகிறோம். ஆண்டு ஒன்றிற்கு ஒரு இறாத்தல் தோலை உதிர்க்கிறோம். house dust mitesஎன்னும் சிறு பூச்சிகள் 10,000 எமது படுக்கையில் இருக்கின்றன. அவை இருபது இலட்சம் மலம் கழிக்கின்றன.

துவாய்கள் (bath towels)
வாரந்தோறும் துவைக்க வேண்டும்.

தலையணைகள்
ஒவ்வொரு மூன்று மாதமும் துவைக்க வேண்டும். ஆறு மாதங்களில் புதிதாக மாற்ற வேண்டும்.
அங்குள்ள கிருமிகளின் கழிவுகளை சுவாசிப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.

ஸ்பொன்ஞ்(Sponges)
தினசரி கிருமி நாசினி மூலம் துப்பரவாக்க வேண்டும். ஒரு நாள் பாவித்தவுடன் ஒரு பில்லியன் கிருமிகள் அங்கு வசிக்கும்.

ஒரு நாய்க்கு இருக்கும் உணர்வு கூட சில தமிழர்களுக்கு இல்லை.

சோழப் பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்ந்த பிரெஞ்சு வரலாற்று நிபுணர்கள் சோழர்கள் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து கிடைத்த செல்வம் பெரும் மூலதனமாகத் திரளாமல் அவற்றை பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி கோவில்கள் கட்டுதல் யாகங்கள் செய்தல் போன்றவறில் வீணாக்கினர்கள் என்கிறார்கள்.

இன்றைய தமிழர்களின் அடிமைகளாக தெலுங்கர்களாலும் மலையாளிகளாலும் கன்னடர்களாலும் ஆளப்படுவதற்குக் காரணம் அவர்கள் சாதி அடிப்படியில் பிளவு பட்டு நிற்பதே. இந்த சாதியம் எப்படித் தமிழர்களிடை வந்தது என்று பார்த்தால் அதுவும் பூனூலில்தான் முடியும்.

முள்ளிவாய்க்கால் பின்னடைவிற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தாலும் அதிலும் பல பூனூல்களைக் காணலாம். ராஜபக்சவின் கையாளாக இந்து ராம். ராஜபக்சவிற்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய சோ. ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் சுப்பிரமணிய சுவாமி. ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும் என்று எத்தனை இந்தியக் கோவில்களில் பூசைகள் யாகங்கள் நடந்தன?

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழக்த்தில் உரையாற்ற வந்த ராஜபக்சவை பலத்த போராட்டத்தின் பின்னர் தமிழர்கள் விரட்டியடித்த பின்னர் ராஜபக்ச தமிழர்கள் வாழும் நாட்டில் காலடி எடுத்து வைக்க முடியுமா என்ற கேள்வி இருந்தது. பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு ராஜபக்ச அழைக்கப்பட்டது எப்படி? பிரித்தானிய அரசியின் கீழ் பிரித்தானிய அரசும் பொதுநலவாய நாடுகளும் இருக்கின்றன. ராஜபக்சவிற்கான அழைப்பை பிரித்தானிய அரசியும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசும் அனுப்பவில்லை. பிரித்தானிய அரசு மஹிந்த ராஜபக்ச அரசியின் வைரவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை. அவர் வருவதால் பிரித்தானியா வாழ் தமிழர்கள் கொதிப்படைவார்கள் என்பதை பிரித்தானிய அரசு அறிந்திருந்தது.  பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மட்டும் மஹிந்த ராஜபக்ச அரசியின் வைர விழாக் கொண்டாட்டத்தில் ராஜபக்ச வரவேண்டும் என அடம்பிடித்தது. இதனால் மஹிந்த ராஜபக்சவிற்கான அழைப்பை அனுப்புவதில் சில நாட்கள் ஒரு இழுபறி நடந்தது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் அடுத்த ஆண்டு இலங்கையில் அதன் மாநாடு நடக்கவிருப்பதால் மஹிந்தவிற்கு அழைப்பு அனுப்பாவிடில் பொதுநலவாய நாடுகளிடை பெரும் சிக்கலை அது உருவாக்கும் என்று அடம் பிடித்தது. இறுதில் பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகம் மஹிந்தவிற்கு அழைப்பை அனுப்பியது. அத்துடன் நிற்கவில்லை அது. ஒரு பொருளாதார மாநாட்டையும் ஜூன் 6-ம் திகதி கூட்டி அதில் ராஜபக்சவைக் கலந்து உரையாற்ற ஏற்பாடு செய்திருந்தது.

மஹிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு ஏன் அழைக்கப்பட்டார் என்று ஆராய்ந்தால் அங்கும் ஒரு பூனூல் தான் தட்டுப்படுகிறது. பொது நலவாய நாடுகளின் பொதுச் செயலராக இருப்பவர் கமலேஷ் ஸர்மா.

பிரித்தானிய அரசியின் வைரவிழாவிற்கு மஹிந்தவின் வருகையை பிரித்தானியா வாழ் தமிழர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் அவரின் வருகை தொடர்ப்பான தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. முதலில் பிரித்தானியப் பிரதம மந்திரியின் பணிமனை முன்பும் பின்னர் ஹீத்துரூ விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் அரசியின் வைரவிழாவைக் குழப்ப தமிழர்கள் விரும்பவில்லை. இரு ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் ஒழுங்கு செய்யவில்லை. ஜூன் 5-ம் திகதியுடன் அரசியின் வைரவிழாக் கொண்டாடங்கள் நிறைவு பெற்றன. ஜூன் 6-ம் திகதி பொது நலவாய நாடுகளின் பணிமனை ஒழுங்கு செய்த பொருளாதர மாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பெருமளவில் ஒழுங்கு செய்தனர். இலண்டனுக்கு வெளியிலும் வேல்ஸ், ஸ்கொட்லாண்ட் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களும் வர ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஐரோப்பாவில் இருந்தும் பெருமளவு மக்கள் இலண்டன் வர ஏற்பாடு செய்யப்பட்டது. சிலர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்தும் கனடாவிருந்தும் வர ஏற்பாடுகளைச் செய்தனர். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்பதை உணர்ந்த ஸ்கொட்லண்ட்யார்ட் பாதுகாப்பு நிலைகளில் உள்ள சிரமங்களை பொது நலவாய நாடுகளின் பணிமனைக்கு எடுத்துக் கூறியது. இதனால் ஜூன் மாலை 5-ம் திகதி மாலை பொது நலவாய நாடுகளின் பணிமனை மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவிருந்த காலை நிகழ்ச்சிகள் யாவும் தவிர்க்க முடியாத் காரணத்தால் இரத்துச் செய்வதாக ராஜபக்சவின் பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்தது. அதன் நிகழ்ச்சி நிரலை திருத்தி அமைத்தி வெளிவிட்டது. அதில் உள்ள பங்கு பற்றுவர்களின் பெயர்களில் மஹிந்த ராஜபக்சவின் பெயர் இடம் பெறவில்லை. ஆனால் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டபடி நடக்கும் என்றனர்.

இரசியாவின் பிரபல கணனி வைரஸ் ஒழிப்பு நிறுவனமான Kaspersky Lab ஈரான் அணு ஆராய்ச்சி நிலையத்திலும் எண்ணெய் உற்பத்தித் துறையிலும் நடந்த வைரஸ் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் நாடாக ஈரான் கருதப்படுகிறது. அங்கு 185 வைரஸ் தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக இஸ்ரேலில் 95 தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன.

ஈரானில் மே மாதம் இறுதிப் பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதலாளிகள் தங்கள் வைரஸ்களை PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை தாக்கக் கூடிய வகையில் உருவாக்கியிருந்தனர். அக்கோப்புக்களை text வடிவத்தில் சிறிய கோப்புக்களாக மாற்றக்கூடியவையாக அவ் வைரஸ்கள் அமைந்திருந்தன. மின்னஞ்சல் போன்ற மேலும் பல முக்கிய கோப்புக்களை வேட்டையாடக் கூடியவையாகவும் அவை அமைந்திருந்தன. அந்த வைரஸ் flameஎனப் பெயரிடப்பட்டது. இவை ஒலிப்பதிவு, கணனித் திரையை படப்பதிவு செய்தல், கணனி உரையாடல்களை பதிவு செய்தல் புளூரூத் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தல் போன்ற புதிய திறமைகளைக் கொண்டது. இந்த வைரஸின் அளவு 20MP. Flame வைரஸை உருவாக்கியவர்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய பிராந்தியங்களில் இருந்து 80 நாடுகளில் இருந்து இந்தவைரஸ் மூலம் கணனிகளைக் கட்டுப்படுத்தினர். PDF, AutoCAD ஆகிய வடிவங்களில் உள்ள கோப்புக்களை இலக்கு வைத்தமை ஈரானில் உள்ள தொழில் நுட்ப வடிவமைப்புக்களைத் திருடுவதற்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

flame வைரஸின் கட்டளை-கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு (command-and-control infrastructure) பல காலமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. flame வைரஸின் தன்மைகளையும் அது ஈரானில் புகுத்தப்பட்ட விதங்களைப் பார்க்கும் போது அவை ஒரு வல்லரசு நாட்டில் இருந்துதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் இரசிய Kaspersky Lab  நிபுணர்கள்.

இரசிய Kaspersky Lab  நிபுணர்கள் sinkholing என்னும் முறைமையைப் பாவித்து flame வைரஸின் தன்மைகளை ஆராய்ந்தனர். இதன் அளவும் சிக்கலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைந்திருக்கின்றன(Flame virus is unprecedented in size and complexity.) என்கின்றனர் அவர்கள். இந்த வைரஸ் லெபனான் ஈராக் ஆகிய நாடுகளையும் தாக்கியிருந்தன. மைக்குரோசொஃப்ர் நிறுவனம் தனது விண்டோவில் உள்ள சிறு பிழையை(bug) flame பயன்படுத்திக் கொண்டதாகவும் அதைச் சரிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அணு உலைகளை Stuxnet வைரஸ் தாக்கிய விதம்
ஈரானின் Natanzஇல் இருக்கும் அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள கணனிகள் வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படும் முகமாக இணைய வெளியுடன் தொடர்பற்ற முறையில் இயங்குகிறது. வெளியில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ அங்கு இணைய வெளித் தொடர்புகளை ஏற்படுத்த முடியாது.

Siemens S7

 அங்கு வேலை செய்யும் விஞ்ஞானி ஒருவரின் மடிக் கணனியில் Pen Drive மூலம் Stuxnet வைரஸை ஒரு இரட்டை உளவாளி புகுத்துகிறார். அந்த மடிக்கணனியில் இருந்து அணு ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மற்றக் கணனித் தொகுதிகளுக்கு புளூருத் மூலமாக பரவுகிறது. பல கணனிகளை Stuxnet தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. முக்கியமாக Siemens S7 என்னும் கணனித் தொகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. Siemens S7 என்பது பெரிய தொழிற்சாலைகளில் பொறிகளின் இயக்கங்களை உணர்ந்து அவற்றை உரிய வகையில் இயங்கச் செய்யும்.

யூரேனியம் பதனிட சுற்றும் குழாயகள்

 Siemens S7 யூரேனியம் பதனிட சுற்றிக் கொண்டிருக்கும் மையநீக்கிக்(centrifuges) குழாய்களை அளவிற்கு மிஞ்சிய வேகத்தில் சுற்றும் படி கட்டளை இடுகின்றன. இதனால் ஆயிரம் வரையிலான மையநீக்கிக்(centrifuges) குழாய்கள் சிதைவடைகின்றன. ஈரானிய விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைகின்றனர். ஈரானிய ஆட்சியாளர்களுக்கு தமது விஞ்ஞானிகளின் திறமையில் சந்தேகம் ஏற்படுகிறது