Archive for the ‘இல்லறம்’ Category


மேலை நாடுகளில் உடலுறவு வேறு திருமணம் வேறு என்பது போல் ஆண் பெண் உறவுகள் மாறி வருகிறது. பலர் திருமண பந்தத்தை வெறுக்கிறார்கள்.பெட்ரண்ட் ரஸல் என்னும் அறிஞர் கலாச்சாரம் என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனது தந்தையையாரென்று அறிந்து கொள்ளும்படி பார்த்துக் கொள்வது தான் என்றார். ஆனால் இப்போது சில நாடுகளில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒன்றிற்கு தனது தந்தை யாரென்று தெரியாத நிலைமை காணப்படுகிறது.

School of Family Life at Brigham Young University, in Utah வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தம்பதிகளிடை செய்த ஆய்விகளின் படி தங்கள் உடலுறவை திருமணத்திற்கு பின்வரை தள்ளி வைத்த தம்பதிகள் அப்படித் தள்ளி வைக்காமல் திருமணத்தின் முன் உடலுறவு கொள்ளும் தம்பதிகளிலும் பார்க்க் சிறந்த தம்பதிகளாக காணப்படுகின்றனர்.

உடலுறவை திருமணத்திற்கு பின்வரை தள்ளி வைத்த தம்பதிகள் மற்றவர்களிலும் பார்க்க 22% மேம்பட்ட உறவு உடையவர்களாகவும், உறவில் 20% அதிக திருப்தி உள்ளவர்களாகவும், உடலுறவுத் திருப்தி 15% அதிகம் பெறுபவர்களாகவும், தம்பதிகளிடையான தொடர்பாலில் 12% சிறந்தவர்களாகவும் காணப்படுகின்றனராம்.

திருமணத்தின் முன் உடல் உறவு வைத்துக் கொள்பவர்கள் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் வைத்துக் கொள்வதால் மற்ற புரிந்துணர்வுகளை வளர்பதிலும் ஒருவருக்கேற்ப மற்றவர் தம்மை மாற்றிக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதைக் கோட்டை விட்டு விடுகின்றனர்.

திருமணத்தின் முன் சிறந்த தொடர்பாடல், புரிந்துணர்வு, விட்டுக் கொடுத்தல், ஒருவருக்கு ஒருவர் இணங்க மாறுதல் போன்றவைகளை வளர்த்தால் தாம்பத்தியம் சிறப்பாக நீடிக்கும்.